கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 62-0527 1மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவில் இங்கிருப்பது அருமையானதாகும். ஆகவே நான்... இந்த விதமான இவை யெல்லாம் ஏன் என் மீது விழுந்ததென்றால், ஏனெனில் நான்... இக்காலை என் சகோதரனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந் தேன், ஒரு நாளில் இரண்டு ஆராதனைகள் எடுப்பது எப்படிப்பட்ட ஒன்று என்பதையும் நானறிவேன். என்னுடைய தொண்டையில் சிறு “கரகரப்பு இருந்தது. நான் நிறைய பிரசங்கிக்கின்றேன். நான் நகரத்துக்குள்ளாக, இந்த பள்ளத்தாக்கில், வந்த உடனேயே, இங்கே என்னுடைய மேல் வாயில் ஒரு விதமான... அதுதான், அவர்கள் அதை... இங்கே இந்த பள்ளத்தாக்கில் உள்ள இந்த தட்பவெப்ப நிலையானது என் தொண்டையை மிக மோசமாக வீங்கி இருக்கும்படிக்குச் செய்து விடுகிறது. இதனால் நான் இந்த பள்ளத்தாகில் இருக்கும் வரைக்கும் விழுங்கிக் கொண்டே இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு நான் சென்று விட்டால் அது மறைந்து விடுகின்றது. திரும்பி வந்தால், அது மறுபடியுமாக வந்து விடுகிறது. 2சகோதரன் நெவிலுக்காக ஒருவித கனிவான உணர்ச்சியைக் கொண்டவனாக உள்ளேன், இங்கே இருக்கின்ற வாலிப பையன் களாகிய உங்களில் சிலரைக் காட்டிலும் நாங்கள் சற்று குறை வான தூரம்தான் பாதையில் செல்லப்போகிறோம் என்பதை அறிந்தவர்களாக உள்ளோம், ஆகவே நாங்கள் மற்றொரு வித மாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே இன்னும் அதிக மாக நாட்கள் வரத்துவங்குகையில், தீய நாட்களும் சமீபமாய் வருகையில் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒருவிதமான உணர்வைக் கொண்டவர்களாக இருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், சரியாக இப்பொழுது நாங்கள் கடந்து செல்லப் போகிறோம் என்பதை அறிந்தவர்களாக இருக்கிறோம். அடுத்த ஞாயிறு இரவு சகோதரன் போசே இங்கு இருக்கப்போகின்றார் என்று நம்புகிறேன், உங்களுக்கு தெரியும் என்று நான் எண்ணினேன். நான்... உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? ஆம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை. அவர் தன்னுடைய அயல்நாட்டு ஊழியங்களைக் குறித்து வைத்துள்ள ஒரு படக்காட்சியை காண்பிக்க அவர் விரும்புகிறார்... சிக்கா கோவிற்கு வருவதைக் குறித்து அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஒரு - ஒரு சொப்பனம் உண்டானது. பாவம், அந்த சிறு நபர் ஒரு முறை மிகவும் அமைதி குலைந்தது போல உணர்ந்தார், அவருடைய செய்தி நிறைவேறவில்லை எனக் கூறினார். அப்பொழுது நான், கர்த்தர் அதை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டார் என்று அவருக்கு விளக்கினேன். அப்பொழுது அவர் அதைப் புரிந்து கொண்டார். 3அப்பொழுது கர்த்தர் அவருக்கு வேறொரு சொப்பனத்தை அளித்தார். அப்பொழுது அவருக்கு வியாக்கியானம் வந்த போது, அவர் என்ன செய்ய வேண்டும் என்றும், எங்கு செல்ல வேண்டும் என்றும் அவருக்குக் கூறினேன். அப்பொழுது அவர் அங்கே சென்றார், என்னே, ஓ, என்னே, கென்யா, டாங்கான்ஷிகா மற்றும் உகாண்டா மற்றும் அங்கே உள்ள அந்த தேசங்கள் - அந்த ஊழியங்களில் தேவன் அவர்களுக்கு செய்தது மிகவும் அற்புத மான ஒன்றாகும். அங்கு இருக்கின்ற அந்த ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் மத்தியில் கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை காண்பிக்க, அந்த படக்காட்சியை அவர் காண்பிக்க விரும்புகிறார். கர்த்தருக்கு சித்தமானால், ஜனவரி மாதத்தில், நான் அங்கே சென்று அவரோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன்... அங்கே நான் மறுபடியுமாக ரோடேஷியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்குள் செல்லும் முன்னதாக அந்த பழங்குடியினர் மத்தியில் ஒரு கூட்டம் நடத்துவதற்காக... 4ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இந்த வருகின்ற ஞாயிற்றுக்கிழமை. சகோதரன் ஜோசப்புகாக ஊக்கமாக ஜெபி யுங்கள், அவர் ஒரு அருமையான சகோதரனாவார். அவருடைய ஐக்கியம் மற்றும் இன்னும் பிற காரியங்களைக் குறித்து நான் அவரை அதிகமாகப் பாராட்டினேன். அடுத்ததாக, வருகின்ற இந்த வாரம் நாங்கள் புறப்படு கிறோம்... சதர்ன் பைன்ஸ், பிறகு தெற்கு கரோலினாவிலுள்ள கொலம்பியாவிற்கு செல்கிறோம்; பிறகு அங்கிருந்து மேற்கு கடற்கரை, கெள பேலஸ் செல்கிறோம், பிறகு கிராஸ் பள்ளத் தாக்கிற்கு செல்கிறோம்; அங்கிருந்து பிறகு வோர்ல்ட் ஃபேர் சென்று திரும்பி மறுபடியும் ஓரிகானுக்கு வருகிறோம்; பிறகு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குச் சென்று இன்னும் பல இடத்திற்குச் செல்கிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், கர்த்தர் ஏற்பாடு செய்வாரானால், வருகின்ற கோடை காலத்தில் இங்கு கூட்டங்களை நடத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். 5நான் திரும்பிச் செல்லும் முன்னர் சில கேள்விகள் கேட்டால் நல்ல ஒரு காரியமாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் கேள்விகள் கேட்கும்போது ஜனங்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே அங்குள்ள இந்த சிறு மந்தையுடன் இருதயத்தோடு இருதய ஆலோசனையை, நம்முடைய மனதைத் திறந்து பேச, உங்களுடன் நான் இன்றிரவு பேசலாம் என்று எண்ணினேன். சில சமயங்களில் ஒரு பிரசங்கத்தை பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் இந்த விதமான ஒன்று- ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்று அதிக நன்மை பயக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வாரம், ஜெபத்திற்கு அவர் பதிலளித்ததை நாம் கண்டதற்காக நாங்கள் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம், அது மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கடைசி காலம் மற்றும் நேரம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டு, ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கின்றது என்பதை அறிந்தவர்களாக இருக்கிறோம். ஒருவன் சிந்தனைவாதி யாக இருந்தாலொழிய, உண்மை என்பதை அறிய ஒருவனும் இல்லை. நாம் அறிந்துள்ளபடி, காலங்களினூடாக அதை நாம் நோக்கி பார்க்கிறோம், ஒவ்வொருவரும் அதை கவனித்துள்ளனர். ஆனால், இப்பொழுது மிக அதிகமான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரி என்பதை நாம் அறிவோம், அது தொலைவில் இருக்க முடியாது. ஆகவே, இப்பொழுது இன்னும் சிறிது நேரத்தில் அதைக் குறித்து சிலவற்றை நான் ஒருக்கால் பேசலாம். 6ஆனால் இப்பொழுது நாம் அதைத் துவங்குவதற்காக, ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை நாம் சற்று தாழ்த்துவோமாக. நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், தேவனுக்கு முன்பாக நாம் ஜெபத்தில் நினைவுகூறப்பட விரும்பி நம்முடைய இருதயங்களில் ஏதோ ஒன்று இருக்குமா என்று நான் ஆச்சரிய முறுகிறேன். அப்படி இருக்குமானால் உங்கள் கையை மாத்திரம் உயர்த்துங்கள். அவர் புரிந்துகொள்வார். அதைக் குறித்த எல்லா வற்றையும் அவர் அறிந்திருக்கிறார். ''தேவனே, என்னை நினவு கூறும்'' என்று நீங்கள் கூற விரும்புகிற சில விண்ணப்பம் மாத்திரமே. கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப் பாராக. 7எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கும், அவருடைய கிருபைக்கும் முன்பாக தைரிய மாக வந்து எங்களுக்கு தேவையாயுள்ள எந்த ஒரு விண்ணப் பத்தையும் கேட்க நீர் தாமே கிருபை கூர்ந்து எங்களை கட்டளை யிட்டிருக்கின்றீர். அந்த கிருபாசனத்தை அணுகிக்கொண்டிருக் கிறவர்களாக இன்றிரவு நாங்கள் வருகிறோம். நாங்கள் இரண்டு பேராவது மூன்று பேராவது உம்முடைய நாமத்தினாலே ஒன்று சேர்ந்து கூடியிருக்கையில், எங்கள் நடுவிலே நீர் இருக்கின்றீர் என்று நீர் எங்களுக்கு கூறியுள்ளீர். ஆகவே நாங்கள் விரும்பு கிறவைகளை கேட்டு, அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம் - நாங்கள் அதைப் பெற்றுக் கொள்வோம் என்று நாங்கள் விசுவாசித்தால் மாத்திரமே அதை நாங்கள் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்நாளின் நிலைமைகளையும், சபை மற்றும் மக்களின் நிலைமைகளையும், உம் முன்பு இருக்கின்ற எங்கள் விண்ணப்பங் களையும் நீர் அறிந்திருக்கிறீர். இப்பொழுது, கர்த்தாவே, நீர் தாமே கரங்களை கண்டீர். மக்களின் இருதயங்களையும், அவர்களுடைய விருப்பங்களையும், அவர்களுடைய தேவைகளையும் நீர் அறிந்திருக்கிறீர். அந்த நேரமானது கிட்டே நெருங்குகிறதென்று நாங்கள் காண்கிறோம், அது இப்பொழுது மிக அருகாமையில் ஒன்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது, அந்த மகத்தான மேகங்கள் நிலைகொள்கின்றன. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்க தரிசிகள் உரைத்த காரியங்கள், இக்காலம் வரை அது சம்பவிக்க வில்லை என்று நாங்கள் பார்க்கிறோம், ஆனால் அது சரியாக எங்கள் நாட்களில் இங்கே நிறைவேறுவதை நாங்கள் காண்கிறோம். 8பிதாவே நாங்கள் கேட்கின்ற இந்த ஆசீர்வாதங்களை நீர் தாமே எங்களுக்கு அருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். வியாதியஸ்தரையும் உபத்திரவப்படுகிறவர்களையும் சுகப்படுத்தும். பரிசுத்த ஆவியின் ஜீவிக்கின்ற வல்லமையையும், நாங்கள் எதைக் கேட்கிறோமோ அதை விசுவாசிக்கின்ற ஜீவிக்கின்ற விசுவாசத் தை உம்முடைய சபைக்கு திரும்ப அளியும் கர்த்தாவே. அதைப் பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஏனெனில் நாங்கள் கேட்கிறதற்கு முன்னரே எங்களுக்கு அது கொடுக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமா யுள்ளது என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் தவறாகக் கேட்கவில்லை, தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் நாங்கள் கேட்கிறோம், நீர் தாமே அதை எங்களுக்கு அருளுவீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் கூடிவருதலையும், எங்கள் மேய்ப்பரையும், சபையின் வேலையை செய்பவர்களையும், ஒவ்வொரு நபரையும், இப்பொழுது இங்கிருக்கின்ற கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத் தினர்களையும் ஆசீர்வதியும். கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத் தினர்களாக இல்லாமல், இன்று வேறெங்காகிலும் பாதுகாப் பிடத்திற்காக நோக்கிக் கொண்டு, வீட்டின் பின்புறத்தில் குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு இடத்தை வாங்குகிற வர்களாக இருப்பார்களாயின், தேவனே, அவர்கள் தாமே, இந்த வாழ்க்கையானது முடிவுறும் போது இதற்கு அப்பால் ஒரு வாழ்க்கை உள்ளதென்று அறிந்து, கர்த்தராகிய இயேசுவின் பாது காக்கும் புகலிடத்துக்கு வருவார்களாக. அந்த வாக்குத்தத்தத் திற்காக உமக்கு நன்றி. இன்றிரவு இந்த கேள்விகளுக்கான பதிலை எங்களுக்குத் தாரும், அதினாலே நாங்கள் உம்முடைய வார்த்தையைக் கொண்டு ஒவ்வொரு இருதயத்தையும் நாங்கள் திருப்தி செய்ய ஏதுவாயிருக்கும். இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 9கர்த்தருடைய வருகையின் நேரமானது அணுகிக் கொண்டிருப்பது, அது என்ன மகத்தான ஒரு நம்பிக்கை! சற்று நேரத்திற்கு முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன், யாரோ ஒருவர் ஆயுள் காப்பீடு (Insurance) செய்தல் ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார், நான் சிறிது காலத்துக்கு முன்னர் வணிகர்கள் ஐக்கியத்தினரின் கன்வென்ஷன் கூட்டங்கள் ஒன்றில், சர்வதேச கன்வென்ஷன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நான் ஒரு பிராந்திய கூட்டத்தில் மாத்திரம் இருந்தேன். உலகெங்கிலும் உள்ள முழு சுவிசேஷ வணிகர்கள் ஐக்கியத்தின் கூட்டங்களில் நான் பேசுவேன். இந்த கன்வென்ஷன் கூட்டமானது மேற்கு கடற்கரை பிரதேசத்தில் நடந்தபடியால், அங்கே உலக முழுவதிலும் மிருந்து புகழ்வாய்ந்தவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். மிக நேர்த்தியாக உடையுடுத்தி மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ''யாரோ ஒருவர் உங்களை 'சங்கை ரெவரெண்ட்' என்று அழைத்ததை நான் கேட் டேன்“ என்று கூறினார். நான் “ஆம், ஐயா'' என்று கூறினேன் 'நீர் ஒரு பிரசங்கியா?'' என்று கேட்டார். நான் ”ஆம், ஐயா'' என்றேன். 'இந்த வியாபரம் செய்வர்களிடம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ''நானும் கூட ஒரு வியாபாரிதான்“ என்றேன். 'ஓ? எந்த விதமான வியாபாரத்தில் நீர் ஈடுபட்டிருக் கின்றீர்?'' என்றார். நான் “நம்பிக்கை (Assurance)'' என்றேன். அவர் என்னை தவறாகப் புரிந்து கொண்டார், நான் ஆயுள் காப்பீட்டைக் (Insurance) குறித்து கூறினேன் என்று நினைத்துக் கொண்டார். ஆகவே அவர் என்னிடம், ''நீங்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார். நான், “பரலோக நிறுவனம்'' என்று கூறினேன். ''அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் உள்ளதென்று எனக்கு தெரிந்திருக்குமா என்று எனக்கு நம்பிக்கை இல்லை'' என்றார். நான் கூறினேன்- ''எந்த - எந்த விதமான காப்பீட்டை (Insurance) நீங்கள் விற்பனை செய்கிறீர்கள்?'' ''நான் ஒருக்காலும்... நான் காப்பீடு (Insurance, இன்சூரன்ஸ்) என்று கூறவில்லை, நான் 'நம்பிக்கை ' (Assurance,) என்று தான் கூறினேன்“ அவர் “என்ன கூற விழைகிறீர்கள்?'' என்று கேட்டார். நான் கூறினேன். இயேசு என்னுடையவர், அது ஆசிமிக்கும் உறுதியாகும் ஓ, தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன்ருசி அது இரட்சிப்பின் வாரிசு, தேவன் கிரயத்திற்குக் கொண்டதால் அவர்தம் ஆவியால் பிறந்தேன், இரத்தத்தால் கழுவப்பட்டேன். அந்த இரவு, நான் வானொலி நிகழ்ச்சிக்காக அறிமுகப் படுத்தப்பட்ட போது, நான் அந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினேன், ''இப்பொழுது, இங்கே இருக்கின்ற அல்லது தேசம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஒரு காப்பீட்டு பத்திரம் (Policy) தேவைப்படுமானால், என்னிடம் காப்பீட்டு பத்திரங்கள் இருக் கின்றன, ஆராதனை முடிந்தவுடன் நான் உங்களிடம் அதைக் குறித்துப் பேசுவேன். நம்பிக்கை, ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை (Blessed Assurance)'' என்று கூறினேன். 10இப்பொழுது, இந்த கேள்விகள் கேட்கப்படுகையில், இது தாமே உங்களுடைய சிந்தையை நான் கண்டுகொள்ள ஒரு சிறு அணுகுமுறையை எனக்கு அளிக்கும் என்று நான் நினைத்தேன். என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. நான் கதவிற்குள் வருகையில் இன்னும் அநேகம் இருப்பதாக பில்லி கூறினான், ஆனால் அதைப் பார்க்க எனக்கு தருணம் கிடைக்கவில்லை. அதற்கு பதலிளிக்கும் முன்னர் நான் வேதப்பூர்வமாக சரியாக பதிலளிக் கிறேனா என்று நிச்சயம் கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் நீங்கள்... அதற்கு பதில் கொடுக்கும் முன்னர், அந்த விதமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே ஒருக்கால் சிலவற்றை பதிலளிக்காமல் மற்றொரு சமயத்திற் கென்று நான் எடுத்து வைத்துவிடுவேன். இப்பொழுது ஒன்றில்.... நினைவில் கொள்ளுங்கள், இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக் கையில் என்னால் முடிந்த வரையில் அதற்கு பதலளிக்கச் செய்கிறேன். ஆராதனைகளில் நான் கேள்விகளுக்கு பதிலளிப்பது கிடை யாது. ஒரு சமயம் அவ்வாறு நான் முயற்சி செய்து தொல்லையில் அகப்பட்டுக் கொண்டேன். அவர்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டனர். அது திரு. ஆலனைக் குறித்த ஒன்று அல்லது கரங்களில் மற்றும் முகத்தில் இரத்தம் மற்றும் எண்ணை காணப்படுவது, பரிசுத்த ஆவிக்கான அடையாளம் என்பதைக் குறித்த ஒன்று. நான், “நல்லது, அதைக் குறித்து எனக்குத் தெரியாது. அதைக் குறித்த ஒன்றையும் வேதாகமத்தில் நான் கண்டதில்லை'' என்றேன். மேலும் ''ஆனால் நான் நம்புவது என்னால்... இவ்விதமாக பிரசங்கம் செய்ய முடியும், சகோதரனே, நான் உணர்ச்சிவசங்களின் பேரிலே சார்ந்திருக்க மாட்டேன். நான் சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கிக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தேன். 11''அருமை சகோதரன் பிரன்ஹாம்...'' என்று சர்வதேச அளவில் அவர்கள் கடிதம் அனுப்பிவிட்டனர். ஆகவே அது எல்லா இடங்களுக்கும் சென்றது. அவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஆகவே நாங்கள் அவர்களுக்கு அந்த ஒலி நாடாக்களை அனுப்பினோம், அவர்கள் தாமே அதைப் போட்டுக் கேட்டு நான்... அவர்கள், ''அந்த மனிதனை நான் கடிந்த கொண்டேன்'' என்று கூறியிருந்தனர். நான்- நான் அவ்வாறு செய்யவில்லை. நான் எந்த ஒரு சகோதரனையும் கடிந்து கொண்டது கிடையாது. சிலசமயங்களில் நான் அவர்களுடன் ஒத்துப் போகாமல் இருக்க முடியும், ஆனாலும் அது நட்பின் அடிப் படையில் தான் இருக்கும். மேலும் சிறிது காலத்துக்கு முன்னர் இந்த மனிதனைக் குறித்து ஒரு மனிதன் பிசாசுகளை கடித்தல் என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அப்பொழுது இது ஒருக்கால் கவனிக்க வேண்டிய அல்லது அவர் அறிந்து கொள்ள வேண்டிய நேரமாக இது இருக்கலாம் என்று நான் எண்ணினேன். அந்த புத்தகத்தை எழுதின அந்த மனிதன் என்னைத் தவிர களத்தில் இருந்த ஒவ்வொரு சுவிசேஷகனையும் குற்றங்கண்டு கண்டித்திருந்தார், அவர் என்னுடைய கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார், ஆகவே நான், ''அந்த குற்றங்கண்டுபிடிப்பை ... நான் பாராட்டுவது கிடையாது, ஆனால்...' என்றேன். அந்த சகோதரன் கிறிஸ்டியன் டைஜஸ்ட் பத்திரிக்கையில் வெளிப்படையாக அதைப் பாராட்டினார். நான் ஒருவன்தான் காணிக்கை எடுப்பதில்லை மற்றும் மக்களிடம் பணத்திற்காக கெஞ்சுவதில்லை என்றும் மற்றவைகளையும் அவர் கூறியிருந்தார், அவர் அதை பாராட்டியிருந்தார். ஆகவே அந்த மனிதன் அங்கே உட்கார்ந்திருந்தார். சகோதரன் ஆலனைக் குறித்து அந்த மனிதன் கூறியிருந்த ஒன்று சரியானதல்ல என்பதை நான் தற்செயலாக அறிந்து கொண்டேன். அவர், ''ஏ.ஏ. ஆலன் பிசாசுகளை கடித்தல் என்ற இந்த புத்தகத்தை எழுதினார்'' என்று கூறினார். இப்பொழுது, ஏ.ஏ. ஆலன் அந்த புத்தகத்தை எழுதவில்லை. அந்த புத்தகத்தின் எழுத்தாளனை நான் அறிவேன். நான் கூறினேன், ''இப்பொழுது, இந்த புத்தகத்தை எழுதின அந்த மனிதன், சகோதரன் ஆலனை விமர்சனம் செய்வதற்கு முன்னர், அந்த புத்தகத்தை எழுதியது யார் என்பதை அறிந்து கொள்ள உத்தமமாக முயற்சிக்காததால், அவருடைய மற்ற விமர்சனங்கள் இந்த சகோதரருக்கு பொருந்தாது.'' பாருங்கள்? எனக்காக பேசின அந்த மனிதன் சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். நீங்கள் பாருங்கள், பிசாசுகளை கடித்தல் என்ற புத்தகத்தை சகோதரன் ஆலன் எழுதினார் என்பது அவருடைய கருத்து தவறான ஒன்று என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்விதம் கூறினேன். 12இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது, என்னால் முடிந்த வரைக்கும் சிறந்த விதத்தில் செய்வேன். மேலும்... நான் அவைகளுக்கு வேத வசனங்களைக் கொண்டே பதிலளிக்க முயற்சிப்பேன். இப்பொழுது முதலாவது கேள்வி 1 கொரிந்தியர் 7ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் காணப்படுகிறதென்று நான் நம்புகிறேன். ஆகவே நாம் அந்த வேத வசனத்திற்குச் சென்று, அது எந்தவிதமாக உள்ளதென்றும், மற்றும் இந்த கேள்வியைக் கேட்கின்ற இந்த விலையேறபெற்ற நபருக்கு நம்மால் உதவ முடியுமா என்றும் நாம் பார்க்கலாம். இப்பொழுது, 1கொரிந்தியர், 7ஆம் அதிகாரம், 15 வது வசனம். அந்த நபர் இப்பொழுது இங்கிருக்கின்றார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இந்த விதமாகத்தான் இது காணப்படுகின்றது: ஆகிலும் விவாகமில்லாதவர்கள் பிரிந்து போனால், பிரிந்து போகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரி யாவது அடிமைப்பட் டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 131கொரிந்தியர் 7வது அதிகாரம், 15 ஆம் வசனம். இப்பொழுது அவர்கள் கேட்டுள்ள கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், ஒரு சகோதரியோ அல்லது சகோதரனோ மறுபடியுமாக விவாகம் செய்து கொள்ள தடையில்லை என்று இது குறிப்பிடுகிறதா? இல்லை பாருங்கள், இவர் என்ன கூறுகிறார் மற்றும் இவருடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் விவாகம் செய்யமுடியாது. பாருங்கள், அது வேதாகமத்தில் முரண் பாட்டைக் கொண்டு வரும், வேத வசனங்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடானது அல்ல. புரிகின்றதா? இப்பொழுது, நாம்... நீங்கள் வேதாகமத்தை (ஒரு வசனத்தை வாசிப்பதனால் மாத்திர மே) அது என்ன கூறவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விதமாகவே உங்களால் செய்யமுடியும் - உங்கள் கருத்துக்கு பொருத்தமான விதத்தில் பொருந்தும்படியாக. ஆனால் அவை எதைக் குறித்து பேசுகின்றதோ அந்த கருத்தைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். இந்த விதமாக இருக்கலாம்- நான் சகோதரன் நெவிலுடன் பேசிக் கொண்டிருக்கையில் நான் போர்ட் (Board) என்னும் வார்த்தையை கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நீங்கள் திரும்பிச் சென்று “அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று உங்களுகத் தெரியுமா? இன்றிரவு நாம் அவரை சோர்ந்து போகும் அளவு ”போர்“ (Bored) அடித்து விட்டோமா'' என்று கூறுவீர்கள். பாருங்கள்? ஆனால் மற்றொரு நபரோ, ''நீ கூறுவது தவறு, அவர் என்ன கூறமுற் பட்டார் என்றால், மரப்பலகை (Board, போர்ட்) கட்டணம் அவர் செலுத்த வேண்டுமாம், அவர் அதற்கான பணத்தை செலுத்தப் போகிறார்” என்று கூறுவார். இன்னொரு நபர், “ஓ, இல்லை, அவர் அதை அர்த்தம் கொள்ளவில்லை, வீட்டின் பக்கவாட்டில் உள்ள அந்த தடித்த அட்டையைத் தான் (போர்ட், board) குறிப்பிட்டார்” என்று கூறினார். அடுத்த நபரோ, ''இல்லவே இல்லை, என்னவென்று நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர் துளையிட்டு (boring, போரிங்) ஒரு ஓட்டையை போடுவதைக் குறித்து அவர் விளக்க முயற்சித்துள்ளார் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 14நீங்கள் உரையாடலை கவனிக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பதை அறிந்தவர் களாயிருப்பீர்கள், ஏனெனில் இங்கே பவுல் சில சமயங்களில் அவர்களுடைய கேள்வியையே பதிலாக அளிக்கின்றான். சில சமயங்களில் அவர்கள், “வேதாகமம் தனக்குத் தானே முரண்பாடாக அமைந்துள்ளது'' என்று கூறுகிறார்கள். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். அவ்விதமாக அது முரண்பாடாக இல்லை. முப்பத்திரண்டு வருடங்களாக இந்த பிரசங்க பீடத்தின் பின்னால் நான் நிற்கின்றேன், இன்னும் ஒரு முரண்பாட்டைக் கூட நான் காணவில்லை. பாருங்கள்? அது தனக்குத்தானே முரண் பாடாக அமையவில்லை! அது... அதை முரண்பாடாக ஆக்குவது நீங்கள்தான், பாருங்கள். அதை புரிந்து கொள்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைக்குரிய வெளிப்பாட்டை வெளிப் படுத்துபவர் ஆவார். ஆதலால் அந்த முரண்பாடு... பாருங்கள், பவுல் அவர்களுக்கு எழுதுகின்றான், ''நீங்கள் இந்த - இந்த காரியத்தை கேட்டீர்கள்“ என்கின்றான். நீங்கள் கேட்டீர்கள் என்று மாத்திரம் அவன் கூறவில்லை, அவன் அதையே கூறுகின்றான். பிறகு அவன் திரும்பவுமாக அவர்களுக்கு பதிலளிக்கின்றான், அது அவர்கள் கேட்டதற்கு முரண்பாடாக இருந்தது. 15அவர்கள், ''நாங்கள் இதை, இதை மற்றதை செய்கின் றோம்'' என்று கேட்டனர். பவுல் திரும்பி ஏதோ ஒன்றைக் கூறுகிறான், பாருங்கள், அது ஒரு முரண்பாடு போலக் காணப் படுகிறது. அது அப்படி அல்ல. நீங்கள் முழு வசனத்தையும் முழு அதிகாரத்தையும், வாசிப்பீர்களானால், அவர்கள் அவனுக்கு என்ன எழுதினார்களோ அதற்கு அவன் விளக்கம் அளிக்க முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, இதை நாம் பார்ப்போமாக, அது... அந்த விதமாகத்தான் நீங்கள் வேதாகமத்தில் முரண்பாடுகளாக புரிந்து கொள்கிறீர்கள், ஆனால் அது அவ்விதமாக அல்ல. இப்பொழுது இங்கே, அந்த நபரானவர் தெரிந்து கொள்ள விரும்புகிற, அல்லது அவர்கள் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றனரோ அதைப் பற்றிய ஒரு கேள்வி: கர்த்தருக்குள்ளாக இருக்கின்ற ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, மறுபடியும் மறுவிவகாம் செய்ய தங்கள் துணையை விட்டுவிட்டு, விவாகம் அல்லது மறுவிவாகம் செய்துகொள்ளலாமா? செய்யக் கூடாது இப்பொழுது நாம்... 10வது வசனத்திலிருந்து ஆரம்பிப் போம்: விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே (பாருங்கள்?) கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது: (பாருங்கள்) பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. (அதுதான் கர்த்தருடைய கட்டளைகள், பாருங்கள்) மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: (பாருங்கள்) சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாய் இருந்தும்... இப்பொழுது, அவனுடைய பொருளைக் கவனியுங்கள், பாருங்கள். நீங்கள் இதற்கு முன்பிருந்து, அல்லது அதிகாரம் முழுவதுமாக நீங்கள் வாசித்துப் பார்த்தால், ''நாம் ஒரு மனைவியை மணந்து, அவள்... நாம்... நான் விவாகம் செய்து, பிறகு நான் ஒரு விசுவாசியாகும் போது, என் மனைவியும் ஒரு விசுவாசியாக இல்லையெனில், நான் அவளைத் தள்ளி விடுவேனாக“'. ஓ, இல்லை. அது அவ்வாறாக இல்லை. அவ்விதமாக நீங்கள் செய்யவே கூடாது. பாருங்கள்? புரிகின்றதா? ...சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். (அது, விவாகத்தின் காரணத்தால் அல்ல, அது அவிசுவாசத்தின் காரணத்தால். திரும்பவும் ''மறுவிவாகம் செய்ய அல்ல. பாருங்கள், அவளுடனே தரித்திருத்தல்) அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன் (அது சரியே! பாருங்கள்) (ஆங்கில வேதாகமத்தில், அவள் அவனை விட்டுப் பிரிந்து செல்லாதிருக்கக்கடவள், Let her not leave him என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான், அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்து போகட்டும்... இப்பொழுது, அந்த அவிசுவாசி, ''இனிமேல் உன்னோடு நான் வாழப்போவதில்லை, நீ ஒரு கிறிஸ்தவனாகிவிட்டாய்'' என்று கூறினால், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம், ''நீ இரட்சிக்கப்பட்டு, ஒரு காலத்தில் நாம் இருந்த உலகத்தை விட்டு நீ வெளியே செல்லப் போவதால், நான் உன்னை விட்டு பிரிந்து செல்லப்போகிறேன்'' என்று கூறுவானானால், அதைக் குறித்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அவன் பிரிந்து செல்லட்டும். பாருங்கள்? 16அல்லது அந்த பெண் தன்னுடைய கணவனிடம் ''நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தினருடன் சேரமாட்டேன். நான் அதைச் செய்ய மாட்டேன்! நான் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறேன்'' என்று கூறுவாளானால், நீ சபையை விட்டு விடாதே, அவள் பிரிந்து செல்ல விட்டுவிடு. பாருங்கள்? இந்த விதமான ஒரு விஷயத்தில் ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ அடிமைப்பட்டவர்கள் அல்ல, அது என்ன வெனில், உங்களுடைய துணை அதற்காக உங்களை தள்ளிப் போட்டு, பிரிந்து போக விரும்புவது. நீங்கள் இன்னுமாக அவர்களைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போக விரும்புவது, கிறிஸ்துவின் காரணமாக உங்களை அவர்கள் விட்டுவிடப் போகிறார்களென்றால், அவர்கள் செல்லும்படிக்கு விட்டு விடுங்கள். ஆனால் நீங்கள் மறுவிவாகம் செய்துக் கொள்ளக் கூடாது! ''ஆனால் சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத் திருக்கிறார்''. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் திரும்பவுமாக மறுவிவாகம் செய்து கொள்ளலாம் என்றல்ல, அவன் ஏற்கெனவே அதைக் கூறிவிட்டான், ஆனால் நீங்கள் ஒரு அவிசுவாசிக்கின்ற புருஷனோ அல்லது அவிசுவாசிக்கின்ற மனைவியோ அவர்களுக்கு வாழ விருப்பமில்லையெனில், நீங்கள் அவர்களுடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை. 17அவர்கள் உங்களுடன் வாழ விரும்பி “பாருங்கள், நீங்கள் சபைக்குச் செல். அங்கே செல்ல நீங்கள் விரும்பினால், அது உன் காரியம். உங்கள் சபைக்கு நீங்கள் செல்ல விரும்பினால், நீ செல். என்னைப் பொறுத்தவரையில் நான் அதை விசுவாசிப்பில்லை. மேலும் நான் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன், நான் உங்களுடைய வழியில் குறுக்கே நிற்கமாட்டேன், நீ சபைக்கு செல்” என்று கூறுவார்களானால், அப்பொழுது நீங்கள் அப்படியே வாழ வேண்டும், ஏனெனில் உங்களுடைய பரிசுத்த மாக்கப்பட்ட ஜீவியம் அந்த விசுவாசியை (believer) பரிசுத்தப் படுத்தி, அவர்கள் விசுவாசிக்கும்படிக்குச் செய்யும். பாருங்கள்? மனிதனோ அல்லது ஸ்திரீயோ அது இரண்டு பக்கங்களிலும், பாருங்கள். நீங்கள்... ஆனால் இப்பொழுது நீங்கள், ''நான்... சகோதரன் பிரன்ஹாம், நான் விவாகம் செய்து கொண்டேன். என்னுடைய மனைவி ஒரு அவிசுவாசியாயிருக்கிறாள், ஆனால் நான் விவாகம் செய்யத்தக்கதாக ஒரு சகோதரி இங்கே இருக்கின்றார்கள். நான் இந்தப் பெண்னை விட்டுவிட்டு அந்த பெண்னை விவாகம் செய்யப் போகிறேன்'' என்று கூறலாம். ஓ, இல்லை! நிச்சயமாக கூடாது! மரணம் உங்களைப் பிரிக்கும்வரை என்று தான் உங்களுடைய வாக்கை நீங்கள் அளித்திருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கைத் துணை மரிக்கும் வரைக்கும் (வேதாகமத்தில்) நீங்கள் மறுவிவாகம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி ஒன்று கூட இந்த உலகத்தில் கிடையாது. அது சரியே. இருக்கின்ற ஒரே அடிப்படை! வாழ்க்கைத் துணை மரித்தால் தவிர மறுவிவாகம் செய்து கொள்வது என்பது எங்குமே கிடையாது. அவ்வளவுதான். பாருங்கள்? 18வேதாகமத்தை தனக்குத் தானே முரண்பாடாக ஆக்க உங்களால் முடியாது. ஆகவே வசனங்களை முன்னும் பின்னுமாக வாசியுங்கள், அப்பொழுது அவன் எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதை நீங்கள் கிரகித்துக் கொள்வீர்கள். இப்பொழுது, இது என்னவென்றால்... பாருங்கள்: அப்படியென்றால் ஒரு சகோதரியோ அல்லது ஒரு சகோதரனோ மறுவிவாதம் செய்து கொள்ளலாமா? இல்லை ஐயா. பாருங்கள் அவன் அதை முதலில் விளக்கினான். பாருங்கள்: ... விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது; மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது. பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்... (பாருங்கள்?) ஒரு விசுவாசி திரும்பவுமாக மறுவிவாகம் செய்யும்படிக்கு உயிரோடிருக்கின்ற வாழ்க்கை துணையுடன் ஒப்புரவாகுதல் என்பதைப் போன்ற காரியங்கள் கிடையவே கிடையாது. இப்பொழுது இங்கே மற்றொன்று உள்ளது. இரண்டாவது இவ்விதமாக உள்ளது: 19பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில், கடைசி உயிர்த்தெழுதலில் அக்கிரமக்காரர் எந்த விதமான சரீரத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்? அந்தப் பாவி எந்த சரீரத்தில் பாவத்தைச் செய்தானோ, அந்த சரீரத்தில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக உயிர்த்தெழுதலில் உயிரோ டெழுவான். உயிர்த்தெழுந்து நியாயந்தீர்ப்பில் அவன் நிற்க வேண்டியவனாக இருக்கிறான். உயிர்த்தெழுதல் என்பது பதிற்பொருளாய் (Replacement) என்பதல்ல, அது ''கீழே சென்ற அதை மேலே கொண்டு வருதல்“' என்பதே. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த போது, கீழே சென்ற அதே சரீரமாக அவர் இருந்தார், அதே சரீரத்தில் அவர் உயிர்த்தெழுந்தார். எந்த சரீரத்தோடே கீழே செல்கிறோ மோ அதே சரீரத்தில் நாம் உயிரோடெழுகின்றோம்; அது ஒரு உயிர்த்தெழுதல், ஒரு பதிற்பொருளாய் வைக்கப்படுதல் அல்ல. இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது அந்த... சரீரத்தில் செய்யப்பட்ட பாவங்களின்படியே நாம் நியாயந்தீர்க்கப்படு வோம். ஆகவே அக்கிரமக்காரன் உயிரோடெழும் போது, அவன் எந்த சரீரத்தைக் கொண்டு பாவம் செய்தானோ அதே சரீரத்தில் அவன் நியாயந்தீர்க்கப்படுவான், அதே காரியத்தில். 20“பின்னும் ஆதாம் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; (ஆங்கில வேதத்தில் and என்றும் இணையிடைச் சொல் (conjuction) உள்ளது - தமிழாக்கியோன்) (இணையிடைச் சொல்) அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று.'' நீங்கள் போதிக்கும் எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால்... எப்படி... and என்னும் அந்த இணையிடைச் சொல் காரணமாக, ஆதாம் அவளை அறிந்த பிறகு அவள் கர்ப்பந்தரிக்கவில்லை என்று கூறுகின்றவர்களுக்கு எவ்விதம் நான் பதிலளிக்க வேண்டும். இப்பொழுது பெரியவர்களாகிய நமக்கு ''அறிந்தான்'' என்பது எதைக் குறிக்கிறது என்றறிவோம். இப்பொழுது இந்த கேள்வி இணையிடைச் சொல் (conjuction) என்பதைக் குறித்த ஒன்றாக இருக்கிறது. நண்பர்களே இப்பொழுது நீங்கள் கவனிப் பீர்களானால், பாருங்கள், வேதாகமம் ஒரு காரியத்தை ஒரு இடத்திலும் வேறொன்றை வேறொரு இடத்திலும் கூறும்படிக்கு உங்களால் செய்ய முடியாது. எல்லா சமயத்திலும் அது அதே காரியத்தை மாத்திரமே கூற வேண்டும். அது இங்கே ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்து பிறகு இங்கே வேறெதோ ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்தால், அப்படியானால் உங்களு டைய வியாக்கியானம் தவறானதாகும். பாருங்கள்? உங்களால் அவ்விதமாகச் செய்யமுடியாது. சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்தது, பிறகு வேறொரு இடத்தில் அவள் மறுபடியுமாக வஞ்சிக்கப் பட்டதாக உங்களாலே காணவே முடியாது. பாருங்கள்? அவள் கர்ப்பந்தரித்தபோதுதான் அவள் முதல் முறையாக வஞ்சிக்கப் பட்டாள். நீங்கள் அவள் இரண்டு முறை வஞ்சிக்கப்பட்டா ளென்று உங்களாலே காண்பிக்க முடியாது. 21இணையிடைச் சொற்களை (conjuctions) நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். வேதாகமத்தை வாசிக்கையில் நீங்கள் காண் கின்ற இணையிடைச் சொற்கள் எவ்வாறாக செல்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். இணையிடைச் சொல் ஒரு வாக்கியத்தை பிணைக்கிறது. பாருங்கள்? இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது, ஆதியாகமம் 1:26ல் இந்த இணை யிடைச் சொல்லை கவனியுங்கள், பிறகு நீங்கள் இதை விளக்குங்கள், அதன் பிறகு நான் உங்களுக்கு கூறுகிறேன் எப்படி அவன்... ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தபோது. ஆதியாகமம், 1ஆம் அதிகாரம் 26வது வசனம் முதல் - இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவன் இப்பொழுது தம்முடைய சிருஷ்டிப்பை உண்டாக்கினார், பூமியானது ஊரும் சகல பிராணிகளை பிறப்பிக்கவும் செய்தார்- பூமியானது பிறப்பித்த எல்லா காரியங்களும் இப்பொழுது 26வது அதிகாரம்... ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தின் 26வது வசனம்: பின்பு தேவன்: நமது சாயலாகவும் நம்முடைய ரூபத்தின்படி யேயும் மனுஷனை உண்டாக்குவோமாக... அவர்கள் (மனுஷன்)... (அவன் என்றல்ல; 'அவர்கள் பாருங்கள், பன்மை) சமுத்திரத்தின் மச்சங்களையும் (and) ஆகாயத்துப் பறவைகளையும் (and) மிருக ஜீவன்களையும் (and)... (ஆங்கில வேதாகமத்தில் இடையே இணையிடைச் சொல்லான (and) காணப்படுகிறதுதமிழாக்கியோன்)... (பாருங்கள் மற்றும், மற்றும், மற்றும்'' [and, and, and) ஒன்றாக இணைக்கின்றன)... பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்மித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; (and) ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஆணும் and) பெண்ணுமாக) பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, (and) பூமியை நிரப்பி (and) அதைக் கீழ்ப்படுத்தி... தம்முடைய சிருஷ்டிப்பிற்கு பிறகு தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். இணையிடைச் சொல் பிறகு இணையிடைச் சொல்... மனுஷன் பூமியை நிரப்பி. (and, பிறகு, இணையிடைச் சொல்) பலுகிப் பெருகி, அதன்பின் பூமியைக் கீழ்ப்படுத்துதல்; அது நேராக ஆயிர வருட அரசாட்சிக்குள்ளாக செல்கிறது. பாருங்கள்? அது சரி, ''பூமியைக் கீழ்ப்ப டுத்தி.'' அது சரி: ... (and) சமுத்திரத்தின் மச்சங்களையும், (and) மற்றும்) ஆகாயத்துப் பறவைகளையும் (and மற்றும்) பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள். 22இப்பொழுது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், சிருஷ்டித்து, அவர்கள் (அந்த மனுஷன்) பூமியின் மீது ஆளுகை செய்து அதைக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் செய்ய விட்டார். அவர்கள் இதைச் செய்ய, அவர்கள் மச்சங்கள் மீது ஆளுகை செய்ய விட்டார். அவர் உண்டாக்கின எல்லாமும். மேலும் நாம் ஆதியாகமம் 2:7ல் காண்பது இதைக் கவனியுங்கள். தேவன் பூமியை உண்டாக்கின பிறகு, மனுஷனை உண்டாக்கின பிறகு, பூமியின் மீதான ஆளுகையை அவனுக்கு அளித்து, அவனுக்கிருந்த எல்லாவற்றையுமே அவனுக்கு அளித்தார், தேவன் அவர்களை சிருஷ்டித்தார், அவர்கள் பெருகி... பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படிக்கு அவர்களுக்கு கூறினார். அவர் வானமும் பூமியும் மற்றும் எல்லாக் காரியமும், அவர் செய்து முடித்திருந்து எல்லா காரியங்களுக்குப் பிறகு - அந்த ஏழு வசனங்களுக்குப் பிறகு, ''and தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி'' “And” இங்கே அவர் “(and ” இணையிடைச் சொல்) (ஆங்கிலத்தில் ஆதி 2:7 வசனம் And என்று துவங்குகிறது - தமிழாக்கியோன்) அவர் ஏற்கெனவே உண்டாக்கி யிருந்த மனுஷனை உருவாக்குகின்றார். பாருங்கள்? ஒரு மனுஷனை உருவாக்குகின்றார். and (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) .... தேவன்... மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் (அந்த மூச்சு) மனுஷன் ஜீவாத்துமாவானான் 23இப்பொழுது, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஆதியாகமம் 1:26லிருந்து 28க்குள் அவர் மனுஷனை (பெண் மற்றும் ஆண்) உண்டாக்கின பிறகு, அவர் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார், அவனை சிருஷ்டித்து, அவனுக்கு அளித்தார். ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, இந்த அதிகாரங்களையும் மற்ற எல்லாவற்றையும் அளித்தார், ஆனால் இன்னுமாக அவர் மனுஷனை உண்டாக்கவேயில்லை. பாருங்கள், சாத்தான் ஏற்கெனவே ஏவாளை வஞ்சித்தான். ஆதாம் அவளை அறிந்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவள் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டிருந்தாள். ஏனெனில் சரியாக அங்கே அவன்.... அவர்கள். அவர்கள் வருவதற்கு முன்னர்... அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தபோது, தேவன் அவர்களை ஒன்றாக நிற்க வைத்து, “இதைச் செய்தது யார்?'' என்றார். அவர்களை நோக்கி கேள்வி கேட்டார். ஆதாம், ''நீர் எனக்குத் தந்த ஸ்திரீயானவள்'' என்று கூறினான். அந்த ஸ்திரீ, ''சர்ப்பம் என்னை வஞ்சித்தது'' என்று கூறினாள். 56. ஆகவே தேவன் அவர்கள் மீது சாபத்தை - அதைப் போன்ற தை எல்லாம் வைத்தார்- அதன் பிறகு ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான், பாருங்கள், அவள் ஏற்கெனவே வஞ்சிக் கப்பட்டு ஒரு தாயாகியிருந்தாள். இங்கே ஆதியாகமம் 1: 26ல் தேவன் மனுஷனை உண்டாக்கியிருந்து, ஆனாலும் இன்னு மாக அவன் உருவாக்கப் படாதிருதந்தது போலவே. பாருங்கள்? அது சரி. 24இப்பொழுது கவனியுங்கள் இப்பொழுது நாம் இங்கே திருப்பி இதையும் வாசிப்போமாக: ஆதாம் தன் மனைவிக்கு... ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில் அவள் ஜீவனுள்ள காரியங்களுக்கு தாயானாள் எல்லா... அல்லது ஜீவனுள்ளளோருக்கெல்லாம் தாயானாள். அந்த ஸ்திரீயை மனைவி என்று அழைத்தான். ஏனெனில் அவள்... அல்லது அந்த ஸ்திரீ ... ஜீவனுள்ள காரியங்கள் எல்லாவற்றிற்கும். தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும், தோல் உடைகளை உண்டாக்கி அவர்களை மூடத்தக்கதாக... இப்பொழுது, இப்பொழுது இங்கே ஆதியாகமம், 1:21ல் மறுபடியும் கவனியுங்கள், தேவன் மச்சங்களை சமுத்திரத்திலே சிருஷ்டித்தார். அவர் எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தார், பிறகு சிருஷ்டிப்பைச் செய்தார், மனிதனை தமது சொந்த சாயலில் உண்டாக்கினார். மனிதனை உண்டாக்கினார், “ஒரு” மனிதனை அல்ல, முழு மனிதன்- இவை எல்லாவற்றையும் தம்முடைய சொந்த சாயலில். பாருங்கள்? அவர் அவர்களை தேவனுடைய சாயலின்படியே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக இரண்டைப் போலவே அவனை சிருஷ்டித்தார். 25ஆகவே இப்பொழுது நாம் இங்கே காண்பதென்ன வெனில், அவர் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே சிருஷ்டித்த பிறகு, இங்கே அவனை ஆணும் பெண்ணு மாக சிருஷ்டித்த பிறகு, இங்கே பூமியின் மண்ணிலிருந்து அவர் மனிதனை உண்டாக்குகிறார். பிறகு, அவர் அதைச் செய்த பிறகு, அவனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கின பிறகு, அவனை ஏற்கனவே உண்டாக்கின பிறகு, அவர் இங்கே திரும்பவுமாக வந்து அவனுக் காக ஒரு மனுஷியை உண்டாக்குகிறார். பாருங்கள்? இதோ அந்த இணையிடைச் சொல் அந்த வாக்கியத்தை ஒன்று சேர்க்கிறது. அது முன்பு செய்த விதமாகவே இங்கும், ''தேவன் தம்முடைய மனுஷனைச் சிருஷ்டித்தார், தம்முடைய ரூபத்தின்படியேயும் அவர் அவனை சிருஷ்டித்தார்''. இது தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தது, தேவன் தம்முடைய சிந்தையில் எதைக் கொண்டிருந்தாரோ அது. தேவன் தம்முடைய சிந்தனைகளில் பேசுதல். இங்கே தான் அவர் சரியாக கிரியையைச் செய்திருந்தார். இயேசு தாமே உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப் பட்ட ஆட்டுக் குட்டி. அவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அடிக்கப்படவில்லை. புரிகின்றதா? 26ஆகவே சர்ப்பம் ஏவாளை வஞ்சித்தது. அது உண்மை யானதே. தீர்ப்பு கொடுக்கப்பட்டப் பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள், அது காயீன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? பாருங்கள், ஆதாம் செய்ததை இணையிடைச் சொல் அப்படியே தொடர்ச்சியாகக் கொண்டுச் செல்கிறது. ஆதாமுக்கு முன்னர் நடந்தவை இணைக்கப்படவில்லை. இப்பொழுது இங்கே பாருங்கள், நீங்கள் அதைத் தொடர்ந்து பார்க்க விரும்பினால், இங்கே அந்த மகத்தான வாக்குமூலத்தில், பார்க்கலாம். அது இங்கே... இங்கே 4 வது அதிகாரத்தில், அது அதில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆதாம் தன் மனைவியாகிய ... அறிந்தான்; (and, இணையிடைச் சொல் - ஆங்கில வேதத்தில் உள்ளவாறு) அவள் கர்ப்பவதியாகி காயீனைக் பெற்று, (and, இணையிடைச் சொல்) கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள் (And Adam knew... his wife; and she conceived, and bare Cain, and (a conjuction) said, I have gotten a man from the LORD.) (ஆங்கில செய்தியில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) அப்படியானால் அது சரியாக அது ஆதாம் அல்ல, அதன்படி பார்த்தால் அது தேவனுடைய குமாரன் என்றிருக்கிறது. புரிகிறதா? புரிகிறதா? அந்த இணையிடைச் சொல்லை நீங்கள் பொருத்த விரும்பினால், பாருங்கள் (“and”, மறுபடியுமாக) ''தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்.'' அப்படியானால் அந்த வேறுபாடான காரியமான காயீன் என்றழைக்கப்பட்ட அதை தேவன் தனக்கு கொடுத்தார் என்று அவள் கூறுகிறாளே? காயீன் கொண்டிருந்த அந்த மதிகேடான, அசுத்தமான காரியங்கள் எல்லாவற்றின் மூலக்காரியம் செயல்திறன் எங்கிருந்து வந்தது, தேவனிடத்திலிருந்தா வருகின்றது? அப்படி இருக்குமா! பாருங்கள்? அவள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டாள், அந்த சர்ப்பம்... அவள் ஏற்கெனவே தாயாகி விட்டாள். பிறகு ஆதாம் அவளை அறிந்தான், நிச்சயமாக அவன் செய்தான், அவன் மனைவியுடன் ஜீவிப்பது போல அவளுடனே சென்று வாழ்ந்தான், ஆனால் அவளோ ஏற்கெனவே இந்தப் பிள்ளையின் தாயாக இருந்திருந்தாள். பிறகு முடிவில் ஆதாமுடைய குமாரன் பிறந்த போது, அவன் ஆதாமைப் போலவே, மென்மையான, இனிமையான, தாழ்மையான, எளிமையான நபராக இருந்தான். 27ஆனால் இவனோ, அந்த பச்சைப் பொய் (pure lying)... அந்த பாவம் எங்கிருந்து வந்தது? இந்த ஆள், காயீன், இந்த கொலைக் காரன் எதிலிருந்து வந்தான்? வேதாகமம், ''பிசாசானவன் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்'' என்று கூறுகிறதே. ஆகவே அந்தப் பொய் எங்கிருந்து வருகின்றது? (பிசாசானவன்தான் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான்; அவன் ஒரு பொய்யன் மற்றும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.) அது தேவனுக்கு புறம்பே இருக்கின்ற ஒரு மூலக் காரியத்திலிருந்து வந்திருக்க வேண்டியதாக இருக் கின்றது. ஆகவே காயீன்தான் அந்த பொல்லாங்கன், அவனு டைய தகப்பன் சாத்தான்; அவன்தான் இந்த பொல்லாங்கனைக் கொண்டு வந்தான். பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான் - நிச்சய மாக. ஆகவே, ஆமாம், ஒருக்கால் இந்த விதமாக நீங்கள் இதைக் கூறியிருந்தால்... நான் என்னையே எடுத்துக் கொள்வேனானால், நான் கூறுவதன்னவெனில், நல்லது, இப்பொழுது, ரெபெக்காள் பிறந்தாள், அதற்குப் பிறகு சிறிது... 28ஒரு நாள் யோசேப்பின் சம்பவத்தைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், யோசேப்பின் சம்பவ விவரத்தைக் குறித்து வாசித்த போது மிக நான் எழுச்சியூட்டும் ஒன்றாக இருந்தது. அங்கே அது மின்னிபோலிசில், நான் ஒரு சிறிய தனி அறையில் சென்று முழங்காலிட்டு “கர்த்தராகிய தேவனே, யோசேப்பென்ற மனிதனாகிய ஒருவனுக்காக எவ்வளாவாக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!'' என்று கூறினேன். அப்பொழுது நான், ''நான்.... அந்த மகத்தான சிறப்பு வாய்ந்த குணவியல்பு வாய்ந்த 'ஜோசப்' என்ற பெயரை பில்லி பாலுக்கு நான் வைத்திருக் கலாமே'' என்று நினைத்தேன். வேதாகமம் முழுவதுமாக அவனுக்கு எதிராக ஒரு கறை கூட இல்லை, ஒவ்வொரு விதத்திலும் கிறிஸ்து வின் பரிபூரணமான எடுத்துக்காட்டாக அவன் இருந்தான். ”எப்படியாக நான் நேசிக்கிறேன்...'' என்றேன், “ஓ, எனக்கு ஒரு மகன் பிறப்பானென்றால் அவனுக்கு 'ஜோசப்' என்று பெயரிடுவேன்” என்று நினைத்தேன். அப்பொழுது கட்டிடத்தில் அந்த ஒளியானது அசைந்து உள்ளே வந்து, “உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவனை 'ஜோசப்' என்று பெயரிட்டு கூப்பிடு'' என்று கூறினது. நான் என் மனைவியை அறிந்தேன், அவள் சாராளைப் பெற்றாள். பிறகு நான் என் மனைவியை அறிந்தேன், அப்பொழுது (and- இணையிடைச் சொல்லை தீர்க்கதரிசி கூறுகிறார் - தமிழாக்கி யோன்) அவள் ஜோசப்பை பெற்றாள். நான் என்ன கூறு விழை கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள், முதலில் உள்ளதற்கு இதனுடன் எந்த விதத் தொடர்பும் கிடையாது. தேவனுடைய வாக்குறுதி. ''ஜோசப்'' என்பதுதான் நடுவாக சாராள் வந்தாள். நான் சாராளை அந்த விதமான சிக்கலான சூழலில் வைக்கிறேன் என்றல்ல, ஆனால் நான் என்ன கூற வருகிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்கவே இதைக் கூறுகிறேன். பாருங்கள்... சாராளும் தேவனால் அனுப்பப்பட்டவளே. ஆகவே இப்பொழுது நாம் அதை அறிந்து கொள்கிறோம். 29இப்பொழுது பாருங்கள். ஆதாம் மற்றும் ஏவாளின் மீது தேவன் தீர்ப்பை அளித்தபோது, அவர் தீர்ப்பை அளிக்கு முன்னரே அவள் ஏற்கெனவே அந்த பாவத்தை செய்திருந்தாள். ஆகவே கவனியுங்கள், உலகத்திலே பிறந்த முதல் குழந்தை, ''பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிற தாய் உலகத்துக்கு வந்தது“ என்பது உங்களுக்குத் தெரியுமா? முதல் முதலில் பிறந்த குழந்தை அந்த விதமாகத்தான் பிறந்தது, ஏனெனில்..... ''அப்படியானால் ஆதாம், ஏவாளைக் குறித்து என்ன?'' அவர்கள் பிறக்கவேயில்லை. அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள். புரிகிறதா? ஆகவே முதன் முதலாக வந்த குழந்தையானது பாவத்தில் பிறந்த ஒன்றாக இருந்தது, ஆகவே அது அந்த வழியின் படியே தான் இருக்கும். ''ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்''. அவன் பாவத்தில் பிறந்திருக்கிறான். அதன் காரணமாக்கத்தான் அவன் ஆவியினாலே மறுபடியும் பிறக்க வேண்டியவனாக இருக்கிறான்: ஒரு ஆவிக்குரிய கருத்தினால் அல்ல; ஆவிக்குரிய பிறப்பினால். பாருங்கள், அது அவனை திரும்பவும் உருவாக்குகிறது, அவனை ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகின்றது. முதலில் பிறந்த மனிதனானவன் பாவத்தில் பிறந்தவனாக இருந்தான். 30ஆகவே, இனச்சேர்ககை இல்லாமல் ஒருவர் வரவேண்டிய தாயிருந்தது. இப்பொழுது ஆண் பெண் பாகுபாடு முதலாவதாக இல்லாதிருந்ததென்றால், அவர்களுக்கு ஏன் ஒருவர் பாலினத்தில் வந்து முழு மானிட வர்க்கத்தையும் மீட்க வேண்டியதாயிருக்க வேண்டும்? ஏன் அவர் ஒரு நடைப் பாதையை அமைத்து அதைக் கீழே கொண்டு வந்து “இதோ சரியாக சிந்திக்கும் அந்த நீதி யுள்ளவர்'' என்று கூறியிருக்கலாமே? ஆகவே அது மனித இனத்தின் மூலமாகவே வரவேண்டும், ஒரு ஸ்திரீயின் மூலமாக வரவேண்டும், ஏனெனில் முதல் நிலையில் அவ்விதமாகத் தான் வந்தது. பாலினத்தின் மூலமாகத்தான் அநீதி கொண்டு வரப் பட்டது; பாலினத்தின் மூலமாகத்தான் நீதியும் கொண்டு வரப் பட்டது. பாருங்கள்? தேவன், விபச்சாரம் இல்லாமல், பாலுறவு இச்சையில்லாமல், மாசற்ற கருத்தரிப்பினால் இயேசு கிறிஸ்துவை கொண்டு வந்தார். மரியாளை நிழலிட்டு பாலினம் மூலமாகவே வந்த இந்த குழந்தையாகிய அதை அவளுக்குள் உண்டாக்கினார். பாருங்கள்? ஆகவே அந்த விதமாகத்தான் இருக்க வேண்டியதாயிருந்தது, அதற்கு வேறெந்த வழியும் இல்லை. ஸ்திரீயினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கி பிரயாணித்துக் கொண்டிருக்கிறான், அவன் பிறக் கையிலே மரித்திருக்கிறான். அது சரியே. அதின் காரணமாகத்தான், நாம் இப்பொழுது அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை கொண்டவர்களாக இருக்கின் றோம் என்று முன்னொரு நாளில் நான் பேசினேன். 31இஸ்ரவேல்... அது... ஒன்றுமே இல்லாத அநேக காரியங்களை நான் பேசுகிறேன், ஆனால் சில சமயங்களில் கர்த்தர் எனக்கு சிலவற்றை அளிப்பார், அது என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்துவிடும். ஆகவே அவர் எனக்கு அதை அளித்த போது, அநேக வருடங்களாக நான் பெற்றிருந்ததை விட அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அன்றொரு நாள் அவர் எனக்கு அதை அளித்த போது, இஸ்ரவேலை (ஒரு அடிமை) நான் பார்த்தபோது, தேவனுடைய பிள்ளைகளாகிய அவர்களுக்கு வீடு கூட இல்லாதிருந்தது. அவர்களுக்கு தேவையாயிருந்த எந்த ஒன்றும்! அழுகின அப்பத்தை போட்டார்கள், அவர்கள் அவர்களுக்கு ஓ, அவர்களுக்கு.... அவர்கள், சமாதானமாக வாழ ஒரு வீடு இருந்து, தங்களுடைய முகத்தின் வியர்வையால் தங்கள் ஜீவனத்திற்காக சம்பளத்தை பெறும்படியாக இருக்குமானால்! ஆகவே, ஒரு நாள், அக்கினி ஸ்தம்பத்தால் வழிநடத்தப் பட்டு வனாந்திரத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசி, ஒரு வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்து அவர்களிடம் கூறினான். அந்த இடத்திற்கு யாருமே சென்றதில்லை, அதைக் குறித்து ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு வாக்குத் தத்தமாக இருந்தது. அதன் பேரில் அவர்கள் விசுவாசித்து அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் அருகாமையில் செல்லும் வரைக்கும் அந்த தீர்க்கதரிசியை அவர்கள் பின்பற்றினர். 32“யேகோவா- இரட்சகர்” என்னும் அர்த்தமுடைய யோசுவா என்றழைக்கப்பட்ட ஒரு சாட்சி அங்கே இருந்தான். அவன் யோர்தானைக் கடந்து அந்த தேசத்துக்குள் சென்று, சரியாக அந்த தீர்க்க தரிசி கூறினபடியே, தேவனுடைய வார்த்தையின்படியே இருந்த அந்த தேசத்தை குறித்த அத்தாட்சியுடன் திரும்பி வந்தான். இரண்டு மனிதர் தூக்கி வரவேண்டியதாக இருந்த அந்த திராட்சைக் குலையை கொண்டு வந்தனர், அந்த தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அசலான பழத்தை அவர்களால் ருசி பார்க்க முடிந்தது. அந்த தேசம் அங்கே இருந்தது என்பது யாருக்குமே தெரியாது, அவர்கள் அதை அப்படியே விசுவாசித்தனர். அவர்கள் விசுவாசத்தால் வெளியே நடந்து வந்து அதை விசுவாசித்தனர். இப்பொழுது, அவர்கள் அந்த தேசத்தை சுதந்தரித்த போது, அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள்! ஒவ்வொரு வரும் சமாதானத்தோடு வாழ ஏதுவாயிருந்தது, ஒவ்வொருவரும் தன்னுடைய சிறு தோட்டத்தை உடையவனாக இருந்தான், அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், முடிவாக முதிர் வயது அவனை அடைந்தது, மரணம் அவனை சுற்றி வளைத்து அவனை எடுத்துக் கொண்டது. பிறகு பரலோக நடைபாதையிலிருந்து கீழே, ஒரு ஸ்திரீயின் மூலமாக மற்றொரு மகத்தான மாவீரர், அவர்களெல் லாரிலும் பெரியவர், இயேசு கிறிஸ்து வந்தார். தேவன் தம்மைத் தாமே மாம்சத்தில் வெளியாக்கிக் கொண்டார். அவர் இஸ்ரவே லிடம், அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மத்தான மக்களாக இருந்தனர் என்று கூறினார். ஆனால் மரணம் அவர்களை நோக்கி இருந்தது, அவர், ''ஆனால் நான் உங்களுக்கு வேறொரு தேசத் தைக் குறித்து கூறு கிறேன். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப் பேன். நீங்கள் உங்கள் தேசத்தில் சந்தோஷமாயிருக்கிறீர்கள், உங்களுக்கு உங்கள் வீடுகள் உள்ளன, உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் அங்கே அடக்கம் பண்ணுகிறீர்கள், அது தான் முடிவு என்பது போலத் தெரிகிறது“ என்று கூறினார். 33யோபு அதைக் கண்டான், “ஒரு மரம் மரித்தாலும் திரும்பத்தழைத்து வாழும். ஆனால் மனுஷன்படுத்துக்கிடக் கிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போன பின் அவன் எங்கே? அவன் பிள்ளைகள் அவனை கனம் பண்ண வந்தாலும் (His Sons come to honour him - ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி - தமிழாக்கி யோன்) அதை அவன் கவனியான். ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் இரகசிய இடத்தில் என்னை மறைத்து ...!'' என்று கூறினான். ”மனுஷன் செத்தபின் பிழைப் பனோ ?'' என்றான். அதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்னதாக, அந்த கல்லறைக்கு அப்பாலே ஏதோ ஒன்றுக்காக அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். தேவன் அவர்களுக்கு ஒரு வீடு, குடும்பம் மற்றும் பிள்ளைகள், மற்றும் ஒரு சபை தீர்க்கதரிசிகள், மற்றும் இந்த காலம் வரைக்கும் மகத்தான மனிதர் மகத்தான காரியங்கள் போன்றவை அளித்தார். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்து தங்களுடைய கல்லறைக்கு சென்றனர். ஆனால் இங்கே ஒருவர் வந்து “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, நான் சென்று ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்று கூறுகிறார். 34யோசுவாவைப் போல, அவன் தன்னுடைய காதேஸ் பர்னேயாவை சந்தித்தான். இஸ்ரவேல் காதேஸ் பர்னேயாவிற்கு வந்த போது... அக்காலத்தில் காதேஸ் உலகத்தின் நியாயஸ் தலமாக இருந்தது - ஒரு பெரிய நீரூற்றிலிருந்து ஏழு நீரூற்றுகள், அதற்கு நியாயத்தீர்ப்பு என்று அர்த்தம் - தேவனுடைய வீடு மற்றும் அதிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லுகின்ற சபை களைப் போன்று. ஆகவே யோசுவா, அத்தாட்சியைக் கொண்டு வருவதற்காக காதேஸ் பர்னேயாவிலிருந்து கடந்து வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றான். இப்பொழுது, இயேசுவும் தம்முடைய காதேஸை சந்தித்தார். அது என்னவாயிருந்தது? நியாயஸ்தலம்! அது எங்கே இருந்தது? கல்வாரியில், அங்கேதான் தேவன் அவரை உலகத்தின் பாவங் களுக்காக நியாயந்தீர்த்தார். அவர்கள் என்ன செய்தனர்? தேவனுக் கான பாவநிவிர்த்தியாகிய மரணத்தை அவர் சந்தித்தார். பாவிகளை தேவனிடம் ஒப்புரவாக்கத்தக்கதாக அவர் மரணத்தை அடைந்து யோர்தான் நதியைக் (மரணம்) கடந்தார். அவர்கள் அவரை அடக்கம் செய்தனர். அவர் மரித்தார், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களுக்கு அவமானம் என்று நினைத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றன. அவர் மரித்தார், பூமிக்கு நரம்புத்தளர்ச்சி உண்டானது. அது அதிர்ந்ததால் கற்கள் மலைகளிலிருந்து உருண்டோடின. அது அதிர்வுற்றுதால் நட்சத்திரங்கள் பிரகாசிக்க முடிமாற்யோயிற்று, சந்திரனால் பிரகாசிக்க முடியவில்லை, பகலின் நடுவேளையிலே சூரியன் மறைந்தது. அவர் மரித்தார்! ஒரு ரோமன் பத்து பவுண்ட் எடையுள்ள ஈட்டியை எடுத்து அதை அப்படியே அவருடைய இருதயத்திற்குள் முழுவதுமாக குத்தி அழுத்தித் திணிக்கும் அளவிற்கு அவர் மிகவுமாக மரித்துக் கிடந்தார்; தண்ணீரும் இரத்தமும் வந்தன. அவர் மரித்திருந்தார். அவர் யோர்தானைக் கடந்தார். அவர்கள் அவரை ஒரு கல்லறைக்குள் வைத்து நூற்றுக் கணக்கானோர் ஒரு கல்லைப் புரட்டி வைத்து அதை அடைத்தனர், அவர் மரித்திருந்தார்! அதற்கு மேலாக ஒரு ரோம் முத்திரையை அவர்கள் போட்டனர். 35ஆனால் ஒரு ஈஸ்டர் காலையில் அவர் யோர்தானைக் கடந்து திரும்பவுமாக வந்து ''மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்!'' என்று கூறினார். அவர்களில் சிலர், ''நாம் ஒரு ஆவியைக் காண்கிறோம்'' என்றனர். அவர், “என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு மாம்சமும் எலும்புகளும் இருக்கிறது போல ஒரு ஆவிக்கு இருக்குமா?'' என்றார். மேலும், ”புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடம் உண்டா? எனக்கு ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாருங்கள்'' என்றார். அவர்கள் மீன்கண்டத்தையும் அப்பமும் அவருக்கு கொடுத்தார்கள். அவர் அதை புசித்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்! அவர் என்னவாக இருந்தார்? நாம் செல்லப்போகின்ற ஒரு தேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சியை அவர் திரும்பக் கொண்டு வந்தார். அவர் என்ன செய்தார்? யோசுவாவைப் போல அதற்குரிய அத்தாட்சியை அவர் கொண்டு வந்தார். அவர், ''இப்பொழுது, அதற்கான அத்தாட்சி உங்கள் தேவையாயிருக்கிற தென்றால், 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப் புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறு வீர்கள்? என்னை உயிரோடெழுப்பினது அந்த அத்தாட்சிதான். உங்களுடைய சுதந்தரத்தின் அச்சாரத்தை நான் உங்களுக்குத் தருவேன்'' என்று கூறினார். அப்பொழுது என்ன சம்பவித்தது? பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியானவர் விசுவாசியின் மீது வந்தார். நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்மை நாமே மரித்தவர்களாக எண்ணி ஞானஸ் நானத்தில் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் அவருடன் எழுப்பப்பட்டோம். எதற்காக? ''உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரத்தக்கதாக''. இன்றிரவு அங்கேதான் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் (சரீரப்பிர காரமாக அல்ல) ஆவிக்குரிய பிரகாரமாக, நம்முடைய சிந்தை கள், நம்முடைய நினைவுகள், நம்முடைய ஆத்துமாக்கள் உலகத்தின் கவலையிலிருந்து சரியாக இப்பொழுதே அப்பாற் பட்டிருக்கிறது. நாம் எங்கேயுள்ளோம்? ''கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே''. அதற்குள்ளாக நாம் எப்படிச் செல்கிறோம்? ''ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்''. காணப்படாத தேவனுடைய ராஜ்யம்! 36நாம் அதற்குள்ளாகச் சென்று திரும்பி பார்த்து நாம் எப்படி யெல்லாம் பொய் சொல்லுகிறவர்களாக, திருடுபவர்களாக, ஏமாற்றுபவர்களாக, புகை பிடிப்பவர்களாக, தவறான காரியங் களை செய்பவர்களாக இருந்தோம் என்பதைக் காண்போம். நாம் அதிலிருந்து எழுப்பப்பட்டுள்ளோம். நாம் உன்னதங்களிலே இருக்கிறோம். அது என்ன? அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு நாளிலே நாமும் ஒன்றைப் பெற்றிருப் போம் என்பதற்கான அத்தாட்சி. அதுவே, அது உயிர்த்தெழு தலின் சரியான அத்தாட்சியாகும், ஏனெனில் இயல் திருமுறை யிலே (Potentially) நாம் ஏற்கெனவே அவருடனே எழுந்து விட்டோம், இயல் திறமுறையிலே நாம் ஏற்கெனவே மரித்து விட்டோம். வழக்கம் போல ஜீவிக்கும் வில்லியம் பிரன்ஹாம் இப்பொழுது இல்லை, அவர் சுமார் முப்பதிற்கு மேலான வருடங்களுக்கு முன்னர் மரித்து விட்டார். இப்பொழுது அது புதிய சிருஷ்டியாக உள்ளது. வழக்கம் போல இருந்த ஆர்மன் நெவில் இப்பொழுது இல்லை, அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் மரித்து விட்டார். இப்பொழுது இருப்பது புதிய சிருஷ்டி யாகும். ஆர்மன் நேவில் மரித்து விட்டார், அந்த குதிரைப் பந்தயம் செல்பவர், சூதாட்டம் ஆடினவர், அல்லது என்னவா யிருந்தாலும் சரி, ஒருகாலத்தில் இருந்த அந்த மனிதன் மரித்து விட்டார். சகோதரன் நெவில் அப்படிப்பட்டவர் அல்ல; எனக்குத் தெரியாது. அவர் எப்படிப்பட்டவராயிருந்திருந்தாலும், அவர் எல்லாவற்றிலும் குற்றவாளி. ''ஒன்றில் தவறினால் எல்லா வற்றிலும் குற்றவாளியாயிருப்பான்''. எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சரி, நீ ஒரு பாவிதான், அப்படித்தான் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் மரித்திருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உலகத்தின் காரியங்களில் அன்பு கூருகிறீர்கள். நீங்கள் இங்கே இருப்பதாக எவ்வளவாக அறிக்கையிட்டாலும் அதனால் ஒரு உபயோகமும் இல்லை, நீங்கள் உலகத்தை இன்னுமாக நேசிக்கின்ற வரையில் நீங்கள் இங்கே மேலே இல்லை, நீங்கள் இன்னுமாக கீழாக அங்கே தான் இருக்கிறீர்கள். “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால் தேவனுடைய அன்பு அவனுக் குள்ளாக இன்னுமாக பிரவேசிக்கவேயில்லை.'' 37ஆனால் நீங்கள் அதற்கு மேலே உன்னத காரியங்களுக்காக கடந்து சென்று மேலே உள்ள காரியங்களின் பேரில் உங்கள் அன்பு இருக்குமானால், எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தீங்கு செய்யாது என்ற நிச்சயமிருக்கட்டும், எந்த ஒரு காரியமானாலும், மரணம் கூட... உங்களுக்கு ஒன்றுமே செய்யாது ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடனே எழுந்து இப்பொழுது நீங்கள் உன்னதங் களில் அவரோடு அமர்ந்திருக்கிறீர்கள் நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை, அந்த அச்சாரம், கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அவருடன் கூட உயிர்த்தெழுதலில் எழுந்து விட்டீர்கள். நான் எங்கிருந்தேன் என்பதை திரும்பிப் பார்த்தால், இப்பொழுது இதற்கு மேலாக நான் இருக்கிறேன். எப்படி? அவர் தம்முடைய கிருபையினால் என்னை மேலே தூக்கி எடுத்தார், ஆகவே இப்பொழுது நான் கிறிஸ்துவுக்குள்ளாக உன்னதங்களில் அமர்ந்திருக் கிறேன். ஓ, என்னே! உங்களுக்கு புரிகின்றதா. அப்பொழுது வேதாகமம் உங்களுக்கு புதிய புஸ்தகமாகின்றது. அப்பொழுது நீங்கள் அதை ஆவிக்குரிய கண்களாலும் ஆவிக் குரிய புரிந்து கொள்ளுதலாலும் வாசிக்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் பெயற்சொல்களையும், (nouns) பிரிதி பெயர் சார்ந்த சொற் களையும் (Pronouns) மற்றும் சந்திப்புகளையும் (junctions)... மற்றும் இணையிடைச் சொற்களையும் (conjuctions) இன்னும் மற்றவை களையும் வேதாகமத்தில் நீங்கள் காண்பீர்கள். ஓ, அது கூறுவதெல்லாமே... சிலர் ''அது தனக்குள்ளாக முரண்பாட்டைக் கொண்டிருக்கிறதே“ என்று கூறலாம்; அப்படி யென்றால் நீங்கள் இங்கே இந்த பகுதியை வாசிக்கின்றீர்கள். சற்று மேற் பகுதிக்கு வந்து அதை வாசித்துப்பாருங்கள், அப்பொழுது அது வித்தியாசமாக இருக்கும். புரிகின்றதா? நிச்சயமாக அது உண்மை. நீங்கள் ஆவிக்குள்ளாக அதை வாசித்தால் அது முழுவதுமாக ஒரு புதிய காரியமாக இருக்கும். ஆம். இதோ இந்த கேள்வி ஒரு கேள்வியாக இருக்கவில்லை, அது கூறுவது: 38நான் கர்த்தரைக் கண்ட வரைக்கும் அநேக வருடங்களாக நான் பாவத்தில் வாழ்ந்தேன். சகோதரன் பிரன்ஹாம், தயவு செய்து... நான் மறுபடியும் பாவம் செய்தேன். ஆகவே இந்த பரிசுத்த ஸ்தலத்தில் உங்களுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதியற் றவன். மறுபடியும் முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க் கைக்கு நான் கொண்டுவரப்படமுடியுமா என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள். சகோதரன் பிரன்ஹாம், தயவு செய்து எனக்கு உதவுங்கள், எனக்குள்ளாக ஒரு பிசாசு இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள்! நீர் தாமே என் மீது கைகளை வைத்து என்னைத் திரும்பவுமாக கொண்டு வருவீர்களா? இதோ, ஒரு கேள்வி இருக்கிறது, சற்று முன்னர் அதை வாசித்த போது அதை நான் கவனிக்கவில்லை. இதோ ஒரு கேள்வி. இப்பொழுது அந்த நபர் இங்கே இருப்பாரானால்... இதை நான் உங்களுக்கு வாசிக்கட்டும்: நான் கர்த்தரை கண்ட வரைக்கும் அநேக வருடங்களாக நான் பாவத்தில் வாழ்ந்தேன். தயவு செய்து சகோதரன் பிரன்ஹாம்... (பாருங்கள்?)... நான் மறுபடியும் பாவம் செய்தேன். ஆகவே இந்த பரிசுத்த ஸ்தலத்தில் உங்களுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதி யற்றவன். மறுபடியும் முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க்கைக்கு நான் கொண்டு வரப்பட்ட முடியுமா என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள். ஆம். நீங்கள் பாவம் செய்யவில்லை (என் நண்பரே) தேவனுக்குள் இருக்குமட்டும் நீங்கள் புதிய வழிக்கு திரும்பக் கொண்டுவரப் படமுடியும். புதிய வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டுவரப் படமுடியாதபடிக்கு அந்த நிலைக்கு நீங்கள் பாவம் செய்திருப் பீர்களானால், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்பட் (restore) விரும்ப மாட்டீர்கள். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் உங்கள் இருதயத் துடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒன்று இருக்கும்வரைக்கும், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படும் பாதையில் இன்னுமாக இருக்கின்றீர்கள். ''சிறிய ஒன்றுக்கு குற்றவாளி முழுவதற்கும் குற்றவாளி யாயிருக்கிறான்''. நான் அநேக முறை பாவம் செய்திருக்கிறேன், நாம் செய்ய விரும்பாத அநேக காரியங்களை நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் செய்கின்றோம். 39நம்முடைய இருதயத்தில்..... நீங்கள் அவ்விதமாக இருக்க விரும்பவில்லை. இல்லையென்றால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள். பாருங்கள்? இதுவே தேவன் உங்களுடன் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி யாகும். (ஒருக்கால் நீங்கள் பயந்து போயிருப்பீர்கள், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படமுடியாது என்று சாத்தான் உங்களிடம் கூறிக்கொண்டிருந்திருப்பான். அவன் பொய் சொல்கிறான், நிச்சய மாக அவன் பொய்யைக் கூறுகிறான்). ஏனெனில், கவனியுங்கள், கூப்பிடுகின்ற ஒரு ஆழம் இருக்குமானால், அதற்கு பதிலளிக்கிற ஆழம் ஒன்று இருந்தேயாக வேண்டும். ஏதோ ஒன்றிற்காக ஒரு பலி இருக்குமானால், அந்த ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதற்கான பசி உங்களிடம் இருக்காது. பாருங்கள்? அநேக முறை நான் கூறியிருப்பது போல், ஒரு மீனுக்கு அதனுடைய முதுகில் நீந்த பயன்படும் உறுப்பு இருக்கும் முன்னர், அது நீந்தத்தக்கதாக முதலாவதாக தண்ணீர் இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த மீனுக்கு அந்த நீந்த உதவும் உறுப்பு இருக்கவே இருக்காது. பூமியிலே ஒரு மரம் இருப்பதற்கு முன், ஏன்? அந்த மரம் வளரவேண்டுமாயின், அதற்கு முன்பே ஒரு பூமி இருக்க வேண்டும். 40இப்பொழுது, ஒரு சிருஷ்டிப்பிற்கு முன், அந்த சிருஷ்டிப் பைச் சிருஷ்டிக்க ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைக் காணமுடிகிறதா? நீங்கள் தேவனிடம் திரும்புவதற்காக விருப்பமும் பசியும் கொண்டிருக் கிறவர்களாக இருக்கும் பட்சத்தில், உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் தேவன் எங்கோ இருக்கின்றார், பாருங்கள், இல்லையென்றால் நீங்கள் பசி, வாஞ்சையுடைவர் களாய் இருக்கமாட்டீர்கள். ஒரு சிருஷ்டிகர் இருக்கின்றார்! இப்பொழுது, நீங்கள்... நீங்கள் திரும்பவும் வரமுடியாத படிக்கு நீங்கள் கடந்து செல்கிற ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் முன்பிருந்த நிலைக்கே மறுபடியுமாக சென்று விடுகின்ற நிலைதான் அது. அது எதைக் காண்பிக்கிறதென்றால் நீங்கள் கிருபை யிலிருந்து விழுந்து போனீர்கள் என்பதே. பின்மாற்றம் இழந்து போகப்பட்ட நிலை அல்ல. பின்மாற்றமடைதல் இழந்த ஒரு நிலை என்பது எங்குள்ளது என்றும் அதை யாராவது வேதப்பூர்மாக என்னிடமாக கூறி நிருபிக்க நான் விரும்புகிறேன். இஸ்ரவேலர் பின்மாற்றமடைந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் உடன்படிக்கையை இழக்கவில்லை, அவர்கள் தங்கள் துதிகளையும் சந்தோஷத்தையும் இழந்தனர். உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தாவீது எடுத்துக் கொண்ட போது தாவீது இரட்சணியத்தின் (Salvation) சந்தோஷத்தை இழந்தான், ஆனால் தன்னுடைய இரட்சணியத்தை (Salvation) இழக்கவில்லை. “என் இரட்சணியத்தை (Salvation) திரும்பவும் எனக்குத் தந்து'' என்று அவன் ஒருக்காலும் கூறவில்லை. அவன் ”என் இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்து'' என்று தான் கூறினான். 41ஓ, இன்றைக்கு பிரமாணத்தை மீறி அனுசரித்தல் கொள்கை (legalism) போன்றவை மிக அதிகமாக உள்ளது, ''தொடாதே, ருசிபாராதே'' போன்றவை. நீங்கள் காரியங்களை சரியான அனுசரிப்பின்படியே (Legalism) செய்வதில்லை. நான் சபைக்கு இன்றிரவு முழுவதும் சரியான அனுசரித்த லோடு வரவில்லை. நான் களைப்புற்றிருக்கிறேன், நான் நரம்புத் தளர்ச்சியுற்றவனாக இருந்திருக்கிறேன், வெளியே எனக்காக இருக்கின்ற ஏதோ ஒன்றிற்காக நான் ஆச்சரியத்துடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன், என் இருதயம் எரிந்து கொண் டிருக்கிறது, என் இருதயம் விரைவாக துடிக்கின்ற அளவிற்கு காரியம் இருக்கிறது. சரியாக இந்த நிமிடத்தில் எனக்கு வலியும், மேலும் கீழும் முன்னும் பின்னும் வலியெடுக்கும் தசைப்பிடிப்பு இங்கே இருக்கிறது. பலவீனம், நரம்புத்தளர்ச்சி, நடுக்கம்; இங்கே பிடித்துக்கொண்டு பிழிகின்றது; என் காலணிகளில் என் கால்விரல் வலிக்கின்றது. எல்லா வலியும் இருந்தது. ஆனாலும் இங்கே வந்து விட்டேன். அப்படியானால் நான் ஏன் இங்கு வந்துள்ளேன்? ஏனெனில் நான் தேவனை நேசிக்கிறேன். வாழ் வோ அல்லது சாவோ, அவருக்காக நான் இங்கே நிற்க வேண்டும். நான் அப்படியாக செய்ய வேண்டும் என்பதனால் அல்ல. நான் செய்தேனா அல்லது செய்யவில்லையா என்று அவருக்கு ஒரு பொருட்டல்ல. நான்... எப்படியாயினும், நான் மரித்தால் நான் பரலோகம் செல்வேன். நான் இங்கே வருகின்றேன். ஏனென்றால் நான் அவரை நேசிக்கின்றேன். நீங்கள் தேவனை நேசிப்பதால் தான் அவருக்கு ஊழியம் செய்கிறீர்கள், நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனென்றால் அவ்வளவாக அவரை நீங்கள் நேசிப்பதால் தான்! 42என் மனைவி என்னை விவாகரத்து செய்து விடுவாளோ என்ற பயத்தில் நான் என் மனைவிக்கு உண்மையாயிருக்கிறேன் என்றல்ல. நான் அவளை நேசிப்பதால் நான் அவளுக்கு உண்மை யாயிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவளைத் தவிர உலகத்தில் வேறெந்த ஸ்திரீயும் தெரியாது. அதன் காரணமாகத்தான் நான் அவளுக்கு உண்மையாயிருக்கிறேன். நான் ஒரு தவறு செய்து, நான் ஏதோ தவறு செய்து விட்டேன் என்று அவர்கள் நினைக்கும் போது, நான் இவளிடம் வந்து, “மேடா, தேனே, அவ்விதமாக நான் செய்ய வேண்டும் என்று விழையவில்லை'' என்று கூறும் போது அவள் அதை மன்னித்து விடுவாள், அவள் அவ்விதமாகச் செய்வாள் என்று நான் அறிவேன். நான் அவளை மன்னித்து விடுவேன்; நான் அவளை நேசிக்கிறேன். நானும் அவளை மன்னிப்பேன்; அவளும் என்னை மன்னிப்பாள். ஆனால் நான் அந்த விதமாக தவறு செய்யமாட்டேன், ஏனெனில் அவளை நான் மிகவுமாக நேசிக்கிறேன். ஆதலால் நான் செய்ய மாட்டேன். அவள் என்னை மன்னிப்பாள் என்று நான் நினைக்காத்தால் அல்ல, அவளை நான் மிகவுமாக நேசிப்பதாலே நான் முதலாவதாக அவ்விதமாக செய்யவில்லை. நான் அந்த விதமாக அவளை நேசிக்கின்ற வரையில், நான் அந்த தவறைச் செய்யமாட்டேன்; அவள் என்னிடமாக அன்பு கூரவேண்டிய விதத்தில் அவள் என்னை நேசித்தால் அவளும் கூட அவ்விதமாக செய்யமாட்டாள். ஆகவே நீ கர்த்தரை உன் முழு இருதயத்தோடு அவரை நேசித்தால் இந்த காரியங்களைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. நீங்கள் தவறு செய்யும் போது, நீங்கள் மனப்பூர்வமாக பாவம் செய்யவில்லை, நீங்கள் தவறான ஏதோ ஒன்றை செய்துவிட்டீர்கள். பாருங்கள், நீங்கள் பின்னாலே சென்றுவிட்டீர்கள். உண்மையாக, நீங்கள் இங்கே மேலே ஐக்கியத்தில் இருந்தீர்கள், இங்கிருந்து மறுபடியுமாக நீங்கள் இந்த தாறுமாறுக்குள் கீழ் நிலைக்கு சென்று விட்டீர்கள். 43ஆனால் அது என்ன? அது ஒரு கழுகு போல. ஒரு சமயம் நான் கண்ட... இங்கே சின்சின்னாட்டி மிருகக் காட்சி சாலையில், நான் சாராளை அழைத்து அதில் சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு காட்சியைக் கண்டு அது என்னை பாதிப்படையச் செய்யு மானால், அது மிருகங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதே ஆகும். ஒரு கூண்டுக்குள் எந்த ஒன்றும் அடைக்கப்பட்டிருப்பதை நான் காணும் போது என்னால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது - சிறு பறவைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் கூட. பெண்களாகிய நீங்கள் அதைப் போன்ற சிறு பறவைகளை வைத்திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன், நீங்கள் அவைகளை வெளியே விட்டு விடுங்கள். நான் ஒரு சிறு பையனாக இருக்கையில், “எனக்கு ஒரு தருணம் கிடைக்குமானால், நான் ஒரு மனிதனாக ஆகும்போது, நான் ஒவ்வொரு வீட்டிற்குள் மெதுவாக நுழைந்து அந்த சிறு உயிரினங்களை வெளியே எடுத்து விட்டு விடுவேன்” என்று கூறுவதுண்டு. ஆம், ஐயா. நான் கூறினேன். அங்கே சூரிய உஷ்ணத்தில் அவை இருக்கின்றன, இவர்கள் அதைப் பார்த்து 'ஹா, ஹா, ஹா“ என்று சிரிக்கின்றனர். அங்கே ஒரு பெண் ஒரு முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப் பாள், பாவம் அந்த சிறு பறவை அங்கே வெப்பத்தில் பொசுக்கப்பட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும். அந்த பறவையால் ஒன்றுமே செய்யமுடியாது, அது அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கத்தான் முடியும். அது அதற்காக பிறக்கவில்லை! நான் ”உம், நான் மாத்திரம் மெதுவாக நுழைந்து அதை வெளியே திறந்து விட முடியுமானால், அது நீண்ட காலம் அதில் இருக்காது'' என்று நினைத்தேன். பாருங்கள்? 44கூண்டில் அடைக்கப்பட்ட எந்த ஒன்றையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை. ஒரு மனிதன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு பிறகு ஏதோ ஒரு சபைக் கோட் பாட்டிற்குள் அடைபட்டுக்கிடப்பதை காண்பது எனக்கு வெறுப் பாக இருக்கிறது “என்னால் ஆமென் என்று சொல்ல முடியாது. அதில் எனக்கு விசுவாசம் கொள்ள முடியவில்லை. 'அதை விசுவாசிக்காதே' என்று போதகர் கூறுகிறார்”'. ஓ, என்ன, அது! நீ சுதந்தரமாய்ப் பிறந்த ஒருவன். அப்படியானால் ஒரு பெரிய கழுகைக் குறித்தென்ன? அது ஒரு உன்னதப் பறவையாகும். அது மேலே மேகங்களுக்கு மேலே வாழ்கின்ற ஒன்று. ஒரு காலையில் அது அங்கே தான் செல்கின்றது. மிக உயரத்தில் அது பறக்கும். வேறெதுவுமே அதைப் பின் தொடர்ந்து பறக்க முடியாது! எந்த ஒரு பறவையும்... அந்த கழுகைப் பின் தொடர்ந்து பறக்க முயலுமானால் அது சிதறிப் போய்விடும். அது விசேஷமாக உருவாக்கப்பட்ட பறவை யாகும். அந்த கழுகை யாரோ சிலர் மனிதனால் உண்டாக்கப்பட்ட கண்ணியில் சிக்க வைத்து, இந்த பெரிய கழுகைப் பிடித்து இந்த கூண்டிற்குள் அடைத்துப் போட்டனர். பாவம், இந்த பரிதாபத் திற்குரியது. நான் அதை நோக்கிப் பார்த்தேன், என் இருதயம் அப்படியே எரிந்தது. அது வேறு பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியே செல்ல வேண்டுமென்று அதற்குத் தெரியாதிருந்தது. அது அப்படியே அங்கே... எப்படி மேலே எழும்ப முடியும் என்பதுதான் அதற்கு தெரியும். அது தன் இறக்கைகளை அடிக்கும். மேலே எழும்பும், நேராக இரும்பு கம்பிகளில் தன் தலையை மோதும். அதன் இறக்கைகளிலிருந்து சிறகுகள் விழும், இறக்கைகளை விரித்து அசைக்கும், அது தன் தலையில் இரத்தம் வடியும் அளவிற்கு அவ்விதமாக செய்து கொண்டிருக்கும். அது மேலே உள்ள இரும்புக் கம்பியில் வேகமாக மோதி அப்படியே வேகமாக கீழே விழும். அது அப்படியே இருந்து அதன் சோர்ந்து போயிருக்கின்ற கண்களை உருட்டி வானத்தை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கும், ''நான் அதோ அந்த இடத்தைச் சேர்ந்தவன். அதோ என் வீடு. அந்த இடத்திற்காகத்தான் நான் பிறந்திருக்கிறேன். ஆனால், பார், எனக்கும் அதற்கும் நடுவில் ஒரு கூண்டு இருக்கிறது. ஆம், எனக்குத் தெரிந்த ஒன்றேயொன்று என் சிந்தையை அதற்கு நேராக வைப்பதேயாகும், இதோ நான் வருகிறேன்.'' அப்பொழுது அது எழும்பும். ''படார்'' என்று மோதும் சத்தம் கேட்கும், திரும்பவும் அது கீழே விழுந்து விடும். 45'ஓ, என்னே , அது பயங்கரமாயிருக்கிறதே!'' என்று நான் நினைத்தேன். ''அவர்கள் அதை எனக்கு விற்றால் நலமாயிருக்கும். நான் என் ஃபோர்ட் காரை அடகு வைத்து அதை வாங்கி அதை சுதந்தரமாக விட்டு விடுவேன்'' என்று நினைத்தேன். பாருங்கள்? ஓ, அந்த காட்சி என்னை வேதனையுறும்படிக்குச் செய்தது. அந்த பரிதாபத்திற்குரிய பெரிய பறவை, அது சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது.... ''நான் கண்டதிலேயே மிகப் பயங்கரமான காட்சி இதுதான்'' என்று நான் நினைத்தேன். இல்லை, நான் அதைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், நான் கண்டதிலேயே மிகப்பயங்கரமான காட்சியானது தேவனுடைய குமாரனாக இருக்க ஒரு மனிதன் பிறக்கிறான். ஆனால் பிறகோ அவன் ஏதோ ஒரு கோட்பாடு என்னும் கூண்டுக்குள் அடை பட்டுப் போகிறான். அங்கேயிருந்து அவன் மேலே நோக்கிப் பார்த்து தான் உண்மையாகவே ஊழியம் செய்ய விரும்புகிற ஒரு தேவனைக் காண்கிறான். ஆனால் அவனால் அதைச் செய்ய முடிய வில்லை. அவ்விதமாகச் செய்ய அவனை அவர்கள் விடமாட்டார் கள். பாருங்கள், அவன் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறான். அது ஒரு மோசமான காரியமாகும். 46ஆம், ஆம், சகோதரியே, சகோதரனே, இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, நீங்கள் இங்கே விழுந்து போயிருப்பீர் களானால், அதனாலே நீங்கள் இழந்து போகப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள், ஒரு கூண்டிற்குள் சென்றிருக்கின்ற ஒரு கழுகுதான், அவ்வளவே. நீங்கள் இங்கே மறுபடியுமாக பாவத்தில் மேலும் கீழுமாக அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதிலே இருக்க உங்களுக்கு விருப்பமில்லை, அதன் காரணமாகத்தான் நீங்கள் மேல் நோக்கிப் பார்க்கிறீர்கள். இதோ உங்கள் நிலை ''ஓ, சகோதரன் பிரன்ஹாம், ஒரு காலத்தில் நான் அங்கே மேலே ஜீவித்துக் கொண்டிருந்தேன், இங்கிருந்து வருவதற்கு ஒரு வழி இருக்கிறதா?'' ஆம். ஒரு நாளில் நான் (ஓ, ஒரு சிறு பையனாக இருக்கையில்) ஒரு பண்ணைக்கு பின்புறமாக நடந்து சென்றது என் நினைவிற்கு வருகிறது, இங்கே... யாரோ ஒருவர் ஒரு காகத்தை அந்த தானியப் பயிரிடம் செல்ல முடியாதபடிக்கு கட்டி வைத்திருந்தார். அந்த பரிதாபமான காகம் ஏறக்குறைய மரிக்கும் நிலையில் இருந்தது. அந்த விதமாக கேவலமான காரியத்தை செய்யும் நிலைக்கு நான் மட்ட மானவன் அல்ல. அவன் அந்த பரிதாபமான காகத்தின் ஒரு காலைக் கட்டியிருந்தான், அந்த காகத்திற்கு தின்பதற்கென எல்லாமே அதைச் சுற்றிலுமிருந்தன, ஆனால் அந்த காகத்தால் எதையுமே சாப்பிட முடியவில்லை. அந்த விவசாயி அதை அப்படியே விட்டுச் சென்றுவிட்டான். அந்த காகம் எழுந்திருக்கவே முடியாமல் மிகப்பரிதாபமான நிலையில் காணப்பட்டது. அதனால்... மற்ற காகங்கள் பறந்து வந்து “கா, கா, கா'' என்று இந்த காகத்தின் மேலிருந்து கூறினது. வேறுவிதமாகக் கூறினால், ''எழும்பி வா, ஜானி காகமே! குளிர் காலம் வருகின்றது, நாம் தென்பாகம் சென்று விடுவோம்'' என்பதே. ஆனால் அந்த காகத்தால் எழும்பவே முடியவில்லை, அது கட்டப்பட்டிருந்தது. 47ஒரு நாளிலே ஒரு குறிப்பிட்ட ஆள் அங்கே வந்து அந்த பரிதாபமான காகத்தைக் கண்டான். ஆகவே அவன் அதனிடம் சென்று அதைப் பிடித்து அதைக் கட்டவிழ்த்து “ஓ, பையனே, நீ விடுதலையாயிருக்கிறாய்' எழும்பிச் செல்” என்றான். பாருங்கள்? ஆகவே அப்பொழுது, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அந்த காகம் சுற்றுமுற்றும் நடந்து கொண்டிருந்தது. அங்கே திரும்பவுமாக அந்த காகங்கள் வந்து “ஜானி காகமே! எழும்பி வா, கா, கா, கா! நாம் தென் பாகம் சென்று விடுவோம், குளிகாலம் வருகின்றது. இல்லையென்றால் நீ குளிரில் உறைந்து போய் மரித்துவிடுவாய்'' என்று கூக்குரலிட்டன. இந்த காகமோ, “என்னால் அப்படிச் செய்யமுடியவில்லை'' என்றது. பாருங்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்தே அதற்கு பழகிவிட்டது, பாருங்கள், அது தான் இன்னுமாக கட்டப்பட்டுத் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தது. இந்த கேள்வியை எழுதின சகோதரனே, சகோதரியே, நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருக்கால் நீங்களும் கூட நினைக்கலாம். பிசாசு உங்களை அங்கே கட்டிப்போட்டிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவன் பொய் சொல்கிறான். ஒரு காலத்திலே பூமிக்கு ஒரு மனிதன் வந்தார், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அவர் உங்களை கட்டவிழ்த்து விட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களல்லவா, நீங்கள் இன்னுமாக அங்கேயே இருக்க வேண்டியதில்லை, தேவையில்லை, இல்லை, ஐயா, நீங்கள் விடுதலையாகிருக்கிறீர்கள். அது சரி. உங்கள் பாவங்களை எடுத்துப் போட உங்களுடைய இடத்தில் அவர் மரித்தார். நீங்கள் அவர் பேரில் விசுவாசத்தை வைத்து, உங்கள் இறக்கைகளை அடித்து அந்த மற்றவர்களோடு பறந்து செல்லுங்கள். அந்த பிசாசினு டைய பள்ளத்தில் தங்கிவிடாதீர்கள். கூடாது ஐயா. 48இப்பொழுது, நீர் தாமே என் மீது கைகளை வைத்து அதிலிருந்து என்னை விடுவிப்பீர்களா? அருமை சகோதரியே அல்லது அருமை சகோதரனே, நிச்சயமாக, நான் உங்கள் மீது கைகளை வைப்பேன், ஆனால் அது உங்களை விடுதலையாக்காது. உங்களை விடுவிப்பது எதுவென்றால், நீங்கள்... நீங்கள் ஏற்கெனவே விடுதலையாயிருக்கிறீர்கள் என் பதை புரிந்து கொள்கிறதினாலே. நீங்கள் ஏற்கெனவே கட்ட விழ்க்கப்பட்டிருக்கறீர்கள். விடுதலையாயிருக்க வேண்டுமே என் பதை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் ஏற்கெனவே விடுதலையாகியிருக்கிறீர்கள்! இயேசு உங்களை விடு வித்துவிட்டார். நீங்கள் மறுபடியுமாக அடிமைத்தனத்தின் நுகத்திலே சிக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருக் கிறீர்கள். நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என் கைகளை உங்கள் மீது வைப்பது ஒரு வழக்கமேயாகும். நாங்கள் அதைச் செய்யலாம். அது என்னால் அதைச் செய்யக் கூடும், ஆனால் அவர் உனக்காக செய்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்வரை கைகளை வைப்பது உங்களை விடுதலையாக்காது; “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று நான் மாத்திரமே கூறிக்கொண்டிருப்பேன். 49ஆம், நீங்கள் விசுவாசத்தாலே அவர் மீது உங்கள் கைகளை வைத்து ''கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள், மேலே எழும்புங்கள். அது சரி, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். பாருங்கள், ''தன் பாவங்களை மறைத்து வைக்கிறவன் வாழ்வடையமாட்டான், தன் பாவங்களை மறைக் கிறவன். தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன்...'' நீங்கள், ''நான் பாவம் செய்துவிட்டேன், நான் தவறாயிருக்கிறேன்'' என்று கூற விரும்புகிற போது அதில்தான் நீங்கள் விடுதலையும் நீதிமானாக்கப்படுதலையும் பெறுகிறீர்கள். அதைத் தான் நீங்கள் இங்கே கூறியிருக்கிறீர்கள்: நான் விழுந்துபோய் விட்டேன், நான் பாவம் செய்தேன். நான் பயங்கர தவறாயிருக்கிறேன்! நான் மறுபடியுமாக முழுவதுமாக சரியாவதற்கு ஒரு வாய்ப்பு எனக்கு இருக்கிறதா? நிச்சயமாக! நீங்கள் அதை வாஞ்சித்த அந்த நிமிடத்தி லேயே, அது உங்களை மேலே தூக்கியெடுக்க உயிர்காக்கும் மிதவைப் பொருள் கட்டப்பட்டுள்ள கயிறை தேவன் உங்களிடம் கீழே விட்டிருக்கிறார் என்பதை இது காண்பிக்கின்றது. ஜெபம் மற்றும் விசுவாசம் என்னும் அவருடைய கயிற்றைக் கொண்டு மேலே வந்து, நேராக மற்ற கழுகுகளைச் சென்றடையுங்கள், சிறகடித்துச் செல்லுங்கள். அது சரி. 50ஆம், கைகளை மேலே வைத்தல், அது - அது ஒரு மகத்தான காரியமாகும், அதை நான் விசுவாசிக்கிறேன். கைகளை வைத் தலில் எனக்கு விசுவாசம் உண்டு, நிச்சயமாக நான் விசுவாசிக் கிறேன். ஆனால் அதுதான் காரியங்களைச் செய்கின்றது என்ப தல்ல. நான் வாரம் முழுவதும் வாரத்திற்குப் பிறகும் நான் ஜனங் களின் மீது கைகளை வைக்கலாம், ஆனால் கிறிஸ்து உங்களுக்காக செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற வரையிலும் அது உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யாது. கைகளை வைத்தல் என்பது நான் செய்யும்படிக்கு எனக்களிகப்பட்ட அதிகாரமாகும். அவர்கள் மூப்பர்கள் மீது கைகளை வைத்தார்கள். அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்தனர். தேவனுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும், அதற்கு தங்கள் விசுவாசத்தை செலுத்தினர், அதற்கு தங்களுடைய நம்பிக்கையை அளித்தனர். பாருங்கள்? சில சமயங்களில், காரியங்கள்... அநேக முறை நான் மிகவுமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன். நான் நான்... கடந்த இரவு. நான் கருத்துக்களுக்கு நடுவாக நிறுத்திக்கொள்கிறேன், எந்த வழியாக நான் திரும்ப வேண்டுமென்று என்று எனக்குத் தெரியவில்லை. நானும் கூட, நான் கருத்துக்கு இடையில் இருக்கிறேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இது இங்கே சரீரப்பிர காரமாக சபை அல்லது ஆவிக்குரிய சபை இங்கே இருக்கிற தென்று நான் நம்புகிறேன், இதை அவர்கள் பதிவு செய்யவில்லை யென்று நான் யூகிக்கிறேன். ஆகவே நான் விரும்புவதை கூறுவேனாக. அவர்கள்... 51நான் உங்களிடம் மனம்விட்டு பேச வேண்டுமென்று விரும்பினேன், எப்படியாயினும் நான் அதை கூறுவேன் என்று விசுவாசிக்கிறேன். வேத வசனத்தோடே ஒரு குறிப்பையும் நான் இங்கே எழுதி வைத்திருந்தேன், அது... அப்படி இல்லையென்றால், முடிவு கால சுவிசேஷகம் என்பதன் பேரில், முடிவு கால சுவிசேஷகம் என்றால் என்ன என்பதைக் குறித்து பேசுவதாக இருந்தேன். இன்னொரு நாளிலே அதை பேச நான் வைத்து விடுகிறேன். என் இருதயத்திலிருந்து, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களிடம் பேச நான் விரும்புகிறேன். நான் கருத்துக்களின் நடுவில் இருக்கிறேன், எந்த வழியாக திரும்புவது என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஜெபம் எனக்குத் தேவை. நான் உங்களிடம் சில நிமிடங்கள் பேசுவதற் கான தருணத்தைப் பெறுவதற்காகவே. உங்களிடம் நயமாக இக்காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் வேறொரு காரியத்தை கூற நான் விரும்புகிறேன், பாருங்கள். நாம் ஏதோ ஒன்றிற்கு மிக அருகாமையில் இருக்கிறோம் என்று நான் உணருகிறேன். இப்பொழுது, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், அதைச் செய்ய வேண்டாம். பாருங்கள்? 52அன்றொரு நாள் என்னிடம் ஒரு மனிதன் வந்து, என்னை மிகவுமாக வருத்தமாய் உணரும்படிக்குச் செய்தார். (“நிச்சயமாக நான் போதனை செய்யும் போது அந்த விதமாக தெளிவற்ற விதத்தில் நான் பேசவில்லையே'' என்று நான் எண்ணினேன். பாருங்கள்?) அவர், ''சகோதரன் பிரன்ஹாம், குறிப்பிட்ட நாட் களுக்கு பிறகு எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது, அடுத்த பதினைந்து, இருபது நாட்களுக்குப் பிறகு” என்று கூறினார். மேலும், ''இயேசு இங்கிருப்பார், ஆதலால் எனக்கு அந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்று நீங்கள் நினைக் கிறீர்களா?'' என்றார். பாருங்கள்? நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம்! பாருங்கள், அவ்விதமாகச் செய்ய வேண்டாம். ஒருக்கால் இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு இயேசு வராமலிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனாலும் இன்னுமாக இன்றிரவே அவர் இங்கு இருக்கலாம். அவர் நாளையும் கூட வரலாம். அவர் எப்பொழுது வரப்போகிறார் என்று எனக்குத் தெரியாது, அது எவருக்குமே தெரியாது. வெளிப்படையாகக் கூறுவோமானால், அவருக்கே அது தெரியாது. அவ்வாறு தான் அவர் கூறுகிறார். அது யாருக்குமே தெரியாது. அவர் வருவார் என்று பவுல் அவருக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பத்மூ திவிலிருந்த யோவான் அதைக் காணும்படிக்கு உயிர்வாழ்வான் என்று நினைத்திருந்தான். நிச்சயமாக அவர் தன்னுடைய நாட்களில் வருவார் என்று ஐரேனியஸ் நினைத்திருந்தார். காலங்களினூடாக எல்லாரும் பாலிகார்ப், பரிசுத்த மார்டீன், மற்றும் எல்லாரும் நினைத்தனர். ''நிச்சயமாக அது தான்'' என்று லூத்தரும் நினைத்தார். “இதுதான் அந்த சமயம்'' என்று வெஸ்லி கூறினார். ''இதுதான் அந்த நேரம் ” என்று சார்லஸ் ஃபின்னி, ஜான் நாக்ஸ், கால்வின் ஸ்பர்ஜியன், மற்றும் அவர்களில் எல்லாரும் கூறினர். பில்லி சண்டேயிலிருந்து சரியாக இந்த நாள் வரைக்கும் ஒவ்வொரு வரும் “இதுதான் அந்த நேரம்!” என்று கூறுகின்றனர். 53நாமும் அதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரம் எப்பொழுது இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அது இந்த காலத்தில் தான் என்று நான் விசுவாசிக்கின்றேன், தீவட்டியை நான் பிடித்து வெளிச்சத்தை மேலே உயர்த்த நான் விரும்புகிறேன். ஆகவே கவனியுங்கள், நான்... சரியாக இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அடுத்த நிமிடத்திலே அவருக்காக நான் எதிர் பார்த்திருக்கிறேன் என்ற விதத்தில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதும் நான் வாழ விரும்புகிறேன், ஆனால் இப்பொழுதிலிருந்து அது சம்பவிக்க பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்கின்ற விதமாக நான் தொடர்ந்து என் ஊழியத்தை செய்து கொண்டிருக்க விரும்புகிறேன். இன்னுமாக நான் விதை களை விதைத்து அறுவடையை செய்ய விரும்புகிறேன். நான் சுவிசேஷத்தை பிரசங்கித்து நான் எப்பொழுதும் செய்த விதமாகவே தொடர்ந்து ஊழியம் செய்து கொண்டிருக்கவே விரும்புகிறேன். அதைப் போலவே என் கண்களை மேலே நோக்கியவாறே, கவனித்துக்கொண்டே இருப்பேன்; அந்த நெற்கட்டை இழுத்து... தானியக் கதிர்க்கட்டையும், அந்த நெல்லையும் எடுப்பேன். அதன் பிறகு அடுத்த ஆண்டில் மறுபடியுமாக நான் விதைத்து பயிர் செய்வேன், “கர்த்தாவே, கடந்த ஆண்டு நீர் இங்கே இருப்பீர் என்று நான் நம்பினேன், ஆனால் நீர் வரவில்லை யென்றால், இந்த வருடமும் நீர் வரலாம். ஆகவே என் பிள்ளைகளை வளர்க்கத்தக்க தாக நான் பயிர் செய்வேன். நீர் தாமதித்தால், உண்பதற்கென அவர்களுக்கு ஏதாவது இருக்கும்; நீர் வரவில்லையென்றாலும், நான் உமக்காக நோக்கிக் காத்திருப்பேன்.'' புரிகின்றதா, பாருங்கள், இயல்பாக பணிகளை செய்து கொண்டேயிருங்கள். 54காலையில் அவர் வரப்போகிறார் என்று நான் எண்ணினாலும், இன்றிரவு இப்பொழுது நான் பிரசங்கித்துக்கொண்டிருக்கும் இதே செய்தியை நான் பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அவர் காலையில் வரப்போகின்றார் என்று நான் நம்புகிறேன் என்றாலும், நான் வெளியே சென்று என் காரை விற்கமாட்டேன், இதை, அதை அல்லது மற்றதை நான் செய்யமாட்டேன். நான் சாதாரண மாக இருக்கின்றது போல அப்படியே நான் சென்று கொண்டிருப் பேன். ஏனெனில் அவர் வருவார் என்று ஒவ்வொரு கணநேரமும் நான் காத்திருக்கிறேன். ஏனெனில் அவர் உங்களுக்காக மாத்திரமே வரலாம், இன்றிரவு உங்களுடைய மணி நேரமாக இருக்கலாம். ஒருக்கால் இன்றிரவு என்னுடைய மணி நேரமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவைகளில் ஒன்று நம்முடைய மணி நேரமாக இருக்கப் போகின்றது. நான் இங்கே ஜீவித்துக் கொண்டிருந்தாலோ அல்லது அங்கே வெளியே நான் அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும் கூட அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்குமா? ஏற்கெனவே எனக்காக மரணத்துக்கான தண்டனை செலுத்தப்பட்டாயிற்று என்றிருக்குமானால், ஜீவித்துக் கொண்டிருக்கின்ற எந்த ஒரு மனிதனுக்கு முன்னதாகவே நான் அங்கே இருப்பேன். அது சரி. ''நான் இதைச் சொல்கிறேன்,'' எதெசலோனிக்கேயர், 5ஆம் அதிகாரம், கர்த்தரின் கற்பனைகளை முன்னிட்டு நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோ டிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வ தில்லை அல்லது தடை செய்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'' , மரித்தவர்கள், சிலாக்கியம் பெற்றவர்கள் முதலில் வருவார்கள். அதன் மூலமாகத்தான் அக்காரியமானது அருகில் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம், பாருங்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, ஒரு நிமிஷத்திலே, ஒரு கண் (eye) இமைப்பொழுதிலே (ஆங்கில வேதத்தில் உள்ள வாறே - தமிழாக்கியோன்) மறுரூபமாக்கப்பட்டு, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.'' ஆகவே நான் நோவாவின் காலத்தில் மரித்திருந்தாலும், ஆபிரகாமின் காலத்தில் நான் மரித்திருந்தாலும், அப்போஸ்தலர் காலத்தில் நான் மரித்திருந்தாலும், இரண்டு வாரங்களுக்கு முன்ன தாக நான் மரித்திருந்தாலும், அல்லது சரியாக இப்பொழுதே அது இருந்தாலும் என்ன வித்தியாசத்தை அது உண்டுபண்ணுகிறது? அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது? ஒரு நிமிஷத்திலே, ஒரு கண்ணிமைப் பொழுதிலே நான் அங்கே இருப்பேன், அந்த நேரம் வரைக்கும் நான் இளைப்பாறிக்கொண்டிருக்கிறேன். 55இப்பொழுது, கர்த்தரோடு அந்த ஒன்று கூடுதல் இருக்கும். யாக்கோபு 49வது அதிகாரத்தில், அவன், ''சமாதான கர்த்தர் வருமளவும்.. நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்“'. அவன்- யூதாவைக் குறித்து பேசுகையில் இவ்விதம் கூறுகின்றான். இப்பொழுது அநேக மக்கள், ஒரு சபை, ஒரு ஸ்தாபனம், சபை பிரமாணம், ஒரு பெரிய மக்கள் கூட்டம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஒன்று சேர்க்கப்பட்டு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது அவ்வாறாக அது இருக்காது. அது அல்லவே அல்ல. ஜனங்கள் ஒன்று கூட்டப்படுவது, தேவன் தம்முடைய மந்தையை ஒன்று கூட்டும் போது, அவர் ஜெபர்சன்வில்லில் இருந்து இரண்டு பேரையும், கெண்டக்கியிலிருந்து இரண்டு பேரையும், மிஸ்ஸிசிப்பியிலிருந்து இரண்டு பேரையும் எடுக் கலாம். சரியாக அவ்விதமாகத்தான் அவர் கூறியிருக்கிறார்; அந்த சொற்களல்ல, ஆனால் அவர், ''இரண்டு பேர் வயலில் இருப் பார்கள்'' என்று கூறியிருக்கின்றார், இப்பொழுது பகல் நேரமாக இருக்கின்றது, ''நான் ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றொரு வனை விட்டுவிடுவேன். படுக்கையில் இரண்டு பேர் இருப் பார்கள்“ பூமியின் மற்றொரு பகுதியில் இரவு நேரமாக இருக்கும், ”நான் ஒருவனை எடுத்துக் கொண்டு ஒருவனை விட்டு விடுவேன்''. பாருங்கள்? 56மக்கள் ஒன்று கூட்டப்படுவது, இங்கே ஒரு குழுவாக எடுப்பதற்கு, கோத்திரத்தின்படி பிரிவாக இருக்காது. அது ஒரு உலகளாவிய உயிர்த்தெழுதலின் ஒன்று கூடுதலாக இருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதலும் அதே விதமாக வரும். ஏனெனில் அவர், ''ஒருவன் அந்த மணி நேரத்தில் நித்திரையடைந்தான், மற்றொருவன் இந்த மணி நேரத்தில் நித்திரையடைந்தான்... அப்படியே ஏழாம் மணி வரைக்கும் இருந்தது. அதன் பிறகு மணவாளன் வந்த போது, அவர்களெல்லாரும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் கடைசி வரைக்கும் உள்ள அவர்கள் எல்லாரும் விழித்தெழுந்தனர். (Awaked) உள்ளே பிரவேசிக்க ஆயத்தப் படத்தக்கதாக அவர்கள் ஒவ்வொருவரும் விழித்தெழுந் தனர், (Awakened) அது சரி“ என்று கூறினார். இப்பொழுது நீங்கள் பாருங்கள், அவருடைய வருகையின் போது மரித்தோர் எல்லாரும் கல்லறையிலிருந்து எழுவார்கள் என்பதை அவர் காண்பிக்கின்றார், நீதிமான்கள், மணவாட்டி, கல்லறையில் நித்திரையில் இருந்தவர்கள் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பார்கள். பிறகு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், இந்த இடத்திலிருந்து ஒருவர், அங்கிருந்து ஒருவர் என சேர்க்கப்படுவர் என்று அவர் காண்பிக்கின்றார் - ஒரு மக்கள் குழு ஒரு சிறிய குழுவாக ஒன்று கூட்டப்படமாட்டார்கள். ''வயலில் ஒருவன் இருப்பான் அல்லது இருவர் வயலில் இருப்பார்கள், நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன்''. சபையைச் சார்ந்து ஒருவர் பகல் வெளிச்சத்திலிருந்து வருவார். பூமயின் மறுபுறத்திலிருந்து, “படுக்கையில் இரண்டு பேர் இருப் பார்கள், நான் ஒருவனை எடுத்து ஒருவனை விட்டு விடுவேன்''. அது சரிதானே? 57நான் ஜெபர்சன்வில்லில்லோ, அல்லது நான் ஸ்வீடன் நாட்டிலோ, அல்லது நான்... எங்கேயிருந்தாலும் ஒன்று கூட்டப் படுதலானது கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும், எந்த இடமாக இருந்தாலும் சரி, அந்த மேய்ப்பனுக்குள்ளாக ஒன்று கூட்டப் படுதலானது இருக்கும். பாருங்கள்? உயிருடன் இருப்பவர் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வருவார்கள். கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்காக உயிர்த்தெழுதலுடன் நாமும் ஒன்றாக மேலே எடுக்கப்படுவோம். மரித்துப் போயிருக்கின்ற மக்கள் எழுந்திருப்பார்கள். கூடவே சபையும் (ஒன்றாக) கர்த்தரை ஆகயாத்தில் சந்திக்கத்தக்கதாக எடுத்துக் கொள்ளப்படும், பாருங்கள்? அவருடைய வருகையானது உலகளாவிய ஒன்றாக இருக் கலாம். லூயிவில்லுக்கு மாத்திரம் வருகின்ற ஒன்றாக அது இருக்காது. பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் மாத்திரமே வருகின்ற ஒன்றாக அது இருக்காது. அது “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்பதாக இருக்கும், ஆகவே உயிர்த் தெழுதலும் மற்றும் ஒன்று கூட்டப்படுதலும் எல்லா இடங் களிலும் இருந்து வருகின்றதாக இருக்கும். மேலும், அது எப்பொழுது சம்பவிக்கும்? ஒருக்கால் இன்றிரவாக இருக்கலாம், ஒருக்கால் நாளைய தினத்தில் இருக் கலாம், ஒருக்கால் நூறு வருடம் கழிந்து இருக்கலாம், ஒருக்கால் மேலும் ஆயிரம் வருடங்கள் பிறகு இருக்கலாம். எனக்கு தெரியாது. யாருக்குமே தெரியாது. ஆனால் நீங்கள் மற்றும் நான், இன்றிரவு அது சம்பவிக்கப் போவது போல நாம் ஜீவிப்போமாக. 58ஆனால், இப்பொழுது, ''எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கின்றது'' என்று நீங்கள் கூறுவது போல. நல்லது, உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருக்க, விடுதலைக்கென உங்களுக்கு விசுவாசம் இல்லாதிருக்கும் பட்சத்தில் உங்களுக்கான அறுவைச் சிகிச்சையைச் செய்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றை வாங்க வேண்டியவனாக இருப்பேனானால்... யாரோ ஒருவர் வந்து அன்றொரு நாளிலே ஒரு குறிப்பை எனக்கு எழுதினார், ஒரு- ஒரு பெரிய கடிதம், இவ்விதமாக கூறினார், ''சகோதரன் பிரன்ஹாம், நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நானும் என் மனைவியும் எங்களால் முடிந்த வரைக்கும் தேவனுக்கு மிகவும் உத்தமமாக இருந்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்துள்ளோம். இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் பணம் சேமித்து ஒரு பண்ணையை வாங்கியுள்ளோம். அதை எவ்வளவாக நாங்கள் நேசிக்கிறோம் தெரியுமா! அங்கே பண்ணையில் ஒரு நீரூற்று உள்ளது; அந்த நிலம் முழுவதுமாக ஒரு நீரோடை ஓடுகிறது. ''அது அங்கே ஓரிகானில் இருக்கின்றது. மேலும் அக்கடிதத்தில், ''நீங்கள் ஓரிகானுக்கு வருவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். என்ன செய்யவேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துள்ளதை நான் உங்களிடம் கூறுகிறேன். நாங்கள்... பிள்ளைகளுக்கு பண்ணை உபயோகமாக இருக்குமென்று எண்ணி சேமித்து வாங்கினோம், ஏனெனில் அவர்களில் யாருமே கிறிஸ்த வர்கள் அல்ல. இப்பண்ணையை பிள்ளைகளுக்கு வைத்துப் போகலாம் என்று எண்ணினோம். ஏனெனில் அவர்கள் இப்பூமியி லேயே இருந்து உபத்திரவத்துக்குள்ளாக வருவதற்கு பிள்ளை களுக்கென சேமித்து வைத்தோம், ஏதோ ஒன்று அவர்களுக்காக இருக்கட்டும் என்று நாங்கள் பார்த்தோம், ஏனெனில் நாங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் இருப்போம் என்று விசுவாசிக் கிறோம். ஆகவே அதைக் குறித்து என்ன செய்தென்று எங்களுக்கு தெரியவில்லை, ஆகவே நீங்கள் வரும் போது நீங்கள் பார்க்கத்தக் கதாக பண்ணையை உங்களுக்கு திறந்து விடுகிறோம், நீங்கள் பாருங்கள், பிறகு அதைக் குறித்து நீங்கள் எது வேண்டுமானாலும் கூறலாம்'' என்று எழுதப்பட்டிருந்தது. நான் திரும்பி பதில் எழுதினேன், ''உங்கள் பிள்ளைகளைக் குறித்து இவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பது எவ்வளவு நலமான ஒன்று'' என்று எழுதினேன். “நானும் தாயும் மாலை வேளையில் அங்கே செல்கிறோம். நான் ஓய்வு பெற ஆயத்தமாக இருக்கிறேன், எங்களுக்கு இருக் கின்ற அருமையான மகிழ்ச்சி மிக்க தருணங்கள், பண்ணையில் நடந்து செல்வது, நீரூற்றை பார்த்துக் கொண்டிருப்பது, அங்கே நின்று கொண்டு தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருப்பது என்பது” என்று கடித்தில் இருந்தது. நான், 'அவ்விதம் தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள், சரீரப்பிரகாரமாகவும், பொருள் பிரகாரமாகவும் அந்த விதமாகவே ஜீவியுங்கள். அவர் வந்து முன் தோன்றுகின்ற வரையிலும் அப்படியே செய்து கொண்டேயிருங்கள்'' என்றேன். திட்டமிடுங்கள், தொடர்ந்து செய்யுங்கள், அதைச் செய்யுங் கள், ''கர்த்தருக்கு சித்தமானால்! கர்த்தருக்கு சித்தமானால்! இதை நான் செய்வேன், கர்த்தருக்கு சித்தமானால்.'' அந்த நேரத்திற்கு முன்னதாகவே அவர் வரலாம் (ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி) அப்படியே தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.... ஆனால் உங்கள் ஆத்துமாவை சீர் நிலையில் ஒழுங்குப்படுத்தி வைத்திருங் கள், ஏனெனில், எந்த நிமிடத்திலும் அவர் வரலாம். பாருங்கள், ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் பாருங்கள், அவர் உங்களுக்காக எந்த ஒரு நிமிடத்திலும், எந்த நொடியிலும், அடுத்த இதய துடிப்பின் போது, அடுத்த மூச்சின் போதும் வரலாம், அவர் உங்களுக்காக வரலாம். நீங்கள் செய்ய விரும்பும் எதையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள், அது உண்மை யானதாகவும், வரம்பு மீறாத ஒன்றாகவும், நேர்மையுடைய தாகவும் இருக்குமானால் தொடர்ந்து அதைச் செய்யுங்கள். 59இப்பொழுது, நாம் ஏதோ ஒன்றை எதிர் நோக்கி இருக்கின்றோம் என்று நாம் அறிவோம். அது எனக்குத் தெரியும்; அது உங்களுக்கும் தெரியும். எந்த விதமாகத் திரும்புவதென்று எனக்குத் தெரியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சிக்கா கோவிலே ஒரு நாள் கர்த்தருடைய ஆவியானவர் என் மீது வந்தார். அப்பொழுது நான் “இதுதான் அது! அந்த எழுப்புதல் முடிந்து விட்டது, அமெரிக்கா தனக்கு அளிக்கப்பட்ட தருணத்தை மறுதலித்து தள்ளி விட்டது” என்று கூறினது உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா அது ஒலிநாடாவில் இருக்கின்றது. “இனிமேல் ஒன்றும் இருக்காது. அவளுக்கு அளிக்கப்பட்ட கடைசி தருணம், அவள் அதை ஏற்க மறுத்து நிராகரித்தாள்” நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த ஒலி நாடாவின் தேதி என்ன என்பது யாருக்காவது தெரியுமா? எங்களுக்கு கிடைத்துவிட்டது. லியோ மற்றும் ஜீன் குடும்பத்தார் அதை வைத்திருக்கின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் நான் அதைக் கேட்டேன். போஸ் தன்னுடைய காகிதத்தில் அதை எழுதிக் கொண்டார். அதிலிருந்து என்ன சம்பவித்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள், பாருங்கள், எழுப்புதல் நின்றுபோனது. 60அன்றொரு இரவு புளூ லேக்கில் இதை நான் கூறினேன், அடுத்த நாள் காலை ஒரு சிறிய நபர் எழுந்து வந்து, “பெந்தெ கொஸ்தே அதைக் கொண்டிருக்கிறது, ஆனால் நான் அல்ல என்று சகோதரன் பிரன்ஹாம் ஒருக்கால் கூறலாம்! தேவனுக்கு மகிமை! அல்லேலூயா'' என்று இப்படியாக கூறிக் கொண்டிருந்தார். பாருங்கள், ஆனால் அந்த சிறிய நபர் எக்காளத்தின் எந்த முனையிலிருந்து ஊதுகின்றார் என்பதை அறியாதவராக இருக் கிறார். பாருங்கள், அவருக்கு புரியவில்லை. பாருங்கள், அவருக்குத் தெரியவில்லை. அது பரிபூரணமாக சரி, அது சரி - உணர்ச்சியார்வம் கொள்வது. ஆனால் சுற்றுமுற்றும் பாருங்கள்! அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ஜனங்களுக்கு என்ன சம்பவித்துள்ளது? எழுப்புதலுக்கு என்ன ஆயிற்று? பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், இன்னும் மற்ற எல்லாரும்- என்ன ஆயிற்று? அது முடிந்து போயிற்று! எல்லாம் அணைந்து போய்விட்டது. விதைகள் விதைக்கப்பட்டன. கூட்டம் முடிந்து விட்டது. தீக்கள் எரிந்து அணைந்து விட்டன. (பழைய ரோம் ஆலயத்தில், ரோம் மரபு பெண் தெய்வத்தண்டை, இங்கே பீடத்தில் எரிகின்ற தீ அணைந்த போது வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்) எழுப்புதல் இப்பொழுது தொடர்ந்து இல்லை என்பதை நாம் காணலாம். அந்த உணர்ச்சி ஆர்வம் இப்பொழுதில்லை. 611936ல் நதியண்டை நடந்ததைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன், அவர் கூறினதை நான் நினைவு கூறுகிறேன். அங்கே சம்பவித்தது என்ன? உங்களில் அநேகர் அறிவீர்கள். நான் ஒரு பையனாக இளம் வயதுடையவனாக மாத்திரம் இருந்தேன், என் முதல் ஞானஸ்நானத்தை நான் கொடுத்துக் கொண்டிருந்த போது, நான் எங்கே நின்று கொண்டிருந்தேனோ அங்கே கர்த்தருடைய தூதனானவர் கீழே வந்து நின்று கொண்டிருந்தார். சில மக்கள் 'நீங்கள் அதைக் காணவில்லை'' என்றனர். அது அவ்விதமாகத் தான் என்று விஞ்ஞானம் அப்பொழுது நிருபித்தது. பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அவர் அங்கே என்ன கூறினார்? ''கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் இரண்டாம் வருகைக்கு முன்னோடும்'' என்றார். அதை நான் பூமி நெடுகிலும் கண்டிருக்கிறேன், அது உலக முழுவதுமாக சுற்றிலும் சென்றது. ஏறக்குறைய முழு அளவில் எல்லா இடங்களிலும் எழுப்புதல்கள் உண்டாயின. எழுப்புதல் தீக்கள் எல்லா இடங்களிலும் எரிந்து கொண்டிருந்தன, நாம் அறிந்ததிலேயே மகத்தான எழுப்புதல்கள் எழும்பி நடந்தன. இதற்கு முன்னர் ஏதாவதொன்று இதைப் போன்று இருந்த துண்டா? ஒன்று கூட இல்லை! அந்த எழுப்புதலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர், ஒரு நபர் நியூ ஆல்பனியில் ''மக்கள் பில்லி சண்டே மற்றும் அதைப் போன்ற எழுப்புதலைக் குறித்த கீழ்த்தர மான ஆரவார பிரச்சாரத்தை மக்கள் விசுவாசிப்பதுண்டு. அதைத் தவிர வேறொன்றும் கிடையாது என்று எங்களுக்குத் தெரியும், மக்களுக்கு தெளிவான ஆதாரம் தேவைப்படுகிறது. எழுப்புதல் என்ற ஒன்று கிடையவே கிடையாது!'' என்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் தான் அந்த பெரிய அளவிலான கீழ்த்தர பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்த போது, அதே நேரத்தில், ஆரம்ப நூற்றாண்டுகள் முதல் நாம் கொண்டிருந்த எழுப்புதலை விட மகத்தான எழுப்புதலை தேவன் வெடித்தெழும்பச் செய்துக் கொண்டிருந்தார், அநேக மக்கள் (இலட்சக்கணக்கானோர்) இரட்சிக்கப் பட்டனர். 62ஒரு மனிதனின் செய்தி மூன்று வருடங்களுக்கு மாத்திரமே நிலைத்து நிற்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன, பிறகு தேவன் அவனை அழைக்கும் வரை அவன் தன்னுடைய புகழின் பேரிலே வாழ்கின்றான். அது கிறிஸ்துவின் முதற்கொண்டே அவ்விதமாகத் இருந்து வருகிறது, அவருடையது மூன்றரை வருடமாகும், பாருங்கள். அதற்கு பின்பு அவ்விதமாகத்தான் இருக்கின்றது, ஸ்பர்ஜன், நாக்ஸ், கால்வின், அதற்கு பிறகு... அவனுடைய தீ எரிந்து போகிறது, அவன் தன்னுடைய கடந்த கால புகழின் பேரிலே வாழ்கின்றான். அவன் தீயவனாக இருந்தா னெனில் அவனுடைய கிரியைகள் அவனைப் பின் தொடரும்; அவன் சரியான ஒருவனாக இருந்தானெனில் அவனுடைய கிரியைகள் அவனைப் பின்தொடரும். அவ்வளவு தான். அப்படியானால் அது எதைக் குறிக்கிறது? ''மகத்தான ஒன்று வருகின்றது என்று நான் விசுவாசிக்கின்றேன்'' என்று உங்களிடம் கூறி வருகிறேன், இந்த சபைக்கு நான் பிரசங்கித்து வருகிறேன். நான் விசுவாசித்து, உங்களிடம் ''கடைசி சபை காலத்தின் செய்தி யாளன் ஒருவன் இருப்பான் என்று வேதவசனங்கள் கூறி ஆதரிக் கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். அந்த மனிதன் தோன்றுவதற்காக நான் நோக்கிப் பார்த்திருக்கிறேன், நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். 63ஒரு மனிதன் எழும்புவதை நான் பார்க்கிறேன், அவனைக் குறித்து நான் கேள்விப்படுகிறேன், ஒரு மகத்தான மனிதன் ஊழியத்தை வேகமாக பரந்தகன்று செய்ய ஆரம்பிக்கிறான், அவனுடைய செய்தியானது வேதாகமத்தை விட்டு மிகவும் அப்பால் உள்ளதை நான் கவனிக்கிறேன். பிறகு அவன் ஒரு மூலைக்கு பறந்து சென்று விடுவதை நான் காண்கிறேன். பாருங்கள்? மற்றுமொருவன் எழும்புவதை நான் கவனிக்கின் றேன், அவன் மேலே எழும்பிப்பறக்கின்றான், ஆனால் அவன் கழுகுகளின் மத்தியில் செல்வதில்லை, அவன் ஸ்தாபன காகங் களின் மத்தியில் நின்று தங்கி விடுகின்றான். அவனுடைய ஸ்தாபனமாகிய இங்கே அவன் தங்கி விடுகிறான், மற்று மொருவன் அதிக அங்கத்தினர்களையும் மற்றதையும் கொண்டு வருகிறான். அதை நான் கவனிக்கின்றேன், அது மரித்து கீழே போவதை நான் காண்கிறேன். நான் “தேவனே, பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளை களிடத்திற்கு திரும்ப அளிக்கப் போகும் அந்த ஒருவன் எங்கே? அந்த விதைகள் எப்பொழுது நடப்படப்போகின்றன? எங்கே அது இருக்கும்? என்ன நடக்கப்போகின்றது?'' என்று நினைப்பேன். 64இப்பொழுது இதுவாக அது இருக்கும். அந்த நாளிலே நதியண்டையிலே வந்த அந்த செய்தியானது, அதுதான் இது என்றால், கர்த்தருடைய வருகையானது சமீபமாக இருக்கிறது, வரவிருக்கின்றது. அப்படியாக இல்லை என்றால், புயலுக்கு முன்னர் ஒரு அமைதி நிலவுகின்றது. நான் அதை அறியேன். அவர் அதை எனக்கு இன்னும் வெளிப்படுத்தவில்லை. ''அந்தச் செய்தி தான் அவருடைய அதிகாரப்பூர்வமான செய்தியா? நான் அவ்வளவுதான் கூற வேண்டும் என்று அவர் விரும்பினாரா? அவர் எனக்கு கட்டளை அளித்து ஊழியத்தில் அமர்த்தினபோது அவ்வளவேதானா அது? அது அவ்வளவேதானா? அவ்வளவு தான் என்றால், நாம் மிக, மிக அருகாமையில் இருக்கின்றோம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் கால தாமதமாகிவிட்டது. அப்படி யில்லை என்றால் புயலுக்கு முன்பாக ஒரு அமைதி நிலவுகிறது.'' 65இங்கே சில நாளுக்கு முன்பாக யாரோ ஒருவர் எனக்கு கடிதம் எழுதி என்னிடம் 'சபை உபத்திர காலத்தினூடாக செல்லும் என்று நீங்கள் விசுவாசிக்காவிடில், வெளிப்படுத்தல் 13ஐக் குறித்தென்ன, ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் நான் ஆச்சரியப்படுகிறேன் மற்றும் தங்கள் சாட்சியினாலே எப்படி அவர்கள் ஜெயங்கொண்டார்கள்?'' என்று கேட்டார். இந்த கேள்வியை அந்த நபர் கேட்டார். வெளிப்படுத்தலின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையின் காலத்தில் இருக்கின்ற சபையைக் குறித்து கூறுகின்றன என்று நீங்கள் உணருகிறீர்களா? அது உபத்திரவத்தின் கால மாகும், சபையின் காலம் அல்ல; 4வது அதிகாரத்தில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டு மேலே செல்கிறது, 19ஆம் அதிகாரத்தில் அது இயேசுவுடன் திரும்பி வரும் வரையில் அது மறுபடியுமாக வருவதே இல்லை. அது சரியே. அது உபத்திரவ காலத்திலாகும், சபையுடன் அதற்கு எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. 66வேதாகமத்தில் நீங்கள் கண்டிருக்கின்ற மகத்தான காரியங் களைக் குறித்த இந்த எல்லா மகத்தான வாக்குத்தத்தங்கள் யாவும், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்தது, அது யூதருடைய ராஜ்யத்தில் நடைபெறுபவை ஆகும். இங்கே புறஜாதிகள் மத்தியில் அல்ல. மக்களின் விசுவாசத்தை திரும்ப அளிக்க வரவிருக்கின்ற, வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுடன் அவர்கள் கேலிக் கூத்து செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அதை நான் புரிந்துகொள்ள இருக்கின்ற ஒரே வழி, ஏனென்றால் அவர், ''இந்த செய்திக்கு பிறகு உடனடியாக பூமியானது வெப்பத்தினாலும் அக்கினியாலும் சுட்டெரிக்கப் படும்'' என்று கூறியிருக்கிறார். நாம் இங்கே இருக்கையில் நான் இதை வாசித்து காண்பிப்பேன், அது என்ன கூறுகிறது என்பதை கவனியுங்கள். இராஜ்யத்தின் இந்த சிறிய செய்தி, ஒருக்கால் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு காலை நான் அதைப் பிரசங்கிப் பேன், பாருங்கள் கர்த்தருக்கு சித்தமானால். 67இப்பொழுது இங்கே கவனியுங்கள், இங்கே யோவானின் வருகையைக் குறித்து இருக்கிறது, மல்கியா 3: இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக் கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3 உங்களால் காணமுடிகிறதா? இப்பொழுது மத்தேயு, கவனியுங்கள் மத்தேயு 11வது அதிகாரம், இதை கவனித்துக் கேளுங்கள், 6வது அதிகாரம். இப்பொழுது நாம் இதை வாசிப்போம் மல்கி... மத்தேயு 11, இயேசு பேசுகின்றார். இப்பொழுது 11வது அதிகாரத்திலிருந்து துவங்குவோம். இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்த பின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார். அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியை களைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து; வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். அந்த தீர்க்கதரிசியின் தெளிவற்ற நிலைமையைப் பாருங்கள்? ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது என்று அவன் அறிந்திருந்தான், ஆனால் அது எங்கே இருக்கிறது என்று அவன் நிச்சயமற்றவனாக இருந்தான். பாருங்கள்? என்ன நடந்து கொண்டிருந்தது என்று பாருங்கள், அவன் அவருடைய வருகையை அறிவித்த பின் “வருகிறவர் நீர்தானா?” என்றான். இயேசு அவர்களுக்குப் பிரிதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்: குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிஷேம் பிரசங்கிக்கப்படு கிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்... (இப்பொழுது கவனியுங்கள்!) எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? இல்லை, அது யோவான் அல்ல, யோவானிடம் சமரசம் செய்வது என்பது கிடையாது. எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனை யோ? (வேறு விதமாகக் கூறினால் சட்டையின் கழுத்துப் பட்டை திருப்பி வைத்துக் கொண்டிருப்பவர்கள், என்று நீங்கள் அறிவீர்கள். மேதாவிகள், அறிவாளி மனிதன் மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள் (அந்த நபர் குழந்தைக்கு முத்தமிடுபவர், இளம் வயதினருக்கு விவாகம் செய்பவர், மரித்தோரை அடக்கம் பண்ணுபவர் மற்றும் உங்களுக்கு தெரியும் அல்லது ஆங்காங்கே சுற்றிக் கொண்டு....?... அவ்வித மானவர், அவ்விதமானவர் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கையாள்பவர்கள் அல்ல, புரிகின்றதா?) எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் ஒரு மனிதனையும் அவனுடைய ஆடைகளையோ? ....மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந் தரித்திருக்கிறவர்கள் அரசர் அரண்மனைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 68கவனியுங்கள்! ''அதெப்படியெனில்...'' இப்பொழுது கவனியுங்கள், இது இயேசுவின் சொந்த வார்த்தைகள். அதெப்படியெனில்: இதோ நான் என் தூதனை என் விசுவாசத் திற்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத் தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். இப்பொழுது மல்கியா 3ஐ கவனியுங்கள்: இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான். (மல்கியா 3, மல்கியா 4 அல்ல ) இப்பொழுது மல்கியா 4 ஐ கவனியுங்கள்: இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்: அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரம் செய்கிற யாவரும் துரும்புகளா யிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (பாருங்கள் அது வரவிருக்கின்ற உபத்திரவம் மற்றும் அழிவைக் குறித்த தாகும்) ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (கர்த்தருடைய வருகை) நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்று களைப் போல வளருவீர்கள். (அது ஒரு புல் வெளியின் மேல் நடந்து செல்வது என்பதாகும்) துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 69இவ்வாறாக கூறுவோமானால், நீதிமான்கள் கிறிஸ்துவோடு பூமிக்கு திரும்ப வருகையில், அந்த சாம்பல்களின் மேல் நடப்பார்கள். நீங்கள் இந்த மக்கள், இறுமாப்பு கொண்டவர் களாவும், வீம்புமிக்க திமிர் கொண்டவர்களாகவும், இழிவாக கருதுபவர்களாகவும், வட்டமிட்டு ஒட்டுப்பார்த்து திருட்டுத் தனமாக வேவு பார்ப்பவர்களுமாகவும் இருந்து கொண்டு அதே நேரத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரும் இவர்கள், இவர்கள் சாம்பல்கள் தவிர வேறொன்றும் கிடையாது. அவ்வளவுதான். அதைத்தான் வேதாகமமும் கூறுகிறது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்பு கிறேன். அந்த நாளுக்கு (கர்த்தரின் திரும்பி வருதல்) சற்று முன்னே , முதலாவதாக எலியா வருவான். 70சரி, நினைவில் கொள்ளுங்கள், பின்னர். அது யோவானின் வருதலாக இருந்திருக்க முடியாது. யோவான் அந்த எலியாவாக இருந்தான், ஆனால் அவன் ஐந்து முறை வருகிறான். இயேசு (J-e-s-u-s) விசுவாசம் (f-a-j-t-h), கிருபை (g-r-a-c-e). பாருங்கள், ஐந்து என்பது “கிருபையின்' எண்ணாகும். எலியா ஐந்து தோன்று தல்களைச் செய்கின்றான்: ஒரு முறை எலியாவாகவும், எலிசா வாகவும், யோவானாகவும், புறஜாதிகளின் முடிவிலும், பிறகு யூதர்களுக்கு மோசேயோடும் தோன்றுகிறான். பரிபூரண எண், பரிபூரண தீர்க்கதரிசி, பரிபூரண செய்தியாளன், கண்டிப்பானவன், தைரியமானவன். புரிகின்றதா? கவனியுங்கள். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள், அந்த நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதிரி சியை அனுப்புகிறேன்: நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்கு அவன் பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளை களுடைய இருதயங்களை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்பு வான். 71பாருங்கள், அறிமுகப்படுத்தலின் முதல் வருகை அல்ல; அது யோவான் ஆகும், ஏனெனில் பூமி அப்பொழுது ஒரு துரும்பைப் போல் எரிக்கப்படவில்லை, நீதிமான்கள் அக்கிரமக் காரரின் சாம்பலின் மேல் நடக்கவில்லை. ஆனால் இது நடந்தேறும் முன்னர் எலிசா வருவான். அவன் என்ன செய்வான்? பிள்ளை களின் விசுவாசத்தை பிதாவினிடத்திற்கு, வேதாகமத்தின் மூல விசுவாசத்திற்குத் திருப்புவான். ஒரு மனிதன் வருவதை நான் காணும் போது, ''அது அவனாகத்தான் இருக்கும். அங்கே ஒரு மனிதன் பேர் பெற்று வளருகிறான், அவனைப் பார், சபைகளும் போகின்றன'' என்று நான் நினைப்பேன். ஆனால் அவன் செய்வதென்ன? வேதாகமத்தி லிருந்து ஆயிரம் மைல்கள் அப்புறமாகச் செல்கிறான். அவன் என்ன செய்கிறான்? சுற்றித்திரிகிறான், பிறகு காற்று வெளியேறி விடுகிறது. அவன் கீழே இறங்கி விடுகிறான். பவுல், “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலித்தல், விசுவாசத்தை மறுதலித்தல்' என்று கூறுகிறான். வேதாகமத்தில் விசுவாசம் கொண்டிராமல், ஸ்தாபனங்களை, கோட்பாடுகளை பிடித்துக் கொண்டு, அதைக் கூறிக்கொண்டு, ஸ்தாபன பிள்ளை களைப் பெற்றுக் கொள்ளுதல். அது விழத்தான் வேண்டும். அதோ அவன் பின்பாகச் சென்றுவிடுகிறான். 72கடைசிக்கால சபைக்கென அந்த விதையை விதைக்கப் போகின்ற அந்த ஒருவன் எங்கே? அந்த முதிர்ந்த விதை, வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட எலியா எங்கே? அவனுடைய நாட்களுக்குப் பிறகு உடனே அந்த மகா பெரிய உபத்திரவம் வந்து பூமியைச் சட்டெரித்துப் போடும். பிறகு சபை மற்றும் அந்த மணவாட்டியின் திரும்ப வருதலில், அக்கினியால் சுத்தமாக்கப்படுகின்ற போது, ஆயிர வருட அரசாட்சியில், மணவாட்டியும் கிறிஸ்துவும் அவர்களுடைய சாம்பலின் மீது நடப்பார்கள். அங்கே அவர்கள் அரசாட்சி செய்வார்கள். சுவிசேஷத்தை கேட்டிராத அஞ்ஞானிகள் அந்த சமயத்தில் எழுப்பப்படுவார்கள், தேவனுடைய குமாரர் வெளிப்படுத்தப்படுவர். அவன் அரசாட்சி செய்ய வேண்டு மெனில், அரசாட்சி செய்யப்படுவதற்கென ஒன்றை அவன் கொண்டிருக்க வேண்டும், அவனுக்கு ஒரு ஆட்சி எல்லை இருக் கின்றது. ''அவர்கள் கிறிஸ்துவோடு அரசாட்சி செய்து ஆளுகை செய்தனர்''. கிறிஸ்து தேசங்களை இருப்பு கோலால் ஆளுகை செய்தார். அப்பொழுது சுவிசேஷம். அப்பொழுது வெளிப்படுத்தப் பட்ட தேவ குமாரர், அவர் பூமியில் இருந்தபோது எந்த விதமான அதிகாரத்தை உடையவராக இருந்தாரோ அதே அதிகாரத்தை உடையவர் களாக, அந்த அரசாட்சியில், ஆயிரவருட அரசாட்சியில் வருவார்கள், பாருங்கள், சாம்பலின் மீது நடப்பார்கள். 73ஆகவே ஏதோ ஒன்றிற்காக நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது தாழ்மையில் அமைதியாக நம்மண்டை வந்து கவனத்தைக் கோராமல் சென்று அதை நாம் காணாமல் தவற விட்டு விட்டோமா? அது கடந்து சென்று சபையானது தன்னுடைய பாவங்களில் அப்படியே விடப்பட்டு விட்டதா? அப்படியானால், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. அப்படி இல்லையென்றால், சரியாக வேதாக மத்தின் பேரில் இருக்கின்ற ஒரு செய்தியுடன் ஒருவர் வருகின்றார், அந்த அதிசீக்கிர கிரியை பூமியை சுற்றி வரும். முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்தானது அதைக் கேட்கும் வரைக்கும், விதைகள் செய்தித்தாள்களிலும், வாசிக்கப்படும் புத்தகங்களிலும் புறப்பட்டு ஓடும். பிதாவானவர் இழுத்துக் கொள்ளாவிட்டால் யாருமே வரமாட்டார்கள், பிதாவானவர் இழுத்திருக்கின்ற ஒவ்வொருவர் அதைக் கேட்டு வருவார்கள். அவ்வித மாகத்தான் இருக்கும், முன்குறிக்கப்பட்ட வித்து வார்த்தையைக் கேட்கும். 74அது சம்பவிக்கையில், அது ஒரு ஒன்று கூட்டப்படுதலாக இருக்கும். அப்பொழுது இயேசு தோன்றுவார், அப்பொழுது உலகம் முழுவதும் இருக்கின்ற சபை, உயிர்த்தெழுதலுடன் அங்கே மேலே செல்லும். யோவான் வந்த விதமாக அது இருக்குமா, தெரிந்து கொள்ளப்பட்ட சீஷர்கள் கூட அதை அறியாமல் இருந்தனரே? அவர்கள் ''அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி?'' என்று கூறினர். அதற்கு அவர், ''அவன் ஏற்கெனவே வந்தாயிற்று. உங்களுக்கு அது தெரியவில்லை'' என்றார். மேலும் அவர், ''அவனை என்ன செய்வார்கள் என்று கூறினார்களோ அதை தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்'' என்று கூறினார். அவனு டைய செய்தியானது மிக வேகமாக இருந்தது, எல்லா இஸ்ரவே லருக்கும் சென்றது, அது ஒரு சிறிய இடத்தில்... இரண்டு சிறிய இடத்தில், எருசலேமுக்கு சற்று தள்ளி அங்கே அது...?... யோவான் ஞானஸ்நானம் கொடுக்கச் சென்ற இடம், அவன் நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில். நதியின் தண்ணீர் குறைந்து வறண்டதாயிருந்தது. அந்த இடத்தில், ஆறே மாதத்தில் மேசியாவின் முழு அறிமுகமானது வந்து சேர்ந்தது. பாருங்கள்? 75நாம் ஏதோ ஒன்றை கண்டும் காணாமல் விட்டுவிட்டோ மா? நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டதா? இது இப்பொழுது இருதயத்தோடு - இருதயம் மனம் விட்டு பேசும் ஒன்றாகும். இன்றிரவு இது, இது... ஆமாம், இது இங்கே சாதாரண ஒரு பேச்சாகும். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதாகி விட்டதா? அங்கே அந்த நாளில் நதியண்டை வந்த அந்த செய்தி சரியாக அதுவாகத்தான் இருக்குமா? அது யாருக்கும் தெரியாமல் கடந்து மக்கள் அதைக் காணத் தவற விட்டு விட்டனரா? அது அதுதானா? அப்படியானால் நாம் நினைப் பதைக்காட்டிலும் காலதாமதமாகிவட்டதா? அது எப்பொழுது இருக்கும்? எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்றிர வாக இருக்கலாம். இன்னும் ஐம்பது வருடங்கள் இருக்கலாம். அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது, இப்பொழுது நான் இருப்பது போல தொடர்ந்து நான் சென்று கொண்டே இருப்பேன். சரி, அது என்ன? ஏதோ ஒன்றை நான் எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா? 76கடந்த இரவு நான் ஒரு வினோதமான சொப்பனம் கண்டேன், நாள் முழுவதும் அது என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வழக்கமாக நான் அதிகமாக சொப்பனம் காண்பதில்லை. ஆனால் ஒரு சொப்பனம் எனக்கு உண்டா யிருந்தது.... நான் எல்லா இடங்களிலும் செல்கிறேன், நான் வழக்கமாக செய்வது, அந்தச் செய்தியை நான் பெருஞ்சத்தத்தோடு முழங்கு வேன், இங்கே ஒருவர் அங்கே ஒருவர் அதை பிடித்துக் கொள்வதை நான் காண்பேன். நான் திரும்பவுமாகச் சென்று அந்த செய்தியை பெருஞ்சத்தத்தோடு முழங்குவேன் அவர்கள் முகத் தைத் திருப்பிக் கொண்டு நடந்து சென்று விடுவார்கள். காரியம் என்ன? தங்கள் கிருபையின் நாளை அவர்கள் பாவத்தினாலே தள்ளி விட்டார்களா? கடைசி நபர் உள்ளே வந்து விட்டாரா? அது முடிந்து விட்டதா? அழிவுக்காக நாம் காத்துக் கொண்டிருக்கி றோமா? எல்லாம் தயாராகிக் கொண்டிருப்பது போல அதினாலே தான் இந்த சிறு யுத்தங்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றனவா? ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கின்றது. அது நடப்பதற்கு முன்னர் சபை சென்றுவிட்டிக்கும். சபை உபத்திரவத்தில் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்வதே கிடையாது! ஒரு எதிர் மறையான ஒன்றிலிருந்து இயல்பான ஒன்றை உங்களால் எப்படி உருவாக்க முடியும்? பாருங்கள்? ஒரு சொட்டு தண்ணீர் கீழே விழுவதற்கு முன்னரே நோவா பேழைக்குள் இருந்தான். அக்கினி விழுவதற்கு முன்னதாகவே லோத்து சோதோமை விட்டு வெளியே இருந்தான். 'அவர்கள் நாட்களில் இருந்தது போலவே மனுஷகுமாரனின் வருகையிலும் இருக்கும்'' என்று இயேசு கூறினார். சபை நியாயந்தீர்ப்பில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை, அது ஏற்கெனவே கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறது. நமக்கு தேவையானது என்னவென்றால் பரிசுத்தவான் களின் பரிபூரணப்படுதலேயாகும். பரிசுத்தவான்கள் புரிந்து கொள்வதில்லை, அவர் பெறுகின்றனர்... என்ன சிந்திப்பது என்பது அவர்களுக்குத் தெரியாது, பாருங்கள் இப்பொழுது நாம்.... அது சரியாக... அப்படியில்லையெனில், ஏதோ ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது, ஒரு வெடிமுழக்கம் இருக்கும். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், எந்த வழியாக திரும்ப வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. 77கடந்த இரவு நான் ஒரு சொப்பனம் கண்டேன் (பிறகு நான் முடிக்கப் போகிறேன்). நான் ஒரு சொப்பனம் கண்டேன், வினோதமான ஒன்று... அன்றொரு நாள் நான் படுத்துக் கொண்டு என் மனைவி யுடன் பேசிக்கொண்டிருந்தேன், வரவிருக்கின்றது. குறித்து. அப்பொழுதுதான் நாங்கள் ஜெபித்தோம், நான்.... டல்லாசி லிருந்து யாரோ ஒருவர் தொலை பேசியில் அழைத்து அவருடைய காதில் ஏதோ ஒன்று சிக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறினார், நான் உள்ளே சென்றேன்... இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, அவர் மருத்துவரிடம் ஓட வேண்டியதாயிற்று. ஜெபிக்க நான் உள்ளே சென்றேன், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “எல்லாம் சரியாக உள்ளது” என்று கூறினார். பாருங்கள்? அவர் இங்கு வந்தார். எல்லாம் சரியாகிவிட்டது. மருத்துவர், ''உங்களுக்கு காதில்.... உங்களுடைய காது செவிப்பறையை (ear drum) நீர் காயப்படுத்திவிட்டீர், அது கிழிந்து போய், அதிலிருந்து இரத்தம் வெளியே வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, ஆகவே உங்கள் காதுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைத்தேன்...'' என்றார். அவ்வளவுதான்... அடுத்த முறை நாங்கள் திரும்பிச் சென்றோம், அவர் அதைக் குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. காதில் தொற்றுகிருமிகள் இல்லை, எதுவுமே இல்லை, என்ன ஆயிற்று என்று அவருக்குத் தெரியவில்லை. பாருங்கள்? பிறகு யாரோ ஒருவர் தொலைபேசியில் அழைத்தார், நான் அறைக்குள்ளே சென்று ஜெபிப்பேன். பிறகு இன்னொரு நாள் அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து, ''எல்லாம் முடிந்து விட்டது. அருமையாக இருக்கிறார், நலமாக இருக்கிறார்'' என்று கூறுவர். 78நான் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன், நான், ''தேனே, கடந்த ஒரு வருடம் நான்கு மாதங்களாக எந்த வழியாக அசைவது என்றே எனக்குத் தெரியவில்லை. என்ன என்றே தெரியவில்லை'' என்றேன். அவள் கூறினாள்.... அசைவைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நான் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை, நான் நின்று கொண்டிருக்கிறேன், யோசித்துக் கொண்டிருக்கிறேன். நாம் எதிர்நோக்குவது... தேவனுடைய அந்த மகத்தான தீர்க்கதரிசி, காரியத்தை பெருத்த சத்தத்தோடே முழங்கச் செய்ய காட்சியில் வருகின்றாரா? அது வெளிப்படையாக அறியப்படுமா?'' என்றேன். நான் “அது வேதாகமத்திற்கு முரணான ஒன்று, ஏனெனில், 'நீங்கள் நினையாத மணி நேரத்திலே அவன் வருவான்' என்றிருக் கிறதே” என்று நினைத்தேன். பாருங்கள்? என்ன செய்வ தென்றே எனக்குத் தெரியவில்லை. நாம் அதைக் கண்டும் காணாமல் விட்டு விட்டோமா? ''இங்கே வீட்டிலே படுத்துக் கிடக்க எனக்கு விருப்பமில்லை'' என்று நினைத்தேன். நான்... இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படவில்லை என்று நான் நம்புகிறேன்; அப்படி யென்றால் ஒலிநாடாவை கிழித்து விடுங்கள் அல்லது ஓரத்தில் வைத்து விடுங்கள். பாருங்கள்? இப்பொழுது அவன், ... நான், ''இதுதான் அது என்றால், நாம் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கிறோம்'' என்று கூறினேன். 79ஒரு காரியம் நடந்தேறியாக வேண்டியிருக்கிறது. இப்பொழுது ஏதோ ஒன்று எனக்கு நடக்க வேண்டியதாக இருக்கிறது. வேறு ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டி இருப்ப தால்தான். அன்றொரு நாள் நான் அந்த நீண்ட இருக்கையில் இருந்த போது அவர் என்னைப் போக விடவேயில்லை, பாருங்கள், ஏன்? ஏன் நான் செல்லவில்லை? என்ன சம்பவித்தது? செய்யப்பட வேண்டிய வேறொன்று இருக்கிறதா? நான் ''சரி, அது என்னு டைய செய்தியாகத்தான் இருக்குமென்றால், மக்கள் தங்கள் முகத்தை அதற்கு நேராக திருப்புவார்கள்“ என்று எண்ணினேன். பிறகு, வெளிநாட்டு ஊழியக்களங்களுக்கு ஏதோ ஒன்று என்னை அழைக்கின்றது. கடலுக்கு அப்பால், மற்றும் எல்லா விடங்களிலிருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதை என்னால் கேட்கமுடிகின்றது. 80டர்பன் நகர கூட்டத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை சகோதரன் லிக்கர் எழுதுகிறார் என்று முன்பொரு நாளிலே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர், ''அந்த கூட்டத்திற்கு ஒத்திட்டுப் பார்க்க வேறொரு கூட்டம் இருந்ததே கிடையாது. ஆப்பிரிக்கா இப்படிப் பட்ட ஒரு குலுக்குதலைக் கொண்டிருந்ததே கிடையாது. இந்த இருண்ட ஆப்பிரிக்கா தேசத்திலே அந்த ஒரே இரவு பொழு தினால், அவர்களுடைய வாழ்விலேயே கண்டிராத ஒரு குலுக் குதலை அவர்கள் பெற்றனர்'' என்று கூறியிருந்தார். அது சரியே, அந்த அஞ்ஞானிகளின் மத்தியில் அது நிகழந்தது. அங்கே நான் நோக்கிப் பார்த்த போது, அங்கே அந்த விலையேறப் பெற்ற ஏழை நீக்ரோ கறுப்பர் இனமக்களை நான் கண்டேன் அவர்கள் அந்த நீக்ரோக்களை அடிமைகளை விட மோசமாக நடத்திக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அங்கே பரிதாபமான பையன் ஒருவன்... நான்.... அங்கே அவன் வேலை செய்து கொண்டிருந்தான், நான் கூறினேன். அந்த பையன்... பெண்களாகிய நீங்கள் எவ்வளவு கடினமாக பிரயாசப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் எவ்வளவு செய்வீர்களோ அதை அந்த பையன் ஒரு நாளிலே செய்தாக வேண்டியிருந்தது. அங்கே அந்த பழைய சிறிய கழிவறை (சுமார் நான்கு அடி நீளம் மற்றும் நான்கு அடி அகலம் இருக்கும்) அருகில் வெளியே ஒரு மரத்துண்டில் அவன் உறங்குவான், தன் உடலை வளைத்து சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடப்பான். அவனுக்கு மாதம் ஒரு பவுண்ட் சம்பளம் கிடைக்கும், அது இரண்டு டாலர்கள் எண்பது செண்டு என்றிருக்கும். மேஜையிலிருக்கும் துணிக்கைகள் கூட அவனுக்கு கிடைக்காது, ஒரு பக்கெட் பழைய ஆகாரம். அதில் மூன்றில் ஒரு பங்கு காலை ஆகாரத்திற்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு மாலை ஆகாரம்; மற்றைய பங்கு அன்றிரவு ஆகாரமாக இருக்கும். பத்து அல்லது பதினொன்று அல்லது பன்னிரண்டு மணி வரை வேலை செய்வான்; அடுத்த நாள் காலையில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும், மற்ற வேலை களையும் செய்ய வேண்டும், படிக்கட்டுகளுக்கு பாலிஷ் போட்டு விட்டு, எஜமானனின் காரைத் துடைக்க வேண்டும். அங்கே இருக்கும் அந்த பெரிய தடித்த தாய் ஒன்றுமே செய்யமாட்டாள், ஆனால் அங்கே உட்கார்ந்துக் கொண்டு அவளுடைய நகங்களை உராசிக் கொண்டு டீ குடித்துக் கொண்டு ஒன்றிற்க்கும் உதவாத சோம்பேறி பெண்ணாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். 81அந்த ஏழைப் பையன் எல்லா வேலையையும் செய்ய வேண்டியவனாக இருந்தான். அவனுக்கு இருமல் வந்து கொண்டிருந்தது, ''அவன் தொடர்ந்து இரும்பிக் கொண்டே யிருந்தான், அவனுக்கு மிகவுமாக ஜலதோஷம் பிடித்திருந்தது. ஒரு நாள் அங்கே நான் எட்டிப்பார்த்து ''நீங்கள் அந்தப் பையனை... அவனை நீங்கள் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வரலாமல்லவா?'' என்று கூறினேன். அதற்கு அவர்கள் ''அவன் ஒரு காஃபீர் (Kafir) இனம்'' என்றனர். (தென் ஆப்பிரிக்க பண்டு (Bantu) இனத்தை சேர்ந்தவன் - தமிழாக்கியோன்) (ஒலி நாடாவில் காலியிடம் - ஆக்கியோன்) அப்படியென்றால் ஒரு 'போக்கிரி'' என்று அர்த்தம். அந்த விதமான பெயரைக் கண்டால் அமைதியிழந்து கோபப்படு வார்கள், நானும் கூட. ஆனால் அந்த மனிதனோ என் சகோதரன். அதோ அவன் அங்கே இருக்கிறான். அவன் ஒரு அடிமை அல்ல. அவன் கறுப்பு இனம் என்பதால் அவன் அடிமை என்பதல்ல. அவன் என்னுடைய சகோதரன். ஆனால் அவன் அங்கே அந்நிலையில் இருந்தான். நான் அங்கே நடந்து சென்று அவனை ''தாமஸ்'' என்றழைந்தேன். அந்தப் பையனால் மூன்று மொழிகள் பேச முடிந்தது. நான் 'தாமஸ்“ என்று அழைத்தேன். அவன் திரும்பி முழங்காலில் விழுந்து தன் கைகளை மேலே உயர்த்தி, “ஆம் எஜமானே'' என்றான். நான், ''எழுந்து நில். நான் உன் எஜமான் அல்ல, நான் உன் சகோதரன்“ என்றேன். நான் என் கையை அவன் தோளின் மீது போட்டு அணைத்தேன். அவன் என்னை இந்த விதமாக நோக்கிப் பார்த்தான், அவன் கன்னங்களில் அதிகமாக கண்ணீர் வழிந் தோடிக் கொண்டிருந்தது. நான் ''தாமஸ்'' என்றேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார். அப்பொழுது ஒரு தரிசனம் உண்டானது. நான் அவனிடம் ஒன்றைக் கூறினேன். அதற்கு அவன் “ஆம் எஜமானனே, அது உண்மை . அவ்விதமாகத் தான் அது இருந்தது” என்றான். நான், ''தாமஸ், அந்த இருமல் உன்னை விட்டு போய்விட்டது, இனிமேல் உனக்கு அது வராது'' என்றேன். அப்பொழுதிலிருந்து அவனுக்கு இருமல் வரவில்லை. என் சட்டைப் பைகளில் மக்கள் பணத்தை போட்டனர், என்னிடம் சுமார் நூற்றெண்பது பவுண்ட் பண நோட்டுகள் இருந்தன. (அதன் மதிப்பு இரண்டு டாலர்கள் எண்பது செண்டு கள் ஆகும்) அதை அவனிடம் கொடுக்க நான் பயந்தேன், அவனு டைய எஜமான் அவன் பணம் வைத்திருப்பதைக் கண்டால், அவன் பணத்தை திருடியுள்ளான் என்று முடிவு செய்து அவனை அடித்து கொன்று போடுவார்கள். அப்பொழுது நான் அவன் எஜமானிடம் “நான் அந்தப் பையனை நேசிக்கிறேன். அவனுக்கு சிறிது பணத்தைக் கொடுக்க எனக்கு அனுமதியுங்கள்'' என்றேன். அதற்கு அவர், “ஓ, கூடாது, வேண்டாம்! நீங்கள் அவனைக் கெடுத்து விடுவீர்” என்றார். அதற்கு நான் ''நீங்கள் தான் கெட்டுப் போய் தாறுமாறாய் உள்ளீர்கள். நீங்கள் அங்கே படுத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு வேலை கூட செய்வதில்லை. எல்லா வேலைகளையும் அந்தப் பையன்தான் செய்கின்றான், மேலும் அவன் பட்டினியாக இருக்க விட்டு சாகவும் விட்டு விட்டிருக்கிறீர்கள். அவனுக்கு ஒரு விதவைத் தாயும் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சகோதரியும் இருக்கின்றனர், ஒரு மாதத்திற்கு இரண்டு டாலர் எண்பது செண்டுகள் மாத்திரமே கொடுக்கின்றீர்“ என்றேன். பாருங்கள். மேலும் நான் ''நீங்கள் அவ்விதம் செய்வதால் அச்செயலின் பலனை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்! இருபது இலட்சம் வெள்ளையர்களும் சுமார் நூறு கோடி கறுப்பு இன மக்களும் இருக்கின்றனர். உங்கள் நாட்டில் ஒரு கிளர்ச்சி உண்டாகும்'' என்று கூறினேன். அதற்கு அவர், “இதை நீங்கள் அமெரிக்காவிலும் கூறலாம் அல்லவா, அங்கே மட்டும் சம்பவித்துக் கொண்டிருப்பது என்ன? என்றார். அதற்கு நான், ''அமைதியாக இரு என்று என்னிடம் கூறப்போவது யார்? தேவன் மாத்திரமே. அவ்விதமாக நடத்தப் படுகிறார்கள் என்று மக்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளதில் வியப்பொன்றுமில்லை“ என்றேன். (ஓலி நாடாவில் காலியிடம்- ஆசி) உங்களுக்கு புரிகின்றதா. நான் அவர்களுக்காக பேசினேன். 82ஒரு நாள் இரண்டு போதகர்கள் தங்கள் சட்டைக் கழுத்துப் பட்டையை திருப்பி விட்டுக் கொண்டு, சிறிய மீசையுடைய வர்களாக, ரோடேஷியாவிற்கு (Cஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர்- தமிழாக்கியோன்) வந்தனர். ஒரு பச்சை விமானத்தில் விமானி நான் சென்ற விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார், விமானம் நேராக நேராக ஒரு வெப்ப மண்டல பகுதிக்கேயுரிய புயல்களில் ஒன்றைப் போலிருந்த புயல் மண்டலத்திற்குள் சென்று விட்டது, சுமார் இரண்டு மைல்களுக்கு பறந்தது. மேலே உயரத்தில், மேலும் கீழும் விமானம் ஆடியது. விமானத்தில் நாங்கள் தலை கீழாக இருந்தோமா என்று எங்களுக்குத் தெரியவில்லை; விமானம் மேலும் கீழும் திரும்பிக் கொண்டேயிருந்தது. முடிவில் அது ... விமானம் மேலே செல்கிறதா அல்லது கீழே செல்கிறதா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. முடிவாக அது எங்களைப் புயல் மண்டலத்திற்கு மேலே தள்ளி விட்டது. நாங்கள் தரையிறங்கின போது என் வயிறு மிக மோசமான நிலையில் குமட்டுகின்றதாய் இருந்தது! அந்த இரண்டு போதகர்கள், பெந்தெகொஸ்தே போத கர்கள், ஒரு காரை எடுத்துக் கொண்டு என்னை பிரிமேடாரி யாவிற்கு காரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். நான் தெற்கு ரோடேஷியாவிலிருந்து வந்து கொண்டிருந்தேன்; அங்கே நான் இறங்கினேன். எனக்கு உடல் நலமில்லாதிருந்தது. அங்கே சகோதரன் பாக்ஸ்டர் அமர்ந்திருந்தார், அவருக்கும் உடல் நலமில்லாதிருந்தது, பில்லி பாலுக்கு உடல் நலமில்லாமல் இருந்தது. ஆகவே அங்கே ஒரு வளாகத்தின் வழியாக அந்த போதகர் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்; அங்கே கறுப்பு நிற இனமக்கள், ஒரு குலமர (tribal) பாவம் போன்ற ஏதோ ஒன்றை செய்திருப்பவர்கள், தங்கள் பழங்குடி குல மக்களை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு, அந்த வளாகத்தில் வந்து தங்கிக் கொண்டிருந் தனர். அம்மக்கள் நகரத்துக்குள்ளாக அனுமதிக்கப்படுவதில்லை; ஆதாலால் ஒரு தகர டப்பி (tin) அல்லது அவர்களால் செய்ய முடிந்த ஏதோ ஒன்றைக் கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருந் தனர்- மிக மிக அழுக்கானவைகள் மற்றவைகள்- அது உண்மை . ஆகவே காரை அந்த வளாகத்துக்குள் செலுத்திக் கொண்டிருந் தனர், அங்கே ''மணி இருபது மைல் வேகம்'' என்ற வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகையை நான் கண்டேன். ஆனால் அந்த மனிதனோ காரை மணிக்கு அறுபத்தைந்து மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். அங்கே இருந்த பரிதாபமான ஏழை தாய்கள் ஓடி வந்து அங்கே இருந்த தங்கள் சிறு குழந்தைகளை வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டார்கள், உடம்பில் துணியே இல்லாத மிகச் சிறிய குழந்தைகள் அங்கே தெருவில் இருந்தனர், சுமார் இரண்டு வயது முதல் ஐந்து அல்லது ஆறு வயது வரை குழந்தைகள் இருந்தன; அத்தாய்மார்கள் கூக் குரலிட்டுக் கொண்டு ஓடி வந்து அந்த சிறு பிள்ளைகளை பிடித்து இழுத்துக் கொண்டனர். ஒரே சமயத்தில் அக்குழந்தைகள் நான் கை ஏறக்குறைய கொன்று போடுகின்ற விதத்தில் காரை மிக அருகாமையில் ஓட்டிக் கொண்டிருந்தார். 83நான் அவர் தோளில் தட்டி, “ஏய்! உனக்கு என்ன ஆயிற்று?'' என்றேன். அவர் திரும்பி என்னை நோக்கி, ''நீங்கள் என்ன கூறினீர்கள்?'' என்றார். ''உனக்கு என்ன ஆயிற்று? காரின் வேகத்தை குறை'' என்று கூறினேன். ''அங்கே நேரத்தோடு வரவேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். ''நான் உனக்கு உத்தரவு கொடுக்கிறேன், காரை நிறுத்து'' என்றேன். அதற்கு அவர் மேலும் நான், 'நீங்கள் அந்த மக்களுக்காக இரக்கம் காட்டி அவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லையா?'' என்று கூறினேன். அவர், “எந்த மக்களுக்கு?'' என்று கேட்டார். நான், “அங்கே வெளியே இருந்த அப்பிள்ளைகளை, காரை ஏற்றி ஏறத்தாழ கொன்று போட்டிருப்பீர்களே, அந்த பிள்ளைகளைக் குறித்து தான்” என்றேன். அதற்கு அவர், ''அம்மக்கள் காஃபீர்கள் (kafir)“ என்றார். நான் ''உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறீர்களே, அவ்விதம் கூற உங்கள் வெட்கமில்லையா, வெட்கக்கேடு!'' என்றேன். மேலும் நான், ''நீங்கள் அந்த குழந்தையை காரை ஏற்றிக் கொன்று போட்டிருந்தால், உங்கள் தாய் உங்களைக் குறித்து எவ்விதமாக நினைத்திருப்பார்களோ, அதே போன்றுதான் அத்தாயும் தன் குழந்தையைக் குறித்து நினைத் திருப்பாள் அல்லவா? அவள் படிப்பறிவு இல்லாதவளும் அறிவின்றியும் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு தாயின் அன்பு தன்னுடைய குழந்தைக்காக கூக்குரலிடுகின்றது. நீங்கள் அந்த விதமாக ஒரு காரியத்தை செய்வதென்பது, அது கூடவே கூடாது. இருப்பினும் உங்களை நீங்கள்... என்று அழைத்துக் கொள் கிறீர்கள்'' என்றேன். மேலும் நான், மற்றுமொரு காரியம், அந்த வேகக்கட்டுபாடு பலகை மணிக்கு இருபது மைல் வேகம் என்று கூறுகிறது. என் வேதாகமம், 'இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்' என்று கூறியிருக்கிறது'' என்றேன். அவர் தன் தலையை குனிந்தார். மேலும் நான், ''நீங்கள் மணிக்கு இருபது மைல் வேகத்திற்கு குறைத்து அம்மக்களை உங்கள் சகோதரனைப் போன்று அவர்களைப் பாவித்து நடத்துங்கள். அந்த விதமாக நீங்கள் இனியும் செய்வீர்களென்றால் உங்களுக்கு அவமானக் கேடு'' என்றேன். ஓ, என்னே, அவருக்கு கோப் மூண்டது. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை, நான் நேரடியாக அவரிடம் அது தவறு என்று ஆணித்தரமாகக் கூறினேன். அங்கே நான் சுற்றிலும் சென்றேன், மக்களுக்கு நான் அவர்களுக்கு சுவிசேஷத்தின் செய்தியை கொண்டு வர அவர்களுக்காகத் தான் நான் வந்துள்ளேன் என்று அறிந்திருந்தனர். அங்கே தேவனும் வருவார். அவர்களை ஒன்றாகச் சேர்த்து, வெள்ளையரை ஒரு பக்கத்தில் உட்கார வைத்து விட்டு, கறுப்பு இன மக்களை அங்கே உட்கார வைத்தால், அந்த கறுப்பு இன மக்கள் அந்த வெள்ளையரோடு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், ஒன்றுமே செய்ய மாட் டார்கள். பரிசுத்த ஆவியானவர் அந்த கறுப்பு இன மக்களிடையே சென்று அவர்கள் மத்தியிலிருக்கும் வியாதியஸ்தர்களையும் அவதிப்படுகிறவர்களையும், முடவர்களையும் வெளியே கொண்டு வந்து அவர்களைச் சுகப்படுத்தி இங்கே இந்த வெள்ளையரோடு உட்காரும்படிக்குச் செய்வார், அவர்கள் தாழ்வு மனப்பான் மையை அதிகமாக வளர்த்துக் கொண்டவர்களாக இருந்தனர். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களிடம் தேவன் எவ்வாறு ஈடுபடுகின்றார் என்பதைக் அது காண்பிக்கின்றது. 84இப்பொழுது, அந்த நபர் இன்னுமாக செய்தியைப் பெற்றுக் கொள்ளவே இல்லை. ஆனாலும் அவர் அந்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது, நான் செய்ய வேண்டியது என்ன? அந்த காரியம், நான் என்ன.... நான் அங்கே திரும்பவும் செல்ல வேண்டியனாக இருக்கின்றேனா? இப்பொழுது, தேவன் என்னை சுவிசேஷத்திற்கு அழைக்கிறாறென்றால் அப்படியானால் நான் ஒரே சமயத்தில் அவருடைய தீர்க்கதரிசியாகவும் சுவிசேஷகனாகவும் இருக்க முடியாது. நீங்கள் அதை... அந்த அலுவல்கள் ஒன்றுக்கொன்று கலவாது, நான் ஒரு... என்னவென்று அறியாதிருக்கின்ற ஒரு போராட்டத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். நான் ஒரு சுவிசேஷகனாக இருக்கப் போகிறேனென்றால், நான் ஒரு சுவிசேஷகனாகத்தான் இருந்தாக வேண்டும். நான் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்கப்போகிறேனென்றால், நான் எங்காவது மலைகளில் சென்று அங்கேயே இருந்து விடுவேன்; நான் கர்த்தரிட மிருந்து வார்த்தையை கேட்கும் வரைக்கும் சபையில் இருக்க மாட்டேன், சபையோரிடமும் இருக்க மாட்டேன்; வார்த்தையை பெற்ற உடன் வேகமாக வருவேன், அதை அளிப்பேன், திரும்பி வேகமாகச் செல்வேன். பாருங்கள்? அவைகளில் ஒரு காரியம், அது எவ்வகையிலும் இல்லாமல் சம நிலையில் உள்ளது. அல்லது அது முடிவு பெற்றிருக்கக் கூடும். அந்த மூன்று காரியங்களில் ஒன்றாக அது எனக்கு இருக்க வேண்டும். செய்தி முடிந்திருக்க வேண்டும் அல்லது அந்த இரண்டு காரியங்களில் ஒன்றை நான் பெற்றாக வேண்டும். என்ன செய்வதென்று எனக்குத் தெரிய வில்லை . 85கடந்த இரவு நான் ஒரு சொப்பனம் கண்டேன், நான் ஒரு கூட்டத்திற்குச் செல்வது போல சொப்பனம் கண்டேன், அப்படிப் பட்ட ஒரு மக்கள் குழுவை நான் கண்டதில்லை! என்னால் பார்க்க முடிகின்ற அளவிற்கு மக்கள் கூடியிருந்தனர். ஏதோ ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் போன்ற ஒன்றில் அவர்கள் கூடியிருந்தனர். யாரோ ஒரு நபர் என் பின்பாக வந்தார், அவர் பில்லியைப் போல் இருக்கவில்லை, அவர் என்னை கீழே அழைத்துச் சென்றார். நான் அந்த அறையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன், நான் அபிஷேகத்துக்குள்ளானேன், இருதயங்களைப் பகுத்தறிவுதல் என் பதற்கு தயாராக ஆகின்ற ஒரு நிலைக்கு வந்தேன், நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக அவ்வாறு கூறினேன். சாலையில் ஒரு ஆள் என்னிடம் பேச ஆரம்பித்தான். அவன் பேச ஆரம்பித்த போது இருதயங்களை பகுத்தறியும் அந்த நிலை என்னை விட்டுச் சென்று விட்டது. அதை என்னால் உணர முடியவில்லை. அந்நிலைக் குள்ளாகச் திரும்பிச் செல்ல நான் முயற்சி செய்தேன்; அவ்வித மாக என்னால் செய்ய முடியவில்லை. என்னால் முடியவேயில்லை. நான் சோர்ந்து போனேன். அவர்கள் என்னை மேலே அழைத்துச் செல்கையில் நான் மக்கள் கூட்டத்தை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தேன், நான் பார்த்த போது, ''நல்லது, என் மனதில் பிரசங்கத்திற்கான பொருளை வைத்திருக்கிறேன், இந்த ஸ்தாபனங்களையும் நான் அறிவேன், இந்த மக்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் நான் அறிவேன், ஆகவே அந்த சுவிசேஷத்தை என்னால் முடிந்த வரைக்கும் மிக ஆணித்தரமாக நான் பிரசங்கிக்கப் போகிறேன்“ என்று கூறிக் கொண்டேன். நான் பிரசங்க மேடைக்கு நடந்து சென்ற போது அது என்னை விட்டுச் சென்று விட்டது. இருதயத்தைப் பகுத்தறிதலும் இல்லை, அந்த செய்திகள் ஒன்று கூட என்னிடம் இருக்கவில்லை; நான் அங்கே நின்றேன், மக்கள் அங்கு நின்று காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது, “நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று தொடர்ந்து சென்று கொண்டே யிரு. தொடர்ந்து சென்று கொண்டே இருப்பார்'' என்று கூறினது. நான் அங்கே செல்லும் போது அது எனக்கு அளிக்கப்படும். ''அப்படியே சென்று கொண்டே இரு''. பாருங்கள்? அப்பொழுது நான் நேராக அங்கே பிரசங்க மேடையில் இருந்தேன்.... சொப்பனம் கலைந்து நான் விழித்துக் கொண்டேன். 86ஒருக்கால் நான் அதைக் குறித்தே நினைத்துக் கொண்டிருந்த தால், இப்படிப்பட்ட ஒரு சொப்பனம் எனக்கு வந்திருக்கலாம். அவ்விதமாக அது இருக்கலாம். அந்த சொப்பனம் ஒருவேளை ஆவிக்குரியதாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அதைக் குறித்த வியாக்கியானமும் என்னிடம் இல்லை, அது எதைக் குறிக்கிறதென்றும் எனக்குத் தெரியவில்லை. அதை என்னால் உங்களுக்குக் கூறமுடியவில்லை, அது என்னவென்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னவாயிருந்தாலும் சரி, என் வாழ்க்கயிைன் முக்கியமான ஒரு கட்டத்தில் எங்கேயோ நான் இருக்கிறேன். பாருங்கள்? எங்கேயோ ஏதோ ஒன்று, ஏதோ ஒன்று இருக்கின்றது. ஆனால் ஒன்று என்னால் கூறமுடியும், நான் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறேன். அல்லது இந்த விதமாக, என்னை... அது இந்த விதமாக அல்லது அந்த விதமாக இருக் கின்றது, வேறொருவர் மற்றொரு விதமாக ஏற்றுக் கொள்கிறார். அதன் காரியம் என்னவெனில், ஒரு கருத்திற்கு நேராக கூறப்படும் போது ஒருவர் இந்த விதமாக அதைக் கேட்பார், அதை அவர் மற்றொவரிடம் கூறி, அக்கருத்தினின்று சிறிது அகன்று சென்று அதைச் சார்ந்து கொள்வார். அடுத்த நபர் இன்னும் சிறிது அகன்று சென்று அதைச் சார்ந்து கொள்வார், அடுத்தவர் இன்னும் சிறிது அகன்று செல்வார், பிறகு காரியத்தை விட்டு அப்படியே வெளியே சென்று விடுவார்கள். ஒரு அதை இந்த விதமாக கூறிக் கேட்பார், அவர் இந்த விதமாகச் செல்வார், அந்த விதமாகச் செல்வார், மற்றொரு விதமாக செல்வார். பாருங்கள், நீங்கள் அகன்று சென்று விடுவீர்கள். கூட்டங்களில் சரியாக ஒரு காரியத் தை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, கேட்பவர்கள் அந்த வித்தியாசப்பட்ட கருத்துக்களினூடாகச் சென்று விடுகிறார்கள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அந்த குறிப்பிட்ட காரியத்தை கேட்கிறார்கள். அந்த காரியத்தை புரிந்தும் கொள் கிறார்கள்! அவர்கள் அதை அறிந்து கொள்கின்றார்கள். ஏனெனில், சரியாக அதன் அர்த்தம் என்னவென்பதை நான் அப்படியே கூறிவிடுகின்றேன் (புரிகின்றதா?) செய்தியை அப்படியே சரியாகக் கூறுகிறேன். 87இப்பொழுது, இதைத் தான் நான் கூறுகின்றேன். ஆனால் காலமுழுவதுமாக அதிகமான தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல் தான் தொடர்ந்து காணப்படுகின்றது. அது என்ன? விதைக்கப்பட வேண்டிய எல்லா விதமான விதைகளையும் நான் விதைத்து விட்டேனா? அந்நேரமானது மிக அருகாமையிலுள்ளதா? அந்த மகத்தான செய்தியாளன் சரியாக இப்பொழுது காட்சியில் அடியெடுத்து வைக்க தயாராக இருக்கிறாரா? கர்த்தருடைய வருகை அருகாமையிலுள்ளதா? இந்த தேசத்திலிருந்து மற்றொன்றுக்கு அழைக்கப்படுதலாக அது இருக்குமா? அவர் என்னை சுவிசேஷ ஊழியத்திலிருந்து அழைத்து விட்டாரா? நினைவில் கொள்ளுங்கள், நான்... அதை நான் மனைவியிடம் திரும்பக் கூறினேன். உங்களில் அநேகர் அந்த புத்தகத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், அங்கே சரியாக அந்த மூலையில், நான் அடித்தளக்கல்லை நாட்டின அந்த நாளில், அதில் என்ன இருக்கிறதென்றால்... அக்காலை அவர் என்னை உறக்கத் தினின்று எழுப்பின போது, அங்கே அந்த அறையில் நான் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே, ஒரு மிக இளவயது பிரசங்கியாக நான் இருந்தேன், அவர், “ஒரு சுவிசேஷகனின் வேலையைச் செய். நீ ஒரு சுவிசேஷகன் அல்ல, ஆனால் அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்'' என்றார், ஒரு வேதவசனத்தை எனக்கு மேற்கோள் காட்டினார். நான் ஓடிச் சென்றேன். அந்த இரண்டு மரங்களைக் கண்டேன், ஒன்றை இங்கே உடைத்தேன். ஒருத்துவம் மற்றும் திரித்துவம். அவைகளை கலப்பினம் செய்யவில்லை, அவைகளை அப்படியே நான் விதைத்தேன். அப்பொழுது அந்த பழம் என் கரத்தில் விழும்படிக்கு அவர் பார்த்துக் கொண்டார். அப்பொழுது நான் கல்வாரிக்கு ஓடும்படிக்குச் செய்தார். இப்பொழுது கவனியுங்கள், அவர், ''நீ இதிலிருந்து வெளியே வந்தவுடன் பதீமோத்தேயு 4, 1தீமோத்தேயு 4ஐ வாசி'' என்று கூறினார். 88நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அது என்னை விட்டுச் சென்றது. அது தரிசனமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அதை என்ன என்று அழைப்பது என்று கூட அப்போது எனக்குத் தெரியாதிருந்தது. நான் அங்கே அடித்தளக் கல்லை (அந்த நாளின்) நான் நாட்டிக் கொண்டிருந்தேன். இப்பொழுது அந்த மூலைக்கல்லில் அது எழுதப்பட்டிருக்கின்றது, அது கூறுகிறது: ...சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறை வேற்று. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக் கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்திலிருந்து விலக்கப்பட்டு கட்டுக் கதைகளுக்கு திருப்பப்படுவார்கள். (அதுதான் ஒருத்துவமும் திருத்துவமும், அவர்கள் அதை இழந்து...) இப்பொழுது அவர் ''நீ ஒரு சுவிசேஷகன்'' என்று கூறவேயில்லை, அவர், ''அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்'' என்று கூறினார். புரிகின்றதா? இப்பொழுது அந்த நேரம் வந்து விட்டதா? அதை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதா அல்லது வேறே ஒன்றிற்கான நேரமானது வந்து விட்டதா? அது எனக்குத் தெரியாது. 89நான் இதைத் தான் செய்ய வேண்டுமென்று விரும்பினேன், உங்களிடம் ஒளி மறைவற்ற ஒரு சம்பாஷணையை நான் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். கூட்டத்தை முடித்து உங்களை அனுப்பி விட வேண்டிய நேரத்தையும் கடந்து நான் பேசி விட்டேன். உங்களை இவ்வளவு நேரமாக கூட்டத்தில் வைத்துக் கொண்டதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறன்று சகோதரன் போசே வருவதற்கு முன்னர் போதகரே, அது உமக்குப் பிரிதியாயிருந்தால், ஞாயிற்றுக்கிழமை காலை நான் ஒருக்கால் இங்கே வந்து சாயங்கால நேர சுவிசேஷகம் அல்லது அதைப் போன்ற ஒரு பொருளின் பேரில் பேசுவேன், (சகோதரன் நெவில், “அருமையானது! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்கிறார்ஆசி) அது கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை. இன்றிரவு நான் அதன் பேரில் தான் பேசலாம் என்றிருந்தேன், அது கர்த்தருடைய சித்தமாயிருக்குமானால் மற்றொரு நாள் ஒளி மறைவின்றி விவரமாக பேசலாம். ஒருக்கால், இந்த விதமாக அது இருப்பது நல்லது என்று நான் உணருகிறேன். பாருங்கள். 90நான் உங்களுக்காக ஜெபிக்கின்றேன். நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். ''சகோதரன் பிரன்ஹாம், நான் ஜெபிப்பேன்'' என்று கூற மாத்திரம் செய்யாதீர்கள், அதை நீங்கள் செய்யுங்கள்! பாருங்கள்? ஜெபத்தின் பேரில் தான் நான் சார்ந்திருக்கிறேன். அவரால் நான் வேறொரு இடத்திற்கு தள்ளப்படுவேனானால், ஜெபமானது எனக்குத்தான் தேவைப்படுகின்றது. நான் ஒரு மானிடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் தேவன் அல்ல. நானும் உங்களைப் போலவே ஒரு மானிடப் பிறவியே. தேவனுடைய சித்தம் என்ன என்றும், அதை அறிந்து அதற் குள்ளாக நடக்க அதை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். யாருமே அதை... “ஒருவன் ஞானத்தில் குறைவுள்ள வனாயிருந்தால்.... தேவனிடத்தில் கேட்கக்கடவன்.'' அதைத் தான் நான் செய்கின்றேன், தேவனிடத்தில் கேட்கின்றேன். என் சபையாகிய உங்களிடம் ஒளிவு மறைவு இன்றி இதை நான் கூறுகிறேன். நாம் என்ன, எங்கே இருக்கிறோம்? நாம் எதில் நின்று கொண்டிருக்கிறோம்? எந்த மணி நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் சரியாக இங்கே முடிவில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அது ஒரு வழியாக அல்லது மற்றொரு வழியாக அது செல்லலாம். ஆகவே நீங்கள்.... ஒருக்கால் என்னுடைய வேலை முடிந்து விட்டிருக்கலாம் அல்லது வெளி நாடுகளில் ஊழியக்களத்திற்கு நான் அழைக்கப்படலாம், அல்லது அவர் என்னை ஒரு சுவிசேஷகனாகவோ அல்லது ஒரு ஞானதிருஷ்டிக்காரனாகவோ (seer) ஆக்கலாம். நான் முடிவில் இருக்கின்றேன். ஆகவே, அவைகளில் ஒன்று சம்பவித்தே ஆக வேண்டும். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எந்த வழியாக செல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியவில்லை. அவைகளைக் குறித்து குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டங்களில், நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். நான், ''கர்த்தாவே, நான் செய்துக் கொண்டிருக்கின்ற விதமாகவே நான் செய்யப் போவதில்லை. அங்கே முன்பு நான் செய்தது போலவே இக்கூட்டத்தை நான் அணுகப்போகிறேன். நான் என்ன செய்ய வேண்டியவனாக இருக்க வேண்டும் என்று நீர் எனக்கு அழைப்பு கொடுக்கும் வரையிலும் நான் அந்த சுவிசேஷ ஊழியத்தின் பேரில் சார்ந்து அதையே செய்து கொண்டிருப்பேன்'' என்று ஜெபித்தேன். 91இப்பொழுது நான் விதையை எல்லா இடங்களிலும் விதைத்துவிட்டேன். ஒலி நாடாக்கள் உலககெங்கிலும் சென்றிருக் கின்றன. என் செய்திகள் உலகத்தைச் சுற்றிச் சென்றுள்ளது. எல்லா இடங்களிலும், அதைக் குறித்து எல்லா சபைகளுக்கும் முழுவது மாக - தெரியும். பிதாவானவர் எதையெல்லாம் தெரிந்து கொண் டுள்ளாறோ அதை அவர் அழைப்பார். பாருங்கள்? ஆனால் இப்பொழுதோ இச்செய்தி அவர்களுக்கு ஒரு சட்ட விரோத செயல்போல குற்றமான ஒன்றாக ஆகிவிட்டது. ஓ, அதனுடன் எந்த வித தொடர்பையும் கொண்டிருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. இல்லை, ஐயா. நான் சென்று வியாதியஸ்தருக்காக ஜெபித்து, அதைக் குறித்த ஒரு எளிய செய்தியை அளித்துபரிசுத்த ஆவியானவர் எந்த விதமாக வழி நடத்துகின்றார் என்று நான் பார்க்கட்டுமா? அவர் இன்னுமொரு அழைப்பு எனக்கு அளிக்கும் வரையில் இதைச் செய்ய வேண்டும் என்றுதான் என் மனதில் இருக்கின்றது. ஏனென்றால் என்ன செய்ய வேண்டு மென்று தேவனிடம் ஒரு மனிதன் புரிந்து கொள்ளும் வரை, அதை நீங்கள் உடையதாயிருக்கும் வரையிலும் தான் என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. நான் வீட்டிலேயே இருக்க எனக்கு விருப்பமில்லை. இச்செய்தி என் இருதயத்திலேயே உள்ளது. மக்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர், விழுந்து கொண்டிருக்கின்றனர், நித்தியத் திற்குள் செல்லாமல் வெளியே சென்று கொண்டிருக்கின்றனர். நான் என்ன செய்வது? என்னால் முடிந்த வரையிலும் செய்தியை நான் எல்லா இடங்களிலும் வெடி சத்தம் போல முழங்கி, காரியத்தை அவர் மாற்றும் வரைக்கும் நான் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து சொல்வேனாக. எனக்காக நீங்கள் ஜெபியுங்கள், நானும் உங்களுக்காக ஜெபிப்பேன். நீங்கள் ஜெபிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 92இப்பொழுது, புதன் இரவு ஜெப கூட்ட ஆராதனையும், மற்றும் வெள்ளி இரவு ஆண்கள் கூட்டத்தையும் நினைவில் கொள்ளுங்கள். அது நடக்கவிருக்கின்றதா? ஒருக்கால் உங்கள் எல்லோரையும் சந்திக்க நான் வருவேன், ஒரு வெள்ளி இரவு உங்களை சந்திக்க நான் வருவேன் என்று உங்களிடம் நான் கூறியுள்ளேன். சரி, அப்படியானால் ஞாயிறு காலை கர்த்தருக்குச் சித்தமானால் சாயங்கால நேர சுவிசேஷகம் என்பதன் பேரில் நான் பேசப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால்; அதை மாற்ற லாம், அது எனக்குத் தெரியாது. சாயங்கால நேரத்தில் எந்த விதமாக சுவிசேஷகர்கள் வருவார்கள் என்பதைக் குறித்து சரியாக இப்பொழுது அதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு ஞாயிறு இரவு, சகோதரன் போசேயின் படக் காட்சி - அதை இப்பொழுது நினைவில் கொள்ளவும். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த வாரத்திற்கு நாங்கள் அறுவடைக்களத்தில் அறுப்போம், எங்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! அவர்தான் பிதா. ஆமென்! அவர்தான் குமாரன். ஆமென்! அவர்தான் பரிசுத்த ஆவி. ஆமென்! ஆமென், ஆமென். இன்னும் பாடுங்கள். ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென், ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவர் வருகின்றாரா? ஆமென்! நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! இன்றிரவாக இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! காலையாக இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! எந்நேரமாகவும் இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! ஆமென், ஆமென்! இன்னுமாக பாடுங்கள். ஆமென்! இனனுமாக சத்தமிடுங்கள். ஆமென்! இன்னுமாக ஜெபியுங்கள். ஆமென்! ஆமென், ஆமென்! கர்த்தராகிய இயேசுவே வாரும். ஆமென்! உங்கள் சபையை ஆயத்தப்படுத்துங்கள். ஆமென்! நாம் ஆயத்தமாகின்றோம். ஆமென்! ஆமென், ஆமென்! என் தாயைக் காண விரும்புகிறேன். ஆமென்! என் தந்தையைக் காண விரும்புகிறேன். ஆமென்! என் இரட்சகரைக் காண விரும்புகிறேன். ஆமென்! ஆமென், ஆமென்! ஓ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! 93எங்கள் பரலோகப் பிதாவே, இது எங்களுடைய ... ஒரு சிறு ஆமென் பாட்டு ஆகும். உம்முடைய போதனையை நாங்கள் நேசிக்கிறோம், நாங்களெல்லாரும் ''ஆமென்“ என்று கூறுகி றோம்! ஆவியானவரை நாங்கள் நேசிக்கிறோம், ''ஆமென்!'' அவர் வருகின்றார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ''ஆமென்!'' கர்த்தாவே, உம்முடைய வேதாகமத்தில் நீர் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாங்கள் ''ஆமென்” என்று அழுத்தமாய்க் கூறுகிறோம். வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்களுக்குத் தெரிந்த வரையிலும், வேதத் துள்ள எல்லாவற்றையும் அது எழுதப்பட்ட விதமாகவே, ஒவ்வொரு நிறுத்தற் குரியும், ஒவ்வொரு சிறு கோடும் (hyphen), எங்களுக்கு தெரிந்த வரையிலும் ஒவ்வொரு கால்புள்ளியும் கூட, அது எவ்வாறு எழுதப்பட்டுள்ள தோ அதை அப்படியே, அவ்விதமாகவே நாங்கள் போதிக்கின்றோம். ஓ, தேவனே, எங்களை திரும்பக் கொண்டு செல்லும், கர்த்தாவே, வானங்களில் அல்லேலூயா பாடலோடு தூதர்களின் முழக்கங்களோடு வருவதை ஒரு நாளிலே நாங்கள் கேட்போம், அப்போது இயேசு அங்கே தோன்றுவார். அப்போது சபை மேலே எடுத்துக் கொள்ளப்படும் என்று. நாங்கள் பேராவல் கொண்டுள்ள அந்த மகத்தான மனநிறைவு அளிக்கின்ற விருப் பத்தை எங்களுக்குத் தாரும். அவிசுவாசிகள், ''என்ன ஆயிற்று, அந்த மக்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் எங்கே சென்றனர்?'' என்று வியப்படை வார்கள். ஓ தேவனே, அவர்கள் அதை புரிந்து கொள்ளமாட்டார் கள். அவரை அவர்கள் காணவும்கூட மாட்டார்கள். ஆனால் வெளியே அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள், மறுபடியும் பிறந்தவர்கள் போன்றோர் கொண்ட அவர்கள் காணாமற்போவார்கள். சபையோ அவரைக் காணும். இம்மக்கள் எங்கே சென்று விட்டனரென்று மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் காணாமல் போய்விட்டனர் என்று மாத்திரமே அறிந்து கொள்வார்கள்; ஆனால் இவர்களோ தங்கள் கர்த்தரோடே இருப்பார்கள். அந்த நேரத்தில், கர்த்தாவே, இங்கேயே விடப்படுவது இரட்சிப்பின் காலமானது கடந்து சென்று விட்டது என்று அறிந்து கொள்வது பயங்கரமான ஒரு காரியமாக இருக்குமல்லவா? மீட்கப்படுதல் என்பது இனியும் இருக்காது! ''அசுத்தமாயிருக் கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; பரிசுத்தமில்லாதவன் இன்னும் பரிசுத்தமில்லாதவனாயிருக்கட்டும்' என்று வேதாகமம் கூறியிருக்கிறது. ஓ, அது எப்படிப்பட்ட ஒரு மணி நேரமாக இருக்கும்! 94கர்த்தாவே! இப்பொழுது நாங்கள் ஆயத்தமாகட்டும். பிதாவே, உம்மை நாங்கள் சந்திக்க எங்களை நாங்கள் ஆயத்தப் படுத்துவதென்பது, மற்றும் அனுதினமும் எங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்துவது என்பது எவ்வளவு அற்புதமான ஒரு சமயமாக இருக்கும் கர்த்தாவே. இன்று இந்த ஏழை ஆத்துமா எழுதிக் கேட்ட இந்த கேள்வியைப் போல், நாங்கள் ஒரு தவறைச் செய்து விழுவோமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவத்தையும் கழுவுகின்றது என்பதை அவர்கள் அறியட்டும். கேள்வியை கேட்ட அந்த நபர் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்க வில்லை, கர்த்தாவே, அவர்கள் பசி தாகம் கொண்டு ஆவியானவருடைய ஐக்கியத்துக்குள்ளாக திரும்ப வரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தவே அவர்களை மேலே கொண்டு வாரும். இந்த இருளடைந்த, வருத்தத்தால் நிறைந்த உலகத்திலிருந்து அவர்கள் மேலே எழும்பட்டும்; அங்கே சூரிய ஒளியானது அவர்கள் ஆத்துமாக்களின் மீது மறுபடியுமாக பிரகாசிக்க ஏதுவாக இருக்கும். அவர்கள் தாமே அந்த மகத்தான வான விளிப்பினின்று - இருளான மேகங்களுக்கு கீழாக திடு மெனக் கீழே விழுந்து விட்டார்கள். அவர்கள் நேராக அழுக்கிற் குள்ளாக, நேராக கீழே பாவத்துக்குள் விழுந்து விட்டார்கள். ஆனால் ஒரு காலத்திலே அவர்கள் அங்கே மேலே சூரிய ஒளியில் வாழ்ந்தார்கள். கர்த்தாவே அவர்கள் திரும்பவுமாக செல்ல விரும்புகிறார்கள். கர்த்தாவே இன்றிரவு அவர்களை மறுபடியுமாக சேர்த்துக் கொள்ளும். அங்கே மேலே இருப்பதை கண்டிராத வர்கள் யாராவது ஒருவர் இங்கே இருப்பார்களானால்.... இங்கே இருக்கின்ற எல்லாம், ஏவுகணை மற்றும் எல்லாம் சரியாக உமது வார்த்தையின் பிரகாரமாகவே இருக்கின்றது, சரியாக எப்படி நடந்தேறப் போகின்றதோ அதே விதமாகவே காரியங்களும் இருக்கின்றன. இன்றைக்கு உலக சபையானது என்ன செய்துள்ளனர் என்று நாம் காண்கிறோம். நோவாவின் நாட்களில் எவ்வாறிருந்ததோ, சோதோமின் நாட்களில் எப்படி காண்கிறோம், என்ன நடக்கும் என்று இயேசு கூறியுள்ளாறோ சரியாக அதே விதமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். நில நடுக்கத்தால் கடலில் உண்டாகும் ஆழிப் பேரலைகள்; எவ்வித மாக பெண்கள் நடப்பார்கள், ஆடை உடுத்துவார்கள், மற்றும் எவ்விதமாக அவர்கள் பிறர் விவகாரங்களில் எப்பொழுதும் தலையிடுபவர்களாக இருப்பார்கள், மற்றும் அவர்கள் எவ்விதமாக தாங்கள் விரும்புகிற விதமாக நடப்பது, மினுக்கி மற்றும் முறுக்கி நடப்பது மற்றும்... சரியாக அந்த தீர்க்கதரிசி கூறின விதமாகவே உள்ளன. ''இரும்பும் களிமண்ணும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது'' என்று தானியேல் கூறியிருந்தான். ஆகவே, ஓ, ஒவ்வொரு காரியமும், கர்த்தாவே, அது நிறைவேறிவிட்டது. நாங்கள் சரியாக கடைசி காலத்தில் இருக்கின்றோம். கர்த்தாவே, நிழல்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. சிகப்பு விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன, மணிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. 95ஓ தேவனே, சீக்கிரத்தில் அந்த தூதன் தன் காலை நிலத்தின் மீதும் சமுத்திரத்தின் மீதும் வைத்து தன் கைகளை மேலே உயர்த்தி ''இனி காலம் செல்லாது!'' என்று கூறுவார் என்பதை உம்முடைய மக்கள் உணரட்டும். அப்போது ஓ, எப்படிப்பட்ட ஒரு அழுகையும் துக்கிப்பும்; இழக்கப்பட்டவர்களிடம் தங்கள் முடிவானது எடுத்துக் கூறப் படும்போது; அது எவ்விதமான அழுகையும் பற்கடிப்புமாயிருக்கும் அவர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கிக் கதறுவார்கள், அவர்கள் ஜெபிப்பார்கள், ஆனால் அந்த ஜெபம் மிகவும் காலதாம தமான ஒன்றாயிருக்கும். இப்பொழுதே இரட்சிப்பின் நாளாகும். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்''. கர்த்தாவே, இதை அருளும். அந்த எடுத்துக்கொள்ளப்படுதலின் நாளிலே இங்கே ஒரு நபர் கூட அதை தவற விட வேண்டாம். காத்துக் கொண்டிருப் பவர்களோடு எங்களையும் சேர்த்து பரிசுத்த ஆவியானவர் மேலே எடுத்துக் கொள்ளும் வரையிலும் அல்லது எங்கள் சுதந்தரவீதத்தில் இளைப்பாறச் செல்லும் வரையிலும் நாங்கள் தாமே தேவனுடைய அன்பிலும் மற்றும் தேவ ஆவியிலும் மிகவுமாக நிறையப்பட்டிருப்போமாக. நீர் தானியேலிடம் ''தானியேலே, நீயோவென்றால் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, அந்த நாளிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்“ என்று கூறியுள்ளீரே. ஓ தேவனே, ''அநேகரை பாவத்திலிருந்து நீதிக்குட்படுத்து கிறவர்கள் நட்சத்திரங்களை விட என்றென்றைக்கு முள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள்'' என்று நீர் கூறியிருக்கிறீர். அது எப்படிப்பட்ட ஒரு நாள்! ஆனால் அந்த துன்மார்க்கர் அழிவுக் குள்ளாக திருப்பித் தள்ளிவிடப்படுவார்கள். ஓ தேவனே, மனிதர் இப்பொழுது தங்களுடைய வாழ்க்கையின் நிலைமையை உணர்ந்து கொள்ளும்படிக்குச் செய்யும். அதனால் என்றென்றைக் கும் முடியாத ஒரு சூழ்நிலைக்கு முன்னதாகவே அவர்கள் தாமே நீதியுள்ளவராகிய அவரிடமாக திரும்புவதற்கு ஏதுவாக இருக்கும். இதை அருளும் பிதாவே. 96சற்று நேரத்திற்கு நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்க, முடிவு ஜெபத்திலே, “சகோதரன் பிரன்ஹாம், நான் என்னுடைய கரத்தை உயர்த்துகிறேன், உங்களிடம் நோக்கி அல்ல. ஆனால் தேவனிடமாக உயர்த்துகிறேன். தேவன் தாமே என்னிடமாக இரக்கமாயிருக்கட்டும். அதினாலே ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டு அந்த நாளிலே நான் இருப் பேனாக'' என்று கூறி ஜெபத்திலே நினைவுகூறப்பட வேண்டு மென்று யாராவது இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக, அநேக கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பொழுது, பரலோகப்பிதாவே, தேவனே, ஒவ்வொரு வரையும், ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவர்களுடைய கரங்களை நீர் தாமே கண்டீர். அவர்களுடைய இருதயங்களை நீர் அறிவீர். கர்த்தாவே, நாங்கள் உணர்வது என்னவென்றால், ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கின்றது. உலகம் அதை அறியும், அவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றனர், தொலைக்காட்சிகளில் இயல்பு மீறிய உணர்ச்சியுள்ள நகைச்சுவைகளும் பாடல்களும் நிரம்பி காணப்படுகின்றன. அவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? ஒரு சிறு பையன் இருட்டில் ஒரு கல்லறையைக் கடக்கும் போது விசில் அடித்துக்கொண்டு செல்வது போல, அவன் மிகவும் பீதியுற்ற நிலையில் உள்ள அவன், விசில் அடித்து தன்னுடைய பயத்தைப் போக்க, தன்னுடைய நடுக்கத்தை போக்க முயற்சிக்கின்றான். அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். ஆகவே இந்த தேசமானது சிரிப்பின் மூலமாகவும் நகைச்சுவையின் மூலமாகவும்..?..! வேதாகமம் கூறுகின்ற விதமாகவே, ஒரு காலமானது வரும். அப்பொழுது அவர்கள், ''சத்தியத்திலிருந்து விலகி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும்'' என்கின்ற விதமாகவே செயல்படுவார்கள். மேலும் ''கடைசி நாட்களில் பரியாசக்காரர் மற்றும் சிரித்து ஏளனம் செய்பவர்கள் வந்து“' என்றிருக்கிறதே, கடைசி காலத்தில் இக்காரியங்கள் எவ்விதமாக இருக்கும், '' துணிகரமுள்ளவர் களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து சத்தியத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள்'' என்று அது சரியாக அவ்வாறிருப்பதை இப்பொழுது நாம் காண்கிறோம். 97ஓ தேவனே, மக்களை விழிப்பூட்டும்! சரியாக இப்பொழுதே அவர்கள் மரணத்தினின்று ஜீவனுக்கு கடந்து விட்டனர் என்ற ஒரு உறுதியை அவர்கள் பெறலாம் என்று உணரும்படிக்குச் செய்யும். நாம் கிறிஸ்துவை, அந்த பரிசுத்த ஆவியைப் பெறுகையில் நாம் உலகத்தினின்று சற்று மேலாக உயருகிறோம். நாம் ஏற்கெனவே அவருடன் உயிர்த்தெழுந்துவிட்டோம் என்று நாம் அப்பொழுது அறிந்து கொள்வோம், நாம் அந்த மாற்றத்திற்காக மாத்திரமே காத்துக் கொண்டிருக்கிறோம். அது மரணம் நின்று போய் இந்த மரித்துப்போகத்தக்கதான பரிமாணங்கள் (இங்கே நம்முடைய புலன்களில் சுழன்று கொண்டிருக்கின்ற இந்த மரித்துப் போகப்போகின்ற ஜீவனின் சிறு சக்கரங்கள்) மீட்கப்படும். ஓ தேவனே! அப்பொழுது நாங்கள் அவரைப் போன்ற சரீரத்தை நாங்கள் கொண்டிருந்து அந்த மகத்தான வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தில், அவருடன் நித்தியமாக நாங்கள் இருப்போம், அதன் அத்தாட்சியை நாங்கள் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, ஒருவரும் அதைத் தவற விட வேண்டாம். தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளவர்கள் இன்றிரவு இராஜ்யத்திற் குள்ளாக வேகமாகச் செல்வார்களாக. ஒருக்கால் அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, ஒருக்கால் ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம் ''அருமையானவளே, இன்றிரவு ஏதோ ஒன்று என்னை தொட்டது“ என்பார்; அல்லது மனைவி கணவனிடம் ”தேனே, நான் வழக்கத்துக்கு மாறான ஒரு உணர்ச்சியை கொண்டிருந்தேன்'', என்பாள். ''ஆம், அருமையானவளே, இங்கே கட்டிலின் பக்கத்தில் நாம் முழகாற்படியிடுவோம். முன்பு நாம் இதைச் செய்ததில்லை, ஆனால் இன்றிரவு நாம் ஜெபிப் போம். தேவன் நம்மிடம் இரக்கமுள்ளவராயிருந்து நம்மை சேர்த்துக் கொள்ள அவரைக் கேட்போம். இருதயத்திற்கு இனியவளே, நான் உன்னை நேசிக்கிறேன்.'' 98மற்றொரு நாள், அந்த ஆண் பெண்ணிடம் கூறினார்- அவர் கள் எவ்வளவாக ஒருவரையொருவர் நேசித்தனர்- ''உன்னுடன் நானும் பரலோகத்தில் இருக்க விரும்புகிறேன். அதை நான் தவற விட விரும்பவில்லை. ஒரு நாளிலே நாம் பரமவீட்டில் வரவேற் கப்படும் போது நான் உன் கையை என்னோடு கோர்த்துக் கொண்டு அந்த மகத்தான நடைக் கூடங்களினூடாகவும் நித்தி யத்தின் தோட்டங்களிலும் அழைத்து கொண்டு நடப்பேன். அதில் ஆட்டுக்குட்டியும் சிங்கமும் ஒன்றாகப் படுத்துக் கிடக்கும், நரியும் மாடும் ஒன்றாக படுத்துக் கொண்டிருக்கும். அங்கே இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது. அங்கே அவைகளினூ டாக நாம் நடந்து செல்லும் போது தேவ தூதர்களின் சங்கீதங்கள் இன்னிசை களாக ஒலித்துக் கொண்டிருக்கும், தூதர்கள் நம்மை பரவீட்டிற்கு வரவேற்கும் போது நமக்கு மேலே பாடப்படுகின்ற பாடல்கள் பாடப்படுகையில், அருமையானவளே அங்கே நான் உன்னோடே கூட இருக்க விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்.'' ஒருக்கால் உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக் கலாம். ''உன்னை நான் விவாகம் செய்த போது உன்னுடைய சிறிய அழகிய முகத்தை நான் நினைவுகூருகிறேன்'' ''நீங்களும்தான், அருமையானவரே, நீங்கள் ஒரு திடகாத்திரமான வாலிப மனிதனாக இருந்ததையும் நான் நினைவுகூறுகிறேன்.'' 99ஆனால் இவை எல்லாமும் திரும்ப அளிக்கப்படும். ஒரு காலத்தில் உங்களுடைய அழகிய முகத்தை வரைந்த அவர் அதனு டைய ஓவியத்தை தம்முடைய சிந்தையில் கொண்டிருக்கிறார். அங்கே மறுகரையில் அவர் அதை மறுபடியுமாக வரைவார். அங்கே அது மங்கிப் போகவே போகாது. ஓ தேவனே, அது ஒரு புராணக் கதை போன்ற கனவு அல்ல என்றும் இது உண்மை யானது என்றும் பரிசுத்த ஆவியானவராகிய தேவன் அது உண்மை என்று சாட்சி கொடுக்க இங்கே இருக்கின்றார் என்று மக்கள் அறிந்து கொள்ளுபடிக்குச் செய்யும். அவருடைய வார்த்தை காலங்களினூடாக அதைக் குறித்து உரைத்துள்ளது. நாம் திரும்பிப் பார்த்து, உற்று நோக்கி நம்முடைய வரலாற்றைப் படிப்போமாக. பூமியிலே நல்ல ஒரு காரியத்தைச் செய்த எந்த ஒரு மனிதனும் தேவனுக்கு பயந்த மனிதனாக இருந்தான், நம்முடைய ஜனாதிபதிகளாகிய வாஷிங்டன், லிங்கன் போன் றோர் கூட, யோசுவாக்கள் மற்றும் இன்னும் பிற... மோசேக்கள், உலகத்தின் மகத்தான மனிதர் அதை விசுவாசித்த மனிதராய், தங்களுடைய சாட்சியை முத்திரையிட்டு உயிர்த்தெழுதலுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தனர். அந்த அச்சாரமாகிய அதனு டைய முதல் கனிகளை நாம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நீர் தாமே என்னுடைய ஜெபத்தின் மூலமாக இம்மக்களை தங்களுடைய ஜெபத்தோடு கூட பெற்றுக்கொண்டு ராஜ்யத்துக்குள்ளாக இவர்களை எடுத்தக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கின்றோம். ஆமென். 100தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களிடமாக இரக்கத் தில் ஐசுவரியமுள்ளவராக இருப்பாராக, அவருடைய முகத்தைத் தாமே உங்கள் மீது பிரகாசிக்கச் செய்வாராக, உங்களைக் காத்து, எல்லா பரலோக ஆசீர்வாதங்களுக்குள்ளாக உங்களை ஆசீர்வதிப் பாராக. இப்பொழுது நான் இதை, கொடூரமாக அல்ல, ஆனால் அன்பினாலே இதைக் கூறுகிறேன். அவரை அறியாதிருக்கிறவர் களாகிய உங்களுக்கு, மெதுவாக வெளியே சென்று எங்கேயாவது ஓரத்தில் ஒதுங்கி ''கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்'' என்று நீங்கள் கூறும் வரை உங்கள் தலையணை மிகவும் கடினப்பட்டு இனிமேல் நீங்கள் உறங்க முடியாதபடிக்கு ஆகட்டும், இனிமேல் நீங்கள் உணவு உண்ணாத படிக்கு உங்கள் ஆகாரம் மிகவும் கெட்டுப்போய் துர்நாற்றமாகட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உங்களுக்கு தவறு நேரிடவேண்டும் என்கின்ற விதத்தில் கூறவில்லை, சகோதரனே, சகோதரியே, அது உங்களுடைய நன்மைக்காகவே. அது அந்த விதமாகவே உங்களுக்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே நான் ஜெபிக் கின்றேன். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்முடன் இருப்பாராக. நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்முடன் இருப்பாராக. தம்முடைய ஆலோசனையின் வழிநடத்துதலால், உம்மை தாங்கிப் பிடிப்பாராக, உன் முன் இருக்கும் மரண அலைகளை அடிப்பாராக; நாம் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக... 101இப்பொழுது பழங்கால வழக்கத்தின்படியே நாம் வேறொருவருடன் கைகளைக் குலுக்குவோமாக. (இந்த மூன்று சரணங்கள் பாடப்படுகையில் சகோதரன் பின்ஹாம் மக்களுடன் கைகளைக் குலுக்குகிறார் - ஆசி) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! 102அந்தப் பாடல்களை நாம் பாடுவோமே, உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம்... அநேக வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தப் பாடலையும் கூட நாம் பாடுவதுண்டு. அப்பாடல் இங்கே இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே மண் தரையில் ஒரு பழைய அடுப்பைச் சுற்றி நாம் கைகளைக் இணைத்துப் பிடித்துக் கொண்டு பாடுவோமே. உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? நாம் பாடுவோம்: நாம் சீயோனுக்கு அணிவகுத்துச் செல்கிறோம் அழகிய, அழகிய சீயோனுக்கு; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு ஆயிர வரட அரசாட்சியில் சீயோன் எப்படி இருக்கப் போகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? சீயோனின் மீது ஒரு ஒளி இருக்கும், இரவில் இருக்கின்ற ஒளியைப் போல் பகலின் சீயோனிலிருந்து ஒரு நிழல் இருக்கும். ஏனெனில் அங்கே இரவு என்பது கிடையாது. ஓ, என்னே ! அந்த மலையின், சீயோனின் வயல்களில் ஆயிரம் புனித இனிப்புகள் விளைகின்றன அந்த பரலோக சிங்காசனத்தை நாம் அடையுமுன்னர், அந்த பரலோக சிங்காசனத்தை நாம் அடையுமுன்னர், அல்லது பொன் வீதிகளில் நடக்கையில் அல்லது பொன் வீதிகளில் நடக்கையில் இப்பொழுது எல்லோரும் சேர்ந்து பாடுவோமாக: நாம் சீயோனுக்கு அணிவகுத்துச் செல்கிறோம் அழகிய, அழகிய சீயோனுக்கு; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக் 103அது எனக்கு மிகவும் பிடிக்கும், அது அழகாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த பழங்கால பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமல்லவா? இன்று பாடல்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த துண்டு துண்டாக்கப்பட்ட பாடல்களை விட அந்த பழங்கால பாடல்கள் மிக அருமையானதாக இருக்கின்றதென்று நான் நினைக் கிறேன். நான் அதை மிகவுமாக விரும்புகிறேன். சபையில் ஒரு பழைய பாடலைப் பாடுவேனே, அது உங்களுக்கு நினைவிருக் கிறதா: அறை, அறை, ஆம் அங்கே ஒரு அறை உள்ளது, அங்கே ஊற்றண்டையில் ஓர் அறை உள்ளது. ஓ, என்னே! அந்த அருமையான, பழைய பாடல்கள், அப்பாடல்களை எழுதினவர்கள், அந்த எழுதுகோல் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டது என்று நான் விசுவாசிக் கிறேன். உம்மண்டை தேவனே நான் சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும் என்றுமே உம்மண்டை தேவனே நான் சேர்வதே. 104இருப்பினும், சார்லஸ் வெஸ்லி மற்றும் அந்த மகத்தான ஆக்கியோன்கள், அந்த கவிஞர்கள் இது போன்ற பாடல்களை இயற்றினர். அது அழகானது, அப்பாடல்கள் மிக அருமை யானதாக இருக்கின்றது என்று நான் எண்ணுகிறேன். ஆகவே நாங்கள்... அதை நினைவில் கொண்டுள்ளீர்களா: ஓ பியூலா தேசம், இனிய பியூலா தேசம், உயர்ந்த மலையில் நான் நிற்கையில், கடலை கடந்து அப்புறம் காண்கிறேன், நீர் எனக்கு ஆயத்தப்படுத்தியுள்ள மாளிகைகள் இருப்பதை அங்கே நதியில் முதல் முறையாக கர்த்தருடைய தூதன் தோன்றினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்பொழுது நாம் பாடிக் கொண்டிருந்தோம். புரண்டோடும் யோர்தானின் கரையில் நான் நின்று, என் ஆவலுள்ள பார்வையை செலுத்தினேன், என் சுதந்தரங்கள் இருக்கின்ற அந்த சந்தோஷ, அருமையான கானானை நோக்கி நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்படபோகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 105இந்தப் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கையில், வானத்தி லிருந்து ஒரு சத்தம் கூக்குரலிட்டது. அப்பொழுது அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் சுழன்று கொண்டே கீழே வந்து, ''அவருடைய முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாக அனுப்பப்பட்டது போல இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக யிருக்கும் ஒரு செய்தியை நீ கொண்டிருக்கிறாய்'' என்று கூறினது. அப்பொழுதிலிருந்து அது எங்கு சென்றது என்று பாருங்கள். அது முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அதிலிருந்து அது எங்கே சென்றது என்று பாருங்கள், ஒரு எழுப்புதல் அக்கினியாக உலகம் சுற்றிலும் சென்றது. இப்பொழுது அது அமைதியாக இருப்பதை நாம் காணலாம். காலம் சமீபமாக இருக்கின்றது. இப்பொழுது நம்முடைய தலைகளைக் தாழ்த்துவோம், அறிவிக்கப்பட்ட எல்லா அறிவிப்புகளையும் நினைவில் கொள்வோ மாக. என்றாவது ஒரு நாளிலே வரப்போகின்றார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மந்தையின் பிரதான மேய்ப்பரே, அவரை நாங்கள் காணப்போகும் அந்த மணி நேரத்திற்காக எங்கள் இருதயங்கள் பேராவல் கொண்டுள்ளன. ஒரு நாளிலே நீர் மலையின் மேல் உட்கார்ந்து உம்முடைய ஜனங்களுக்கு நீர் போதித்தீர், ''நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாகவது'' என்று நீர் கூறினீர் (சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சபையார் ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறார்கள்.) .... பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முயைட நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத் திலே செய்யப்படுகிறது போது பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் எங்களுக்கு விரோமாக தப்பிதம் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 106“அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டை பாடின பின்பு புறப் பட்டுப் போனார்கள்” என்று வேதாகமம் கூறுகின்றது. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும், எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை! (எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். அப்பாடல் மிக அழகாக தொனிக்கிறதல்லவா? நாம் அதை இங்கொன்றாக அங்கொன்றாகப் பாடி, அதைப் பாடும்போது மறுபடியுமாக அதை கவனிப்போம். இயேசுவின் நாமத்தில் தாழக் குனிந்து, அவருடைய பாதத்தண்டையில் விழுந்து பணிவோமாக (பாருங்கள்?) நம் பிரயாணம் முடிவுறும்போது பரலரேகத்தில் இராஜாதி ராஜாவாக அவருக்கு முடிசூட்டுவோமாக ஓ, அது அழகான ஒன்றல்லவா? நாம் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக; உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. (பாருங்கள்?) ஓ விலையுயர்ந்த நாமம்! அதை நாம் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும் போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. ஓ விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!) ஓ என்ன இனிமை (ஓ என்ன இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். விலையும் யர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! (எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தும்போது, நம்முடைய மேய்ப்பர் ஜெபம் செய்து கூட்டத்தை முடித்து வைப்பார். சகோதரன் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக.